செவ்வாய், 1 மே, 2012

என் இழிச்சொல் நீக்க வா

கண்கள் இங்கே இமைக்க
மறுக்கின்றன. - உனை காணாமல்
மல்லிகை மணம் வீசி
என் கூந்தல் நெடு நாள் ஆகிறது
மாரி சொரியும் மார்கழியில்
சென்ற நீர் என்னும் திரும்பவில்லை ஏனோ
கூதலும் போய் கோடையும் போய்
கருவடி வேம்பு பூக்கும் வசந்தமும்
பிறந்தும் எனை அடையவில்லையே

என் மணவாளனே உமக்கு ஏதும்....
இல்லை கண்ணகி போல
கதற வைக்காதே என் மனை வந்திடு
அன்னத்தை பிசைந்து
இந்த கைகள் வெகு நாட்கள் ஆகிவிட்டன.
மன்னவன் உமக்கேதும் நிகழ்ந்திருக்க
கூடுமோ என்பதையும் மறுக்கிறது என்
மனம்.....

உமக்காய் வாசலில் நான்
எதிர்பார்த்திருக்க ஊர் என்னை
வசை மொழிபாடுகிறது.
அவர்கள் சுடு மொழிகள் என்னை
கவனில் எறிபட்ட கூழங்கற்களாய்
தாக்குகின்றன.
உள்ளம் மரத்து உம்மில்
ஊடல் வருகிறது.
வசை மொழிபாடும் மாந்தரின்
இழிச் சொல் நீக்க விரைந்து வா
என் தலைவா
எப்போது எனை வந்து சேர்வாய்.

11 கருத்துகள்:

 1. விரைவில் உங்கள் தலைவர் உங்களிடம் சேர வாழ்த்துக்கள் எஸ்தர்...

  பதிலளிநீக்கு
 2. இப்படி நம்மள தவிக்க விடுறதே இவங்க வேலையா .. அருமை சகோ .
  த.ம.3

  பதிலளிநீக்கு
 3. ஹாய் எஸ்தர்,
  கவிதை ஸுப்பெராஆஆஆஆஆஆஆஅ இருக்குப்பாஆ ..கலக்குரிங்கள்

  பதிலளிநீக்கு
 4. உங்களுக்கு ஒரு விருது கொடுத்து இருக்கேன் என்ர பிளாக் வந்து நீங்கள் வாங்கிக் கொள்ளனும் எண்டு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் ......

  பதிலளிநீக்கு
 5. நன்றி ரெவரி அண்ணா தங்கள் கருத்துக்கு

  பதிலளிநீக்கு
 6. நன்றி சசி அக்கா கருத்துக்கு.

  பதிலளிநீக்கு
 7. அடடா மிக்க நன்றி கலை விருது கொடுத்து கலக்கி விட்டீர்கள். ம்ம்ம்ம் போய் பார்க்கிறேன். விருதையும் முழுமனதோடு பெற்றுக் கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 8. ஒரு அரசவைக் கவியாய்த் தெரிகிறதே எஸ்தர்.அருமை.காதலின் சோகம் நிறைத்துக் கிடக்கிறது வரிகளில் !

  பதிலளிநீக்கு
 9. நன்றி ஹேமா அக்கா தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்...

  பதிலளிநீக்கு