செவ்வாய், 22 மே, 2012

கல்கி அக்காவும் நானும்


நர்த்தகி திரைப் படம் மூலமாக கதாநாயகியாக திரையுலகில் கால் பதித்தவர் நடிகை கல்கி. அது மட்டுமல்லாது அவர் ஓர் திருநங்கைகள் சமூக நல பணியாளர். ஒரு வழியாக அவரிடம் தொலைபேசியில் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. இந்த பத்து கேள்விகளும் கேட்டு முடிக்க அப்பப்பா இரண்டு நாட்களாகி விட்டன தெரியுமா? முதலில் சுக நலன்களை விசாரித்து விட்டு அப்புறமா செவ்விக்கு சென்றோம்.

01- உங்கள் சகோதரி அமைப்பு ஏன் எதற்காக?

ஆதரவற்ற, உதவி இழந்த, குடும்பத்தினரால் கைவிடப்பட்ட, பாடசாசைகளிலும், அலுவலகங்களிலும் புறக்கணிக்கப்படும் திருநங்கைகளை பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் முன்னேற்றுவதற்காக..

02- நர்த்தகி பட வாய்ப்பு பற்றி கூறுங்கள்.

என் வாழ்க்கையில் நடந்த மிக முக்கியமான நிகழ்வுகளில் இதுவும் ஒன்று. என்னை ஓர் மிக சிறந்த நடிகையாக உலகிற்கு வெளிபடுத்த இயக்குனர் விஜயபத்மா மூலமாக கிடைக்கப்பெற்ற ஓர் வாய்ப்பு. இது கடவுள் தந்த வரம் என்றே கூறமுடியும்.

03- ஓர் நடிகையாக கல்கி எப்படி?

ஓர் சவாலான கதாபாத்திரம், நடிப்பு திறனை வெளி கொணர கூடிய பாத்திரம், கல்கி எவ்வளவு நேரம் திரையில் தோன்றுவேன் என்பது முக்கியமல்ல 05 நிமிடங்கள் என்றாலும் மக்கள் மனதில் இடம் பிடிக்க கூடிய கதாபாத்திரமாக அமைந்தால் நல்லது. நான் கடவுள் படத்தில் பூஜாவின் பாத்திரம் போல் இருந்தால் எனக்கு பிடிக்கும்.

04- இப்போது நடிக்கும் திரைப் படங்கள் என்ன?

ஓர் மலையாள படத்தில் கதா நாயகியாக நடிக்க ஒப்பந்தமாளியுள்ளேன். கதையில் மாற்றம் ஏற்பட்டதால் படப்பிடிப்பு சற்று தாமதமாகியுள்ளது.பிரெஞ்சு மொழி பட வாய்ப்பு ஒன்று வந்தது.ஆனால் மறுத்துவிட்டேன் காரணம் இந்தியாவை விட்டு 01 வருடகாலம் பிரான்ஸில் தங்கியிருந்து படத்தை முடித்து கொடுக்க வேண்டிய சூழல்..

05- உலகம் திருநங்கைகளை திருநங்கை எனும் போர்வைக்குள் தள்ளிவிட்டது. ஆனால் திருநங்கைகள் யாரும் திருநங்கையாக இருக்க ஆசைப்படவில்லை ஒரு பெண்ணாக வாழவே ஆசைப்படுகிறார்கள்.  அவர்கள் பெண் உலகை சார்ந்தவர்கள். இது பற்றி உஙகள் கருத்து.

கலாசாரம், குடும்பம், என்று திருநங்கைகள் கட்டுப்படுத்தப்பட்டு கைவிலங்கிடப்பட்டிருக்கிறார்கள். பெண்களும் அவ்வாறே இதனால் அவர்கள் திறமைகள் முயர்ச்சிகள் எல்லாம் கிழ் விழுந்து போகும் நிலை கண் கூடு. உலகம் திருநங்கைகளை திருநங்கை எனும் போர்வைக்குள் வைத்திருப்பது ஆணாதிக்க சமூகத்தில் பெண்களின் நிலை என்ன என்பதை காட்டுகிறது.

06- ஏதாவது தொலைக் காட்சி தொடர்கள் மூலமாக திருநங்கைகள் பிரச்சினைகளை சொல்ல முயர்ச்சிக்கலாமே?..

