வியாழன், 31 மே, 2012

மரியாதை கொடுத்து வாங்க வேண்டிய விடயமா??மனிதாராய் பிறந்த ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டிய ஒரு அம்சம் மரியாதை. அது சுயமரியாதையாயினும் சரி அல்லது பிற மரியாதையாயினும் சரி எல்லோர்கும் உலகின் இருப்புக்கும் சமூக அந்தஸ்துக்கும் முக்கியமானதாகும்.

சிறியவர்கள் என்றால் பெரியவர்களுக்கு மரியாதை செலுத்துவது சாதாரணம். பெரியவர்கள் சிறியவர்களுக்கு மரியாதை செலுத்த வேண்டுமா?? அப்படியொரு கேள்வியுள்ளது. இதன் விடையை நான் கூறுகிறேன். யார் யாருக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்பது முக்கியமானது அல்ல அவரவர் நடத்தையின் பயனே மரியாதை. எம் நடத்தைகளே நமக்கு மற்றவர்கள் கொடுக்கும் மரியாதைக்கு சான்று. அது சிறியவராயினும் சரி பெரியவராயினும் சரி.

சர்வாதிக்கவாதி கிட்லருக்கும் அவன் வீரர்கள் மரியாதை செலுத்தினர் இது உண்மையாக அவன் நடத்தைக்கு கொடுக்கப்பட்ட மரியாதைதான். அது அவனின் சர்வாதிக்கம் எனும் நடத்தைக்கு பயந்து படை வீரர்களால் கொடுக்கப்பட்ட மரியாதை. இதை மரியாதை என்பதை விட பயத்தினால் உண்டான உணர்வு என்று கூறலாம்.

பெரியவர்கள் பொதுவாக சிறியவர்கள் தமக்கு மரியாதை செய்ய வேண்டும் என விரும்புவர். ஆனால் அப் பெரியவர் எப்படிப்பட்டவர் என்பதைதான் சமூகம் பார்க்கும். அவர் ஓர் குடி காரனாகவோ அல்லது உலகத்தால் வெறுக்கப்படும் தீய செயல்களை செய்பவராக இருந்தாலோ அவர் எப்படிப்பட்ட இடத்திலிருந்தாலும் சமூகம் அவர்ரை மதிக்காது.

இதே சிறியவர்கள் சமூக நல பணிகளிலும், பிறர்க்கு உதவும் சிறந்த விடயங்களிலும் கவனம் செலுத்தும் போது பெரியராயினும் சரி யாராக இருந்தாலும் அவர்களுக்கு மரியாதை செலுத்த முன்வருவர்.


மரியாதை கொடுத்து வாங்க வேண்டிய விடயம் கிடையாது. எம் நடத்தைக்கு உலகம் தரும் அன்பு பரிசு. இதை தக்க வைத்து கொள்வது அவசியம். உலகில் நல்லவர் என்று பெயர்வாங்க போராட வேண்டும் அதே உலகில் கெட்டவர் என பெயர் வாங்க ஒரு நொடி போதும்.

எது என்னவாக இருந்தாலும் எமக்கான சுயமரியாதையை இழப்போமெனில் இவிவுலகில் வாழ்ந்து பயனேது. நன்னடத்தை மிக்க மானிடராய் இவ்வுகிற்கு வாழ்வோம். உலகு நமக்கு என்ன செய்தது என்பதனை விடுத்து நாம் உலகிற்கு என்ன செய்ய போகிறோம் என்பதனை சிந்திப்போம் செயற்படுவோம் உலகில் மரியாதைக்குரிய மானிடராய் வாழ்வோம்.

அன்புடன் -

33 கருத்துகள்:

 1. நல்ல கருத்து சொல்லியிருக்கிறீர்கள் எஸ்தர். அருமை.

  பதிலளிநீக்கு
 2. நன்னடத்தையோட தன்னம்பிக்கையோட வாழ்வோம் எஸ்தர். மரியாதை தானாகக் கிடைக்கும். நல்லாச் சொல்லியிருக்கம்மா. சூப்பர்.

  பதிலளிநீக்கு
 3. ஒருவரின் நடத்தை,வாழ்கின்ற முறை, இவையே மரியாதையைத் தீர்மானிக்கின்றன.மிகச் சரியாக ச் சொன்னீர்கள்.வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 4. ஆமாங்க! மரியாதை ரொம்ம முக்கியமுங்க! மரியாதை எல்லாருக்கும் கொடுக்கனுங்க!

  பதிலளிநீக்கு
 5. நன்னடத்தையுடன் நற்பண்புகள் கைகொண்டால்
  நல்வாழ்வு ஏகிடலாம்..

