செவ்வாய், 15 மே, 2012

இப்போது பிச்சை பாத்திரம் ஏந்துகிறேன்.

ஆஆ எங்கும் பச்சை புல் வெளிகள்
மதுரம் சிந்தும் நந்த வனங்கள்
சல சலவென ஓடும் நீரோடைகள்
இயற்கை அன்னை முழுப் பாசத்தையும்
எங்கள் ஊரின் மேல் கா்டுகிறாள்

இப்படி அமைந்த ஊரின் யமிந்தார்
மகளாக வரம் பெற்று பிறந்தேன்.
முன்னான்காம் வயதில் குத்த வைச்சேன்
சீரும் சிறப்பும் பெற்று
யாதொன்றிற்கும் குறைவில்லாமல்
வாழ்ந்தேன்.

எத்தனை காதல் வினாக்கள்
என் காதில் கேட்டன.- அத்தனைக்கும்
இல்லையென்று கூறி
பெற்றாரின் தன் மானம் காத்தேன்
சிந்தை தெளிந்த பெற்றாராரோ - எனக்கும்
பக்கத்துாரில் மணம் செய்து வைத்தனர்

அழகாய் தொடங்கியது எம் தாம்பத்தியம்
அதன் பரிசாக யாருக்கும் யார் போட்டி
என்று இல்லாமல்
இவ்விரெண்டு புதல்வர் புதல்வியர்
கிடைத்தனர்.
அழகுடனும் அறிவுடனும் ஊர் மெச்சும்
வகையில் வளர்த்தேன்.

கண்டங்கள் பல கடந்து படிக்கவும் அனுப்பினே.
மீண்டும் வரும் வேளை அழகான மங்கையரை
திருமணமும் முடித்து வைத்தேன
எங்களுக்கோ வயதாகிறது - என்
கணவர் படுத்த படுக்கை ஆனார்
அதே ஆண்டில் மரணமும் எய்தினார்.

அன்று முதல் வீட்டில் ஓர் மூலையில்
யடமென ஆனேன்.
நாய்க்கு தருவது பித்தளை தட்டில் சாப்பாடு
வாய் வெடித்த கோப்பையில் தண்ணீர்
பொக்கிஷங்கள் யாவும் தங்கள் நாமமாகட்டும்
என்று அவர்கள் கேட்கவே
எல்லோரும் பகிர்ந்தளித்தேன்

மறுநாளே தடி கொண்டு விரட்டினர்
எல்லாரும் சேர்ந்து
நான் பாலுாட்டி சீராட்டி வளர்த்ததன்
பயன் பாரீரோ
நெறி கெட்ட இந்த மானிடரின்
தீசெயல் கேளீரோ
யமிந்தார் மகளான நான் இப்போது
பிச்சை பாத்திரம் ஏந்துகிறேன்....

13 கருத்துகள்:

 1. பெத்தவ்ஙகளைப் புறக்கணிச்சு நடுத்தெருவுல தவிக்க விடற பிள்ளைங்க எவ்வளவு பேர் இருக்காங்க... படிக்கறப்பல்லாம் மனசை வேதனை கவ்விக்குது எஸ்தர்! பாவம்... ஒரு ஜமீன்தார் மகள் பிச்சையெடுக்கும் அவலத்தை அழகான வரிகள்ல படம் பிடிச்சுக் காட்டிட்டம்மா. நல்லாருக்கு.

  பதிலளிநீக்கு
 2. வணக்கம் உறவே
  உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
  http://www.valaiyakam.com/

  முகநூல் பயணர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.

  5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.

  ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்க: http://www.valaiyakam.com/page.php?page=votetools
  நன்றி

  வலையகம்

  பதிலளிநீக்கு
 3. முதியவர்கள் இப்படி பஸ் ஸ்டாண்டில் பிச்சையெடுப்பதைப் பார்க்கும போதெல்லாம் பாவமாக இருக்கும். இரங்கத் தக்க நிலையுடைய அவர்களின் பின்னணிக் கதை ஒன்றை கவிதையாய்ப் படிக்கையில் மனம் வலிக்கிறதும்மா எஸ்தர்.

  பதிலளிநீக்கு
 4. மனதை சுடும் கவிதை எஸ்தர்...

  பதிலளிநீக்கு
 5. நமக்கும் இதே நிலைமை வரும் என்று எந்த பிள்ளையும் சிந்திப்பதில்லை

  பதிலளிநீக்கு
 6. நன்றி நீரூ உங்கள் கருத்து நியாயமானதே

  பதிலளிநீக்கு
 7. நன்றி ரெவரி அண்ணா
  நன்றி நலவன்பன் அண்ணா...ட.

  பதிலளிநீக்கு
 8. பெற்றவர்களை மதிப்போம் எஸ்தர்.மனதைக் கலங்க வைக்கிறது வரிகள் !

  பதிலளிநீக்கு
 9. இதுதான் உலகம்.
  உண்மையாகவே இந்தப் பாட்டியிடம் கேட்டிருந்தால் இது போலக் கதை ஒன்றுதான் சொல்லி இருப்பாள். அருமையான எழுத்து நடை எஸ்தர். வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு