சனி, 12 மே, 2012

நடிகர் சந்தானத்திற்கு திருநங்கைகள் சமூகம் கண்டணம்.

லீலை
 தற்போது வளர்ந்துள்ள நகைச்சுவை நடிகர்களுக்குள் நடிகர் சந்தானம் தமிழ் சினிமாவிற்கு இன்றியமையாதவர். புகழின் உச்சியில் இருப்தாலோ என்னவோ அவர் பேச்சுக்கு அளவு கணக்கே கிடையாது. காமெடி என்ற பெயரில் ஒரு சமூகத்தை இழிவுபடுத்துவது மிக வருந்ததக்கது.

ஏன் இதை கூறுகிறேன் என்றால் சமூக அங்கீகாரம் ஓர் நிலையில் இருந்தாலும் திரைப்பட துறையில் திருநங்கைகள் இப்போது முன்னேற்றம் கண்டுள்ளனர். அன்று கோடான கோழி கூவுற வேளையிலிருந்து இன்று ஊரோர புளியமரம் வரை எல்லா திரைப்படங்களும் திருநங்கைகளை கேவலம் செய்யும் விதமாகவே அமைந்தது. இதை முற்றிலும் மாற்றிப் போட்டது ஜீவாவின் தெனாவெட்டு தொடர்ந்து முழு நீளமாக இன்று நோர்வே விருதை வெற்ற நர்த்தகி திரைப்படம் திருநங்கைகளின் உணர்வை உரித்து வைத்தது. தொடர்ந்து விருதகிரி, காஞ்சனா மற்றும் என்னும் வெளிவர இருக்கும் பால் போன்ற திரைப்படங்களின் கதாநாயகிகளாகவே மாறிவிட்ட திருநங்கைகள் சமூகத்தை கேவலம் செய்வது அது புகழ் பெற்ற திருநங்கைகளையே அவமதிப்பது விரும்பத்தகாதது....

நடிகர் சந்தானம் முன்னதாக நடித்த கந்த கோட்டை திரைப் படத்திலும். ஒரு நகைச்சுவை காட்சியில் திருநங்கைகளை கிணடல் செய்திருப்பார் அது என்னவெனில் உங்களுக்கு ராசியான இலக்கம் எது? அந்த இலக்கப்படி வருகிற பெண்ணுமாதிரிதான் நீ கட்டிக்கப் போற பொண்ணுமிருப்பா என்று சந்தானம் சொல்ல ஒவ்வொருவரும் ஒவ்வொரு இலக்கங்களையும் சொல்லி வர்ற பொண்ணுகள பாத்து சந்தானம் கிண்டல் பண்ணிக் கொண்டிருப்பார் அதில ஒருத்தன் எனக்கு ராசியான நம்பர் ஒன்பது என்று சொல்ல சந்தானம் அதுக்கு நீ கூவாகத்துக்குதான் போக வேணும் என்று சொல்லி மிக சாதாரணமாக கிண்டல் செய்திருப்பார்.

அடுத்ததாக தற்போது வெளியாகியிருக்கும் லீலை திரைப்படத்தில் ஒரு பொண்ணப்பாத்து இவளதான் நான் கட்டிக்கப் போறன் என்று தன நண்பனிடம் கூறிவிட்டு அந்த பெண்ணிடம் சென்று என்னை கட்டிக்க சம்மதமா என்று கேட்க அந்த பெண்ணும் சம்மதம் ஆனால் திருமணத்தை ஒரு டி.வி நிகழ்ச்சியில் ஒளிபரப்ப வேண்டும் என்று அந்த பெண் கூறு எந்த டி.வி என்று சந்தானம் கேட்க விஜய் டி.வி என்று அந்த பெண் சுறுவார் அதற்கு சந்தானம் என்ன நிகழ்ச்சி என்று கேட்க அந்த பெண் சற்று குரலை உயர்த்தி இப்படிக்கு ரோஸ் என்று கூறுவார். அதற்கு சந்தானம் குரல் ஒரு மாதிரி இருககவே நினைச்சன் இது அதுதான் என்று என்பார் தொடர்ந்து அந்த திருநங்கையை பார்த்து அண்ணா, அக்கா என்று கூப்பிடுவார். தொடர்ந்து கூவாகம் பற்றியும் சில விஷம சொற்பிரயோகங்களையும் பயன் படுத்தியிருப்பார்.

