வியாழன், 17 மே, 2012

முள்ளி வாய்க்கால் இனபடுகொலையின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள்....


கடல் அலையே ஒரு நிமிடம் நில்லு
வீர மரணம் கொண்ட தமிழ் மானிடர்
புகழ் சொல்லு...............................................

நெஞ்சை கணக்க வைத்த முள்ளிவாய்க்கால் இனப்படு கொலையின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம். இன்று. சோகங்கள் நிழலாக தொடரும் எம் இனம் காவு கொள்ளப்பட்ட தினம் இன்று.

சிதறி ஓடிய நம் தமிழ் மக்களை, ஆயுதம் இல்லாது நிர்கதியாக நின்ற எம் உடன் பிறப்புக்களை, ஈவிரக்கமின்றி செந்தணலில் இட்டு சென்றாரே அந்த நெறி கெட்ட மானிடர். யுத்த பூமியாக இருந்த எம் ஈழம் இன்று பிண வாடை வீசும் மரண பூமியானதே. சுதந்திர தாகம் மேலோங்கி விக்கலும் எடுத்து இன்று மரணத்தையும் ஜனனித்து விட்டோம்.

ஓஓஓஓஓ என் கண்னே இன்று உன்னில் நீரில்லை அழுதழுதே எல்லாம் வற்றிப்போயிற்று. ஆஆஆஆ என் இதயமே என் சொல்வேன் அந்த இரத்த ஆற்றை. பிணங்களின் மேல் நடந்த அவலம் அதுவும் எம் இன மக்களில் உடல்களின் மேல் நாமே நடந்த அவலம் வேறெந்த எந்த இனத்திற்கும் வேண்டாமே... எம் பெண்களின் தாய்மையை எம் அனுமதியின்றி அனுபவித்தாரே தமிழ் போற்றும் எம் தமிழ் பெண்ணின் மார்புகளை அந்த வெறி கொண்ட சிங்கள நாய்கள் சிதைத்தனரே. ஓஓஓ அதற்கு எம் சிறுமியரும் இலக்கானாரே.

எத்தனை துன்பங்கள் கொண்டோம். எம் ஈழத்து வாழ்வில். இரத்த ஆற்றில் குளித்தோமே எம் இனத்தை மீட்டெடுக்க. புத்தகம் துாக்க வேண்டிய எம் இளஞர்கள் ஆயுதம் தாங்கினாரே ஏன்? எம் இனத்தை   காப்பாற்ற.

முள்ளிவாயக்கால் பிணநாற்றமே இன்னும் மறையாத மரண பூமியது. அங்கே இறந்த எம் உறவுகளுக்கு நாம் அஞ்ஞலி செலுத்தும் இந்த வேளை அங்கே இலங்கை அரசு வெற்றி விழா கொண்டாட்டமாக பட்டாசு கொளுத்தி துப்பாக்கி வெடித்து கொண்டாடுகிறார்கள்.

இருக்கட்டும் இறந்த எம் தமிழ் உடன் பிறப்புக்களுக்கு எம் அ்ஞ்ஞலியை செலுத்துவோம்.. வாழ்க தமிழ் வளர்க தமிழ்.......

அன்பர்களே இதோ முள்ளிவாய்க்கால் நினைவுக் காணொளி உங்களுக்காக....................

8 கருத்துகள்:

 1. முள்ளி வாய்க்கால் முடிவல்ல!-ஓர்
  முடிவும் வருமே நாள்செல்ல
  எள்ளி ஏளனம் செய்வாரே-அந்த
  ஈனர்கள் இறுதியில் வீழ்வாரே

  உயிர் நீத்த வீர மறவர்களுக்கு
  வணக்கம்!அஞ்சலி!

  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 2. வலிகள் மிகுந்த உணர்வுகளைச் சொல்லியிருக்கிறீங்க விடியல் தேடியவர்கள் வீழ்ந்து கிடக்கின்றோம் விழிக்குது இல்லை சர்வதேசம்!!!

  பதிலளிநீக்கு
 3. முள்ளிவாய்க்கால் முடிவல்ல தோழி.ஆரம்பம்.அஸ்திவாரம் போட்டுப்போன மறவர்கள் வழி தொடர்வோம்.காலம் போகும்தான்.ஆனால் நிச்சயம் ஒருநாள் எமக்கான பாதை திறக்கும்.நம்புவோம் !

  பதிலளிநீக்கு
 4. மரித்தோருக்கு என் கண்ணீர் அஞ்சலி...

  பதிலளிநீக்கு
 5. நன்றி புலவர் சா இராமாநுசம் ஜயா இது முடிவல்ல ஆரம்பமேமமம

  பதிலளிநீக்கு
 6. நன்றி நேசா அண்ணா. விளிக்கட்டும் சர்வ தேசம்...

  பதிலளிநீக்கு
 7. நன்றி ஹேமா இது முடிவல்ல ஆரம்பமே.....

  பதிலளிநீக்கு
 8. நன்றி ரெவரி அண்ணா உங்களோடு எல்லா தமிழர்களும் இணைககிறோம்....

  பதிலளிநீக்கு