  பதிலளிநீக்கு
 6. நல்ல மரியாதையான பதிவு எஸ்தர்..

  ஒரே தலைவர் சிலருக்கு ஹிட்லராக தெரிவார்...

  ஹிட்லர் கூட உலகின் 99 சதவீத தலைவர்களை விட திறமைசாலி தான்...

  சில நேரங்களில் பயம் கலந்த மரியாதை தப்பில்லை தானே...

  அந்த ஒரே காரணத்தால் எனக்கு ஹிட்லரையும் பிடிக்கும்..ஜெவையும் பிடிக்கும்...

  பதிலளிநீக்கு
 7. கருத்துரையிட்ட சனைத்து சகோதரர்களுக்கும் நன்றிகள்...


  ஆமாம் ரெவரி அண்ணா பயம் கலந்த மரியாதை தப்பில்லை மரியாதைக்குரியவர் மரியாதைக்குரியவரா என அறிந்து மரியாதை செலுத்தினால் மிக்க நலம்தானே....

  பதிலளிநீக்கு
 8. சீரான பண்பு சிறப்பைத்தரும் தோழி!

  பதிலளிநீக்கு
 9. ஒருவரின் நடத்தை,வாழ்கின்ற முறை, இவையே மரியாதையைத் தீர்மானிக்கின்றன.மிகச் சரியாக ச் சொன்னீர்கள்.

  மிக அருமையான கட்டுரை..

  பதிலளிநீக்கு
 10. மரியாதை என்பது நம் நடத்தையில் தான் இருக்கிறது, அதில் மாற்றுக்கருத்துக்கு வாய்ப்பில்லை .. :)

  பதிலளிநீக்கு
 11. ஒரு
  மூத்தவர் சிறுவன் ஒருவனை
  டேய் இங்கே வா என்று கூடிடுவதற்கும்
  தம்பி இங்கே வங்கா என்று கூப்பிடுவதற்கும்

  நிறைய வித்தியாசம் உண்டு சகோ

  மதிப்பிடலில்
  சிறியவர்
  பெரியவர்
  என்னைப் பொறுத்தவரையில் நிறம் பார்க்க வேண்டாம் என்பது
  என் தனிப்பட்ட கருத்து சகோ

  நல்ல பதிவு சகோ

  பதிலளிநீக்கு
 12. சென்னை பித்தன் அங்கிள் அவர்களே உங்களை் கருத்துக்கு நன்றி

  மற்றும் மாலிக்கா அவர்களே உங்களுக்கும் என் நன்றிகள்..

  மற்றும் கருத்துரையிட்ட என் அருமை உறவுகளுக்கும் என் அனிய நன்றிகள்...

  பதிலளிநீக்கு
 13. நல்லதொரு கருத்தைப் பகிர்ந்திருக்கிறீர்கள் எஸ்தர். சிறியவரோ பெரியவரோ ஒருவருக்கொருவர் மரியாதையுடன் பழகும் விதத்தில் குணங்கள் அமையவேண்டும். அதனினும் முக்கியம் தம் சுயமரியாதையை இழக்காதிருத்தல். மிகவும் அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

  நான் எங்கள் வீட்டு வேலைக்கார அம்மாவை வாங்க, போங்க என்று அழைப்பதைப் பலரும் கேலி செய்திருக்கிறார்கள். ஆனாலும் நான் மாற்றிக்கொள்ளவில்லை. என் பிள்ளைகள் இன்னும் ஒருபடி மேலே போய் அவரை அத்தை என்றே அழைப்பார்கள். மரியாதை கொடுத்து மரியாதை வாங்கத்தெரியவேண்டும்.

  பதிலளிநீக்கு
 14. சுயமரியாதையை இழப்போமெனில் இவிவுலகில் வாழ்ந்து பயனேது. நன்னடத்தை மிக்க மானிடராய் இவ்வுகிற்கு வாழ்வோம். உலகு நமக்கு என்ன செய்தது என்பதனை விடுத்து நாம் உலகிற்கு என்ன செய்ய போகிறோம் என்பதனை சிந்திப்போம் செயற்படுவோம் உலகில் மரியாதைக்குரிய மானிடராய் வாழ்வோம்.// மிகவும் அவசியமான பதிவு சகோதரி .

  பதிலளிநீக்கு
 15. மிகவும் சிறப்பான கருத்துக் களை பதிவு செய்துவரும் எஸ்தர் உண்மையில் உங்களின் கணவர் கொட்டுத்துவத்தவர்தான் சிறந்த சிந்தனை உளம் நிறைந்த பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
 16. நாங்கள் நாங்களாக இருக்குமிடத்தில் இருந்தால் மரியாதை தானகவே வந்து சேரும் சகோதரி !