இத்திரைப்படத்தின் இயக்குனர் அன்றுவிற்கு ஒரு வேண்டு கோள் உங்களுக்கும் திருநங்கை யாருக்கும் தனிப்பட்ட விவாதங்கள் இருந்தால் அதை மீடியா வரை கொண்டு வருவதற்கு காரணம் என்ன? இதெல்லாம் போக திருநங்கை ரோஸ் மேல் உங்களுக்கு என்ன கோபதாபமோ? திரு சந்தானம் அவர்களே இது உங்களுக்கும்தான். அவரை தனிப்பட்ட விதத்தில் குத்தி காட்டியது தனி மனித உரிமை மீறல். இதை நியாயம் கூற உங்களால் முடியாது.

இதற்காக இப்படி குழுவினருக்கும், தணிக்க வேண்டியவைகளை தணிக்காமல் , கண்ட கண்ட காட்சிகளையும் உலாவ விடும் தணிக்கை குழுவிற்கும் திருநங்கைகயர் கண்டனம் தெரிவித்து கொள்கின்றனர்.

11 கருத்துகள்:

 1. அதைக் கண்டு ரசித்து கைதட்டத்தான் கூட்டமே தவிர வருத்தப்பட்டு கண்டனம் தெரிவிக்க இல்லை.. வருத்தமாகத்தான் இருக்கிறது. இப்பதிவின் மூலம் நானும் எனது கண்டனத்தை சொல்லிக் கொள்கிறேன்..

  வலைப்பூ பெயர் மாறியிருக்கிறது சிறக்க வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
 2. திருநங்கைகள் சமூகத்தை கேவலம் செய்வது அது புகழ் பெற்ற திருநங்கைகளையே அவமதிப்பது விரும்ப தக்கது.

  -இந்த வரிகளின் அர்த்தம் தவறாக உள்ளது. விரும்பத் தகாதது என்று மாற்றிவிடு எஸ்தர்! மற்றவர் மனம் புண்படும்படி செய்வது நகைச்சுவையாகாது. உனது தளம் மூலம் என் வன்மையான கண்டனத்தை நானும் பதிவு செய்கிறேன்மா!

  பதிலளிநீக்கு
 3. தவிர்க்க வேண்டிய கருத்துக்கள்...

  புதிய தளப்பெயர் நல்லா இருக்கு.

  பதிலளிநீக்கு
 4. Edhukkunga kindal pannanum ? Avangalum nammai pol manidhargal thaane.....avanga pakkathule utkaaruvadhu kooda asingamaana vishayamaa palar ninaikkaraanga.

  பதிலளிநீக்கு
 5. நன்றி மதுமதி அண்ணா என்னுடன் இணைந்து கண்டனம் தெரிவித்ததற்கு..

  பதிலளிநீக்கு
 6. ஓஓஓஓ மன்னியுங்கள் கணேஸ் அங்கிள் என் கவனயீன பிழை. இதோ மாற்றி விடுகிறேன். எழுத்து பிழையை சுட்டி காட்டியதற்கும், என்னுடன் இணைந்து கண்டனம் தெரிவித்ததற்கும் நன்றிகள் பல

  பதிலளிநீக்கு
 7. கண்டிக்கக் வேண்டிய செய்திதான் சேர்ந்தே கண்டிப்போம்

  பதிலளிநீக்கு
 8. ’என் இதயம் பேசுகிறது’அருமை அழகு தோழி !

  ஏன்தான் அடுத்தவர்கள் மனதைப் புண்படுத்துகிறார்களோ தெரியவில்லை.சினிமாவில் மட்டுமல்ல பொதுவாகவே எம் சமூகத்தின் ஒரு குணமாகவே இருக்கிறது.திருந்தச் சரியான கஸ்டம் எஸ்தர்.எதையும் கணக்கெடுக்காதேங்கோ.உங்கள் வழியில் முன்னேறுங்கோ !

  பதிலளிநீக்கு
 9. நன்றி மாலதி அக்கா இணைந்து கண்டித்தமைக்கு....

  பதிலளிநீக்கு
 10. ஹேமா அக்கா எதையும் கணக்கெடுக்காமல் இருந்தால் கொட்ட கொட்ட குனியும் முட்டாளாகி விடுவோம். சிலவற்றை கணக்கில் எடுத்தே ஆக வேண்டும். நன்றி அக்கா தங்கள் கருத்துக்கு...

  பதிலளிநீக்கு