திங்கள், 28 மே, 2012

ஆமை வேட்டையில் குருநகர் மக்கள் NO-01உலகிலேயே இப்போது அருகி வரும் கடல் வாழ் உயிரினங்களில் ஒன்று கடலாமை இதன் இறைச்சிக்கு அவ்வளவு கிராக்கி. ஆசிய நாடுகளில் இதை பொதி செய்து ஜரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வர். ஆசியாவில் உள்ள இலங்கை ஒரு பௌத்த நாடு என்பதால் ஆமை விடயத்தில் அவர்கள் கவனம் முக்கியமானதாக இருக்கும்.

ஏனென்றால் ஆமை புத்தருடன் சம்மந்தப்பட்ட விலங்கு. இதனால் சிங்களவர்கள் பொதுவாக பொத்தர்கள் ஆமை சாப்பிடுவது கிடையாது. அதுமட்டுமல்ல ஆமை வேட்டையில் ஈடுபடக் கூடாது என்ற சட்டமும் இலங்கையில் நடை முறையில் உண்டு.

இருப்பினும் கரையோர தமிழ் மக்கள் அதை யெல்லாம் கண்டுக்கிறதே கிடையாது. யாழ்ப்பாணம், மன்னார் உட்பட அனைத்து கடற்கரை சார்ந்த இடங்களில் ஆமை வேட்டைக்கு அளவு கணக்கே கிடையாது இது நானே நேரில் கண்ட சாட்சி. இதுவும் போக யாழ்ப்பாணத்தில் குருநகர், பாஷையூர், நாவாந்துறை போன்ற ஊர்கள் கடற் தொழிலுக்கு மிகவும் பிரபலமானவை. சராசரியாக ஒரு கிழமைக்கு இரண்டு தொடக்கம் ஜந்து ஆமைகள் வரை குருநகர் மக்களால் வேட்டையாடப்படுகின்றன.

ஆமைகளை கொண்டு வர (நேவி காரங்க) கடற்படை அமதிக்கமாட்டார்கள் அவ்வாறு பிடிபட்டால் அடி உதை கூட வாங்க நேரிடும் அல்லது நீதிமன்றத்திற்கு போக நேரிடும். ஆனாலும் வலைகளில் சுற்றி நேவி(கடற்கடை) இல்லாத சந்தர்ப்பத்தில் ஒரு வழியாக ஊருக்குள் கொண்டுவந்து ஒளித்துவிடுவார்கள். ஒவ்வொரு ஞாயிற்று கிழமைகளிலும் பெரும்பாலும் எல்லா குருநகர் வீடுகளிலும் ஆமை இறைச்சிதான். இதற்கு எனது வீடும் விதிவிலக்கல்ல. ஆனால் நான் சிறு வயது முதலே ஆமை இறைச்சி சாப்பிடுவது கிடையாது ஏனென்றால் அதன் வெடில் நாற்றம் எனக்கு பிடிக்காது.

இங்கு ஆமை இறைச்சி என்பது கிலோ கணக்கில் விற்கப்படுவது கிடையாது. பங்கு சார்ந்தே விற்கப்படுகிறது. ஒரு பங்கு கிட்டத்தட்ட எழுநுாறு முதற் கொண்டு ஆயிரம் ரூபாய் வரையும் இருக்கும் பெரும்பாலும் ஆயிரம் ரூபாயாகவே இருக்கும் ஆனாலும் அவ்வளவு விலை கொடுத்து தலா ஒவ்வொரு ஞாயிற்று கிழமைகளிலும் அம்மக்கள் ஆமை இறைச்சியை வாங்கி உண்ணுவார்கள்.