  பதிலளிநீக்கு
 17. வணக்கம்,சகோதரி!அருமையான கருத்துப் பதிவு/பகிர்வு.காலில் விழும் கலாச்சாரம்?????

  பதிலளிநீக்கு
 18. உங்கள் இதயம் அழகாகப் பேசியிருக்கிறது தோழி.

  பதிலளிநீக்கு
 19. AROUNA SELVAME நன்றி... மற்றும் உங்களை வரவேற்கிறேன்....

  பதிலளிநீக்கு
 20. ரெவெரி சொல்வது அத்தனையும் வடிகட்டின பொய்கள்; உண்மையை மறைத்து இந்தியனைப் பற்றி சொல்லும் பீ-த்த பெருமைகள்-பொய்கள். படியுங்க...மேலும்...

  அமெரிக்கா ஏழைகள் மற்றும் பிச்சைக்காரர்களின் நாடு!லிங்க்...
  http://www.nambalki.com/2012/06/blog-post_14.html

  அமெரிக்க ஏழை பணக்கார இந்தியனை விட சொகுசாக வாழ்கிறான்! லிங்க்...
  http://www.nambalki.com/2012/06/blog-post_4241.html

  அமெரிக்கநாய்க்கும் அரசாங்க புகலிடம், Govt.Shelter, குளுகுளு A/C வசதி!லிங்க்...
  http://www.nambalki.com/2012/06/govtshelter-ac.html

  என்ன கேள்வியை வேண்டுமானாலும் eஎன்னிடம் கேளுங்கள். உங்கள் அபிமான ரெவெரியிடம் விவாதம் செய்ய நான் ரெடி! ரெவெரி ரெடியா? கேட்டு சொல்லுங்கள்!

  அன்புள்ள,
  நம்பள்கி!
  www.nambalki.com

  பதிலளிநீக்கு
 21. அழகான அவசியமான கருத்துக்ள்,வாழ்த்துகள் தோழி
  அக்புடன் அதிசயா
  காதல் இங்கும் ஒளிந்திருக்கும்..!!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி அதிசயா அக்கா......உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.....

   நீக்கு
 22. நல்லா இருக்கு.. ஒரு குட்டி கதை சேர்த்து இருந்தா நீங்க சொல்ல வந்த விஷயம் இன்னும் ரீச் ஆகி இருக்கும்..

  பதிலளிநீக்கு
 23. மரியாதை கொடுத்து வாங்க வேண்டிய விடயம் கிடையாது. எம் நடத்தைக்கு உலகம் தரும் அன்பு பரிசு. இதை தக்க வைத்து கொள்வது அவசியம். உலகில் நல்லவர் என்று பெயர்வாங்க போராட வேண்டும் அதே உலகில் கெட்டவர் என பெயர் வாங்க ஒரு நொடி போதும்.

  இது உண்மையான வரிகள்! மரியாதை கொடுத்து வாங்குவது அல்ல! தானாக வருவது! சிறப்பான பதிவு! நன்றி!

  பதிலளிநீக்கு
 24. மக்கான சுயமரியாதையை இழப்போமெனில் இவிவுலகில் வாழ்ந்து பயனேது.
  >>>
  கரெக்ட்தான் தங்கச்சி, நம்ம செயல்களே நம்மை மரியாதைக்குரியவர்களா ஆக்குது

  பதிலளிநீக்கு
 25. நல்லவர்-கெட்டவர், பெரியவர்-சிறியவர் பார்த்து மரியாதை கொடுப்பதில எனக்கு உடன்பாடில்லை - உலகில் எல்லோருமே மரியாதைக்குரியவர்கள்

  பதிலளிநீக்கு
 26. நல்ல பதிவு. படித்தேன் - ரசித்தேன்.
  #பெரியவர்கள் பொதுவாக சிறியவர்கள் தமக்கு மரியாதை செய்ய வேண்டும் என விரும்புவர். ஆனால் அப் பெரியவர் எப்படிப்பட்டவர் என்பதைதான் சமூகம் பார்க்கும். அவர் ஓர் குடி காரனாகவோ அல்லது உலகத்தால் வெறுக்கப்படும் தீய செயல்களை செய்பவராக இருந்தாலோ அவர் எப்படிப்பட்ட இடத்திலிருந்தாலும் சமூகம் அவர்ரை மதிக்காது.#
  நம்ம தளத்துக்கும் கொஞ்சம் வாங்களேன்?
  http://newsigaram.blogspot.com/2012/07/01.html

  பதிலளிநீக்கு