முயர்ச்சிக்கலாம் ஆனால் நிறுவனங்கள் தயாரிக்க முன்வருவது மிக கடினம்.

07- தமிழ் நாட்டு திருநங்கைகளிடத்து பொதுவாக படித்த திருநங்கைகளிடத்து பல விடயங்களிலில் ஒன்றுக் கொன்று முரண் பட்ட கருந்துக்கள் நிலவுகின்றன. இந்நிலை ஏன?

ஈகோ நான் பெரிசா நீ பெரிசா என்கிற பொறாமைதான்.

08- உங்களுக்கு இலங்கை திருநங்கைகளை பிடிக்குமா?

இலங்கை திருநங்கைகள் மட்டுமல்ல எல்லா தமிழ் திருநங்கைகளையும் பிடிக்கும் தமிழ் திருநங்கைகள் என்பதை விட திருநங்கைகள் எல்லாரையும் பிடிக்கும் பொதுவாக தமிழ் திருநங்கைகளை அதிகம் பிடிக்கும்...

09- உங்கள் வருங்கால கணவர் குறித்து கூறுங்களேன்,

என் கணவன் காதலன் எல்லாம் என் மடிகணினிதான் (லாப் டாப்). என்னோடு எந்நேரமும் இருந்து எனக்காக உழைக்கும் என் கணினிதான் என் கணவன் காதலன் எல்லாம். நான் பெரிய மனுஷியாக உருவானதற்கு என் லாப் டாப்பும் ஒரு காரணம் அதனால் என் கணவன் என் லாப் டாப்தான்.

அவருக்கு கொஞ்ஞம் உடம்பு சரியில்ல டாக்டர் வந்து கொண்டு போய்ட்டார். எப்பிடியும் இன்னைக்கு வந்திடுவார். (புரியலயா அதானப்பா லாப் டாப் பழுதாகிட்டுதாம் திருத்திறத்துக்கு கொண்டு போய்ட்டாங்களாம்.plz pray 4 him )

10- உங்களுக்கு எஸ்தர் சபியை பிடிக்குமா?

(ஒர் புன்சிரிப்புடன்) எஸ்தரை எனக்குப் பிடிக்கும் இலங்கையில் இருந்து கொண்டு திருநங்கைகள் விடயத்தில் கவனப்படுபவள். எஸ்தரை இது வரைக்கும் பார்த்தது கிடையாது ஆனாலும் எஸ்தரை பிடிக்கும். அவளின் முற்போக்குதனமான எழுத்தும் பிடிக்கும்.


அப்பப்பா ஒரு வழியா முடிச்சாச்சு. நன்றி கல்கி அக்கா என்னை பிடிக்கும் என்று கூறியதற்காக.

22 கருத்துகள்:

 1. உங்கள் திருநஙகைகள் மீதான் ஆர்வம் ஏன் எஸ்தர் ? நிறைய எழுதுகிறீர்கள் அதனால் கேட்டேன்

  பதிலளிநீக்கு
 2. எஸ்தரை கல்கி அவர்களுக்கு மட்டுமா பிடிக்கும். என்னைவிட நல்லா எழுதற அவளை எனக்கும் ரொம்ப ரொம்பப் பிடிக்கும்...

  பதிலளிநீக்கு
 3. சிறந்த பதிவு அவர்களுக்கும் ஒரு உள்ளம் உண்டு அவர்களும் மனிதப் பிறவிதான் பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
 4. சில நேரங்களில் சில இனங்கள் ஒடுக்கப்பட்டுவிடுகின்றன, எல்லோருக்கும் உணர்வுகள் உண்டு அவற்றை காயப்படுத்தக்கூடாது என்று ஒவ்வொருவரும் நினைக்க ஆரம்பித்தால் எல்லோருக்கும் எல்லா உரிமைகளும் கிடைத்துவிடும் ..!

  பதிலளிநீக்கு
 5. தளராத நம்பிக்கை.இதுதான் நிச்சயம் வாழ்வை உயர்வாக்கும் எஸ்தர்.உங்கள் கல்கி அக்காவுக்கும் உங்களுக்கும்கூட வாழ்த்துகள் !

  பதிலளிநீக்கு
 6. கடைசி கேள்வி யாரும் கேட்காதது..-:)

  பதிலளிநீக்கு
 7. சகோதரி கல்கி அவர்களிடம் கேட்ட கேள்விகளும்
  அதற்கான முறைமையான பதில்களும் நன்று சகோதரி...
  வெள்ளித் திரையிலான அவரின் பயணம்
  நீண்டு நிலைத்திருக்கட்டும்...

