ஞாயிறு, 20 மே, 2012

என்றும் தொடரும் உன் நினைவுகள்...

உன் பிரிவை சந்தித்து
ஜந்தாண்டுகள் ஓடோடி விட்டன..
ஆனால் உன் நினைவுகள் மட்டும்
என்னை தொடர்ந்து கொண்டேதான்
இருக்கின்றன.

மதிக்கும் ஓர் நாள் நிம்மதி உண்டு
எனக்கு என்றும் அது இல்லை
செந்தணலில் இட்டு அழிக்க
நினைவுகள் காகிதங்கள் அல்ல
கல்லறையில் துயில் கொள்ளும்
நொடி வரையும் உன் நினைவுகள்
என்னோடுதான்

உன்னில் அதீத ப்ரியம்
என்பதலா என்னை அதீதமாய்
அழவைக்கிறாய்.
இறந்த என் நினைவுகளை - மீண்டும்
கருவாக்க ஆசைகொள்கிறேன்
உன் இதயமெனும் கருவறைக்குள்.

உன்னால் ஆன உன் நினைவுகள்
என் மரண வாசலிலும்
என்றும் என்னை விட்டு நீங்காதவை
தனிமையில் நானிருந்தும் தனிக்கவில்லை
ஏனெனில் உன் நினைவுகள் என்னோடு

2 கருத்துகள்:

 1. /////இறந்த என் நினைவுகளை - மீண்டும்
  கருவாக்க ஆசைகொள்கிறேன்
  உன் இதயமெனும் கருவறைக்குள்.////

  அருமையான வரிகள் தல ..!

  பதிலளிநீக்கு
 2. என்னைப்போலவே உங்களை அழுத்தும் எண்ணங்களை எழுத்துகளாக்குகிறீர்கள் எஸ்தர்.இதுதான் நல்ல வழி !

  பதிலளிநீக்கு