இது மரபு ரீதியாக தொடரும் பழக்கமாம் நான் ஒருதியும்தான் ஆமை இறைச்சியை இந்த ஊருக்குள் சாப்பிடுவதில்லையாம் என்று என் அம்மம்மா எனக்கு திட்டாத நாளே கிடையாது எங்கோ இருந்து மாட்டு வண்டிகளில் வந்தெல்லாம் எத்தனை விலை கொடுத்தென்றாலும் வாங்குவார்களாம் ஆமை இறைச்சியை வாங்க கிழக்கிலிருந்து மக்கள் வருவார்களாம். அது மட்டுமல்லாது ஆமை இறைச்சிக்கு பல நோய்களை தீக்கும் மருத்துவ குணமும் உண்டாம் உதாரணமாக மூலவியாதி, குளிர் ஊதல் போன்ற வியாதிகளைகுணமாக்கும் வல்லமை உண்டு என்றெல்லாம் என் அம்மம்மா கூறுவார்.

ஆமை வேட்டை இங்கு இன்றைக்கு நேற்று அல்ல ஆண்டாண்டு காலம் தொடரும் ஓர் நிகழ்வாகவே காணப்படுகின்றது. இம்மக்கள் படிப்பறிவில் சற்று பின் தள்ளியவர்கள்.இதனால் இது நரியா தவறா என புரிந்து கொள்ளும் மன பக்குவம் அவர்களுக்கு கிடையாது. ஆமைகள் அழிந்து வரும் உயிரினம் என்று கூறி அதை நிறுத்துவது என்பது கடினமான செயல் ஆனாலும் பிரச்சாரங்கள் அது பற்றிய விளிப்புணர்வு கூட்டங்களி உரியவர்களால் முன்னெடுக்கப்பட்டால் இவ்வேட்டை ஓரளவு குறைய வாய்ப்புண்டு


9 கருத்துகள்:

 1. ஆமைக்கறி
  சிலர் சாப்பிடுவார்கள் என்று கேட்டு இருக்கேன்
  உங்கள் பதிவில் தான் படிக்கிறேன் இந்த விஷயத்தை

  ''வியப்பு ''

  பதிலளிநீக்கு
 2. நன்றி செய்தாலி அங்கிள் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்...

  பதிலளிநீக்கு
 3. ஒரு பிளேட் ஆமைக்கறி பார்சல்ல்ல்லல்ல்ல்

  பதிலளிநீக்கு
 4. ஐயய்ய... ஆமையக் கூடவா சாப்பிடுவாங்க..? புதுத் தகவலா இருக்கே. அதுவும் அவ்வளவு விலை கொடுத்த..? அழிந்து வரும் இனம் என்பதால் அவை காப்பாற்றப்பட வேண்டியது மிக அவசியம்தான் எஸ்தர்.

  பதிலளிநீக்கு
 5. சிறு வயதில் சொந்த ஊர் போகையில் பாட்டி தந்த நினைவு...

  பாட்டியா ஆமையா என்கின்ற போது பாட்டியேன்னு சாப்பிட்ட நினைவு...

  பதிலளிநீக்கு
 6. ஊரில் கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர....உங்கள் பதிவில்தான் படங்களோடு பார்க்கிறேன்.ஆமை இறைச்சி சாப்பிட்டால் மூலநோய் சுகமாகும் என்பார்கள் !

  பதிலளிநீக்கு
 7. muthalila unnoda veettila aamai saappiduratha stop pannuppa...
  unakku pidikkala endathala maththavangalum sappida koodathu endu solla variya
  bramanan muttai sappida koodathu endathukkaaka... mattavangalum iraichchi, muttai sappidamal irukka mudiyuma..
  athuthan neeye sollittiye aama iraichiyil maruthuva gunam irukku endu...
  mattavangaloda freedom and like la nee y pa hate pannura..
  naanum aama sappida matten. athukkaka aama saappiduratha thappu solla matten..

  பதிலளிநீக்கு
 8. இந்த பதிவின் அர்த்தம் உங்களுக்கு சரியாக புரியவில்லை மதி அவர்களே உங்கள சாப்பிட வேண்டாம் என்று யார் சொன்னது அதற்காக அழிந்து வரும் ஒரு உயிரினத்தை சாப்பிட வேண்டும் என்று அவசியாமா... பகுத்தறிவு இருந்தால் சற்று சிந்தியுங்கள்....

  பதிலளிநீக்கு