  பதிலளிநீக்கு
 8. மனிதரை மனிதரை மனிதர் ஒதுக்க மனிதர்க்கு உரிமையில்லை ஒதுக்கப்படவும் உரிமை இல்லை அவ்வாறு ஒதுக்கப்படும் சமூகத்தில் உள்ள ஒரு விளிப்புணர்ச்சிதான் அவர்களை பற்றி எழுத காரணம் தமிழாவணன் அண்ணா..

  பதிலளிநீக்கு
 9. நிரூவுக்கு என்னை பிடிக்குதோ இல்லையோ ஆனால் நிரூவை எனக்கு பிடிக்கும்...

  பதிலளிநீக்கு
 10. எல்லோருக்கும் உணர்வுகள் உண்டு அவற்றை காயப்படுத்தக்கூடாது என்று ஒவ்வொருவரும் நினைக்க ஆரம்பித்தால் எல்லோருக்கும் எல்லா உரிமைகளும் கிடைத்துவிடும் ..!

  இதை நான் வரவேற்கிறேன் வரலாற்று சுவடுகள் அண்ணா..

  பதிலளிநீக்கு
 11. hahahahaha ஆமாம் ரெவி அண்ணா இது யாரும் கேட்காத கேள்விதான்..

  பதிலளிநீக்கு
 12. நன்றி மகேந்திரன் அங்கிள் வெள்ளி திரையில் அவர் பயணிப்பார் என நானும் நம்புகிறேன்.

  பதிலளிநீக்கு
 13. லேட்டா கவனிச்சிருக்கேன் எஸ்தர். ஸாரி. ஒரு திருநங்கை சற்றே கவனிக்கப்படும், மதிக்கப்படும் நிலைககு வர வேண்டுமென்றால் அதற்கு விலையாக பல கஷ்டங்களை சந்தித்து போராடித்தான் வர வேண்டியிருக்கிறது. கல்கி போன்றவர்கள் அதற்கு முன்னுதாரணம். அவரது பேட்டியும் கருத்துக்களும் அருமை. கடைசிக் கேள்விக்கு மட்டும் கல்கியோடு சேர்த்து என்னுடைய பதிலும்: ரொம்பப் பிடிக்கும்!

  பதிலளிநீக்கு
 14. நிச்யம் கணேஷ் அங்கிள் கல்கி அக்கா மாதிரியான சமூக நல பணியாளர் திருநங்கையர் குழுமத்துக்கு கிடைத்த பெரும் பரிசு.

  உங்களையும் அது போல உங்கள் எழுத்தையும் நான் மிக நேசிப்பவள் அங்கிள்... என்னை பிடிக்கும் என்று சொன்னீர்களே மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 15. கல்கியின் காத்திரமான பகிர்வுக்கு வாழ்த்துக்கள் எனக்கும் எஸ்தரின் எழுத்துக்கள் பிடிக்கும் மாற்றங்களை மனதில் பட்டதை பதிவு செய்வதால்! இப்படி எல்லாம் கேள்வி கேட்க எனக்கு ஜோசனை வரவில்லையே ?? ம்ம்ம் 

  பதிலளிநீக்கு
 16. நன்றி நேசா அண்ணா உங்களுக்கும் எழுத்துகள் பிடித்திருக்கிறதே ம்ம்ம்ம்மம்ம்ம்ம்........

  பதிலளிநீக்கு
 17. எனக்கும் என் தங்கையை மிகவும் பிடிக்கும் .

  பதிலளிநீக்கு
 18. கேள்வியும் பதிலும் மனித நேயத்தின் வெளிப்பாடுகளாக வந்துள்ளன வாழ்த்துக்கள் எஸ்தர் சபி

  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 19. அக்காவுக்கும்,தங்கைக்கும் இடையே கேட்க பத்து கேள்விகள் தான் இருந்ததா?

  பதிலளிநீக்கு
 20. இல்லை எழில் அண்ணா இவை பொதுவானவையே தனிப்பட்ட விடயங்கள் ஏராளம் பேசினோம். பேசுகிறோம்.... பேசிக் கொண்டிருப்போம்....

  பதிலளிநீக்கு