சனி, 12 மே, 2012

உயிர் கொண்ட நாள் வரை உனை மறவேன் தாயே...

தேனினும் தேனடையிலும்
மிகவும் மதுரமானது
தாய் பாசம் - அதற்கு நிகர்
வேறென்ன நான் கூற

எமை உலகிற்கு ஈய
இரண்டாம் முறை
ஜென்மம் எடுத்தாய்
பிரசவத்தின் போது

தெய்வத்தை இது வரை
கண்டதில்லை - நான்
நீயே எம் கண் கண்ட
தெய்வம் தாயே

நீயிருக்கும் ஒவ்வொரு
இல்லமும் கோவிலம்மா
நீயில்லா இல்லமோர்
பாலை நிலமம்மா

இரத்தத்தை பாலாக்கி
எமக்கு தந்தாய் - உனைப் போல
வள்ளல் இவ் உலகில்
இல்லை தாயம்மா

உன் ஊண் சதை உருக்கி
எமக்கு உணவளித்தாய்
நான் பசியாறிட - நீ
பட்டினி கிடந்தாய்

உலகின் முடிவு - என்
கண் முன் வந்தாலும்
என் உயிர் கொண்ட நாள் வரை
உனை மறவேன் தாயே..

என் அனைத்து தோழமைகளுக்கும் என் இனிய அன்னையர் தின வாழ்த்தை கூறி நிற்கிறேன். அத்தோடு உங்கள் அம்மாவுக்கு என் வாழ்த்துக்கள்.

8 கருத்துகள்:

 1. அனைத்து தோழர்களுக்கும் அழகான ஒரு கவிதையை வழங்கி அன்னையர் தினப் பரிசு அளித்ததோடு, அம்மாவுக்கும் வாழ்த்துக்கள் கூறிய பாங்கு மனதைத் தொட்டது எஸ்தர். நன்றி. உங்கள் அம்மாவுக்கும், அனைத்துத் தாய்மார்களுக்கும் என் இனிய அன்னையர்தின நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 2. நீயிருக்கும் இல்லம் கோவிலம்மா. நீயில்லா நிலம் பா‌லை நிலமம்மா... கவிதை சூப்பரா இருக்கு எஸ்தர். என்னோட அன்னையர்தின நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 3. நன்றி கணேஷ் அங்கிள் உங்களுக்கும் எனது வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 4. நன்றி நிரூ உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.....

  பதிலளிநீக்கு
 5. கவிதை அருமையம்மா..உன அன்னைக்கு எனது வாழ்த்துக்களைச் சொல்லிவிடு...

  பதிலளிநீக்கு
 6. அம்மாவுக்கான கவிதை உருக்கத்தோடு வந்து எங்களையும் உருக வைத்தது எஸ்தர்.வாழ்த்துகள் !

  பதிலளிநீக்கு
 7. நிச்சயம் சொல்கிறேன் மது அண்ணா உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 8. நன்றி ஹேமா அக்கா உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு