சனி, 30 ஜூன், 2012

கல்லறைகளாக்காதீர் பெண்களே கருவறைகளை..

”தாய்மை” பெண்கள் அனைவருக்கும் இதன் மகத்துவம் இக்காலத்தில் புரிகிறதோ எனக்கு தெரியவில்லை????..

பண்டைய கிரேக்க, யூத சமுதாயங்களில் திருமணமாகாத பெண்களுக்கு ஓர் தனி மரியாதை இருந்தது, திருமணமான பெண்களுக்கு ஒரு மரியாதை இருந்தது. ஆனால் திருமணமாகி குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு மலடி எனும் இழிச் சொல்லே இருந்தது. இந்த விடயத்தை ஆராய்ந்தால் இது கிரேக்க யூத சமுதாயங்களுக்கு மாத்திரம் பொருந்த கூடிய விடயம் என எனக்கு தோன்றவில்லை இது என் தனிப்பட்ட கருத்து.

காரணம் என்னவென்றால் பெண்களின் இந்த நிலை பொதுவாக எல்லா சமுதாயத்திற்கும் பொருந்த கூடியதாக இருக்கிறது. (பெண்ணடிமை ஒரு புறம் இருக்கட்டும் அதை பற்றி நான் பேசவில்லை ) இந்து தேசத்தை பொறுத்தமட்டில் சந்நியாசிகளின் தோற்றம் அதிகம் அதிலும் ஆண் சந்நியாசிகள் அதிகம். ஆனால் பெண்கள் என்று வரும் போது மிக குறைவே ஆனால் அவர்களுக்கு மரியாதை இருந்ததை யாராலும் மறுக்க முடியாது. அது போல் திருமணமாகி குழந்தை பேறு அற்றவர்களுக்கு சமூகத்தில் ஒதுக்கு நிலையே மிஞ்சியது. அதனாலோ என்னவோ அக்கா பெண்கள் அனைவரும் தாய்மையின் மகத்துவத்தை அறிந்திருந்தனர்.

ஆனால் தற்கால நாகரீகமடைந்த சமுதாயத்தில் குழந்தை பேறு அற்றவர்கள்
ஒடுக்கப்படுவது என்பது குறைவு இது நாகரீகத்தின் வளர்ச்சியாக கூட இருக்கலாம். ஆனால் இம்முறை முற்று முழுதாக ஒழிந்து விட்டது என நான் கூறவில்லை தொடருகிறதுதான் ஆனாலும் குறைவு பெண்கள் இப்போது மாடல், அழகி, மிஸ்...... என பலவகையாக கட்டமைப்பு பதவிகள் வகிப்பதால் அவர்கள்களுக்கு இது ஒரு பொருட்டல்ல என எண்ணுகிறேன்.

கரு கலைப்பு , சிசு கொலை என பெண்கள் தங்கள் கருவறைகளை கல்லறையாக்குகிறார்கள். காதல் எனும் ஒன்றை சாட்டாக வைத்து திருமணத்திற்கு முன்னரான தகாத உடலுறவு பெண்களை கொலை காரிகளாக்குகிறது. காதல் மோகத்தால் தாம் செய்வது பிழை என் தெரிந்தும் அவ்வாறு பெண்கள் செய்கிறார்கள் நான் எல்லாரையும் குறை கூறவில்லை (தொப்பி அளவானவர்கள் போட்டு கொள்ளட்டும்). குழந்தை பிறந்தால் தம்“ அழகு பறிபோய்விடும் என எண்ணி உடலுறவின் போதே கருத்தடை மாத்திரைகளை பிரயோகித்து புனிதமான கருவறையை தீட்டு படுத்துகிறார்கள்.

என்னும் சில பெண்கள் மார்பழகு போய்விடும் என்பதற்காக தம் குழந்தைகளுக்கு தாய்பால் கொடுக்க மறுப்பது மிகமிக கொடுமை. உண்மையில் தாய்மையை முழுக்க அனுபவித்தவள் இத்தகைய கேடு கெட்ட வேலையை செய்யாள். மஞ்ஞத்திற்காக ஆசைபடுபவளே இதை செய்வாள் இத்தகைய மனுஷிகளை கண்டால் பாரதியில் கவி வரி ஒன்று என் உள்ளம் தொடுகிறது நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நெறி கெட்ட மனிதரை நினைக்க.....

உயிரை காப்பாற்றுவதற்காக ஏற்படுத்தப்பட்ட துறை மருத்துவ துறை. இதை சிலர் கடவுளால் தோற்றுவிக்க பட்டது என்று கூறுவார்கள் அப்படிப்பட்ட மருத்துவ உலகம் இன்று உலகம் காணா அந்த சிசுகளை பாவமறியா அந்த பாலகர்களை அழிப்பது நிஜாயமா??? கருத்தடைக்கு மாத்திரை ஏன் ???? கருவழிப்புக்கு மாத்திரை ஏன்????

ஒரு வேளை அறிருந்தது போல் இன்றும் பலவந்தமான சமூக அடக்குமுறை
குழந்தை பேறில்லாதவர்களுக்கு இருந்திருக்க இப்படி கருவழிப்புக்கள் சில சமயங்களில் இல்லாமல் இருந்திருக்கும்.

பெண்களே கேளீர் உங்கள் புனிதமான கருவறைகளை கல்லலைகளாக்காதீர் தாய்மையின் மேன்மை உணருங்கள் மஞ்ஞம் ஏறி உடற்சுகம் அனுபவிப்பது மட்டுமல்ல தாம்பத்தியம். இந்த பூமிக்கோர் உயிரை கொடுப்பதற்காக இடம்பெறும் உயிரோட்ட அனுபவம் தாம்பத்தியம் என்பதை நினைவிற் கொள்ளுங்கள்

திங்கள், 25 ஜூன், 2012

உச்சிதனை முகர்ந்தால் (திரைப்படம்)

ஈழத்திரு நாட்டிலே புனிதவதி எனும் சிறுமிக்கு இலங்கை ராணுவத்தினரால் நடத்தப்பட்ட கொடுமைகளை திரையிட்டு காட்டியதே இந்த உச்சிதனை முகர்ந்தால். மட்டக்களப்பு பிரதேசத்தை இனிதே திரையில் காட்டியுள்ளார்கள். விடுதலைப் புலிகள் மக்களோடு ஒன்றித்து வாழ்ந்த முறையையும் அழகாக காட்டியுள்ளார்கள்.

இந்தியா உட்பட தமிழர் வாழும் சகல பிரதேசங்களிலும் இத்திரைப்படம் திரையிடப்பட்டது. ஆனால் இலங்கையில் இப்படத்திற்கு தடைவிதிக்கப்பட்டது. காரணம் என்ன என்று உங்களுக்கு புரியும்தானே.

நானும் சில மாதங்களாக இப்படத்தை பார்க்க முயன்றும் என்னால் முடியவில்லை நேற்றய தினம் நம்பிக்கை இல்லாமல் யூடியுப்பில் தேடினேன் கிடைத்து விட்டது. அதை பலர் பார்த்திருக்கமாட்டார்கள் என்ற காரணத்தினால் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இத்திரைப்படத்திற்கு சர்வதேச நோர்வே திரைப்பட விழாவில் விருது கிடைத்தது என்பது குறிப்பிட தக்கது.

இதோ திரைப்படம்புதன், 20 ஜூன், 2012

நான் ஓர் பெண் என்பதால்....

படைத்தவனே தலை வணங்கும்
அம்சம் பெண்மைக்கு உண்டு
என்ன தபம் செய்தேன் - முன்
ஜென்மமதில் இப்பாரினில் - இப்
பெண்மையை அடைவதற்கு

முதல் பத்து வருடமும்
பெண்மையின் கண்களில் நான்
படவில்லையோ என்னவோ
சிறகு முளைத்த பட்டாம் பூச்சியாய்
சுற்றினேன.

அதன் பின் நாணம் என்னை கவ்வி
கொண்டது
வெட்கம் என்னை பற்றி
கொண்டது
இளமான் நடினம் என் இடை
முதல் கால் வரை ஆடிற்று
அச்சம் என்னை கட்டிப் போட்டது
பயத்தால் அல்ல பெண்மையின்
தாண்டவத்தால்

தந்தையின் அருகில் உறங்கிட
துணியவில்லை
அவர் ஓர் ஆண் என்பதால் அல்ல
நான் ஓர் பெண் என்பதால
கல்லுாரியில் கை கோர்த்து
சுற்றிய ஆண் நண்பர்களில் கைகளில்ல
இருந்து நானே நளுவினேன்
அவர்கள் ஆண் என்பதால் அல்ல
நான் ஓர் பெண் என்பதால்

குனிந்த தலை நிமிரவில்லை
வெட்கத்தால் என் கன்னங்களில்
கௌவை பழங்கள் கனிந்தன
காதில் முடி கோரும் அழகிய
நடினம் என் கைகளில் தளர்ந்தன
நான் ஓர் பெண் என்பதால்

இத்தனையும் அனுபவித்தேன்
பெண் பெண்மையின் நிமிர்த்தம்
அனுபவிப்பேன் அனுபவித்து
கொண்டே இருப்பேன்
நான் ஓர் பெண் என்பதால்....

வலையுலக நட்புகளுககு ஒரு மகிழ்வான அறிவிப்பு
ரும ஆகஸ்ட் 15 (புதன்) சுதந்திர தினத்தன்று சென்னையில பதிவர் சநதிப்புக்குத் திட்டமிடப்பட்டுளளது, புலவர் ச.இராமாநுசம் அவர்கள் தலைமையில், இந்தச் சந்திப்பு நிகழ இருககிறது, கவிதை பாடுபவர்கள் கவியரங்கத்தில் கவிதை படிக்கலாம், மற்றையோர் தங்களுக்குப பிடித்தமான ஏதேனும் ஒரு தலைப்பின் கீழ் (சுவாரஸ்ய அனுபவம். நகைச்சுவைத் துணுக்கு போன்றவை) பேசலாம்.இவை பற்றிய விரிவான அறிவிப்பு இனி வரும் நாட்களில் வெளிவரும்.முழுக்க முழுக்க நமக்கான இந்த நிகழ்ச்சிக்கு அவசியம் வருகை தரும்படி அனைவரையும வேண்டுகிறோம். நிகழ்ச்சிக்கு வர இருப்பவர்கள் தங்களின் வருகையை 98941 24021 (மதுமதி), 73058 36166 (பா,கணேஷ்), 94445 12938 (சென்னைப் பித்தன்), 90947 66822 (புலவர் சா,இராமானுசம்) ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவித்தால் ஏற்பாடுகள் செய்வதற்கு வசதியாக இருக்கும்..
இத்தகவலை நட்புகள் அனைவரும் தங்கள் பதிவுகளில் வைத்து அனைவரிடமும் கொண்டு சேர்க்கும்படி வேண்டுகிறோம்..........(நன்றி:பா.கணேஷ்)

ஞாயிறு, 17 ஜூன், 2012

மரித்துப் பிளைத்தவள் 08


சென்ற பதிவின் தொடர்ச்சியாக ......

நாங்கள் எஞ்சியிருந்த குடும்பங்கள் ஒருவருக்கொருவர் பாதுகாப்பாக பக்கத்து பக்கத்து வீடுகளில் குடியேறி சற்று பயமில்லாமல் இருந்தோம் இடம் பெயர்ந்து மக்கள் எல்லாரும் வன்னி நோக்கி சென்றதால் அத்தியாவசிய பொருட்கள் எம்மிடம் இருக்கவில் ஏற்கனவே ஜெயபுரத்தில் விடுதலைப் புலிகள் ஜ.நா நிறுவனங்கள் உதவியால் வழங்கியவற்றை மட்டும் சில நாட்கள் சமாளித்தோம் ஆனாலும் வெகுநாள் அவை போதாது.

இது ஒரு புறமிருக்க ராணுவத்தினர் சந்திக்கு சந்தி வீதிகளை அடைத்து தமிழ் மக்கின் வீடுகள் பலவற்றை சேர்த்து முகாம்கள் அமைத்து கொண்டிருந்தனர். ஒவ்வொரு சந்தியிலும் ஒவ்வொரு சிறிய முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதற்குள் என் பெரிய அக்கா வயசுக்கு வந்திட்டாள். அவளுக்கான பத்திய உண்வுகளுக்கு தழிழ் மருந்து கடைகள் (இயற்கை மருந்து) எல்லாம் அடைக்கப்பட்டிருந்ததால் மிகுந்த வலி அனுபவித்தள். என் அம்மாவிற்கு பாட்டி வைத்தியம் றொம்பவே தெரியும் என்பதால் கிடை்த்தவற்றை மட்டும் வைத்து அவளுக்கான சடங்குகளை முடித்தனர்.

வெளியே பெண்கள் அப்பப்படவே பயப்பட்டனர். ராணுவத்தினர் ரோந்து எனும் போர்வைக்குள் வீட்டில் எத்தனை வயதுக்கு வந்த பெண்கள் இருந்தனர் என பார்த்தது எல்லோருக்கும் நன்றாகவே தெரியும்.

உணவு பஞ்ஞம் அப்படியே இருக்க ராணுவ முகாம்களில் எமக்கான உணவுகளை பெற்று தருமாறு எல்லாரும் போய் முறையிட்டனர். சில நாட்களின் பின் ஜ.யா நிறுவனங்கள் பல எம் இடத்திற்கு வந்து நிவாரண உதவிகளை வழங்கின.

அப்படியே வன்னியில் இருந்த பல யாழ்ப்பாண வாழ் குடும்பங்கள் ஜ.நா நிறுவனங்களின் உதவியுடன். மீண்டும் யாழ்ப்பாணம் வந்து குடியேறினர் ஏனென்றால் யாழ்ப்பாணம் ராணுவத்தினரின் கட்டுப்பாட்டிற்குள் இருந்ததாலும். போர் வன்னி மாநகரில் மூண்டதாலும் மக்கள் தம் பாதுகாப்பை கருத்திற் கொண்டு யாழ்பாணம் நோக்கி ஜ.நா நிறுவனங்கள் உதவியுடன் கொஞ்ஞம் கொஞ்ஞமாக வர தொடங்கினர் இது தனத்து பயந்து கொண்டிருந்த எமக்கு பெரிய சந்தோஷத்தை ஏற்படுத்தியது.

வலைச்சரத்தில் சென்ற வார ஆசிரியர் மயிலன் அண்ணா மரித்து (என்னை அறிமுகப்படுத்தியதற்காக மிக்க நன்றி அண்ணா)பிளைத்வளில் ஒரு தொடரை என் அம்மாவின் உதவியுடன் எழுதினேன் என்று குறிப்பிட்டிருந்தார் ஆனால் மரித்துப் பிளைத்தவள் 01 இருந்து இத்தொடர் வரைக்கும் (08) என் அம்மாவின் உதவியுடன்தான் எழுதினேன். ஏனென்றால் இவை நடந்தேறியது 1993 - 1999 வரையான காலப்பகுதி. இப்போதுதான் எனக்கு 07  வயது (1999). எனது அம்மாவிற்கு மிக்க நன்றி. இனி மரித்துப்பிளைத்தவள் 09 இருந்து நானே அனுபவித்தவற்றை எழுத ஆரம்பிக்கிறேன்.

cross dresser எனும் சிறு பாலினத்தாரை தெரியுமா?

இப்பதிவு சிலருக்கு புரியாததாக இருக்கலாம் ஆறுதலாக வாசித்தால் புரியும் என நம்புகிறேன்.

நான் எனது வலைப் பூவில் அதிகம் அடக்கு முறையில் சிக்கி தவிக்கும் மக்களுக்காக அவர்களின் நிலையினை வெளிப்படுத்தி எழுதுவதுண்டு. அதிலும் இது வரைக்கும் திருநங்கைகளை பற்றி நான் அதிகம் எழுதியுள்ளேன். பலர் ஏன் அதிகம் நீங்கள் திருநங்கைகளை பற்றி எழுதுகிறீர்கள்? என என்னை கேட்டதும் உண்டு அவர்களுக்கு ஒரே பதில்தான் நீங்கள் எழுதவில்லை அதனால் நான் எழுதுகிறேன்.

எனது முகப்புத்தகத்திற்கு ஒரு நாளைக்கு ஜந்திற்கு மேற்பட்ட நண்பர்கள் கோரிக்கை வருவதுண்டு. சில வேளைகளில் ஒரு சிலர் தம்மை cross dresser என தம்மை அறிமுகப்படுத்தி கொள்வதுண்டு. அதனால் அவர்களின் கோரிக்கைகளை நான் நிராகரிப்பதுண்டு. எனக்கு உண்மையில் மிக குழப்பமாகவே இருக்கும்  யார் இவர்கள் இவர்கள் எப்படிப்பட்ட உணர்வு கொண்டவர்கள் என அறியும் ஆவல் எனக்கு வந்தது. இணையத்திலும் தேடிப்படித்தேன் ஆனால் பெரிதாக தகவல்கள் ஒன்றும் கிடைக்கவில்லை. அதனால் இவர்களிடமே நேரடியாக கேட்கலாம் என்ற எண்ணம் வந்தது. அதனால் அதற்காக ஒருவரிடம் மனம் விட்டு பேசினே்.

இவர்களில் முதலில் ஆண் cross dresser ஜ பற்றி பார்ப்போம். இவர்கள் பிறப்பில் ஆணாக இருப்பார்கள். ஆனால் இவர்களுக்கு பெண் உடையில், பெண் அலங்காரத்தில் அதீத ஈடுபாடு உண்டு. தம்மை பெண்ணாக அலங்கரித்து பார்த்து மகிழ்வதில் அதீத ஆசை. பிறகு நீங்கள் யோசிக்லாம் திருநங்கைகளும் ஆரம்காலத்தில் இப்படித்தானே என்று அப்படியில்லை திருநங்கைகளுக்கும் இவர்களுக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது. இவர்கள் பெண் உடை மற்றும் அலங்காரத்தையே விரும்புவார்கள் தம்மை பெண் என்றும் அழைத்து கொள்வார்கள் ஆனால் அறுவை சிகிச்சை செய்து கொள்ளமாட்டார்கள் அதுமட்டுமல்ல இவர்களின் பாலியல் உடலுறவு ஈர்ப்பு சராசரியாக ஓர் ஆணுக்கு எப்படி பெண் மேல் காணப்படுமோ அப்படியே  காணப்படும். ஆனால் திருநங்கைகள் மனதளவில் மட்டுமல்ல உடலளவிலும் பெண்ணாக வாழ்பவர்கள். சிலர் இவர்களையும் திருநங்கைகள் என எண்ணுவதுண்டு இது மிக தவறு.

அதே போல் பெண்களிலும் உள்ளனர் இவர்கள் தங்களை ஆண் என்று நினைத்து கொண்டு ஆண் உடை மேலும் , அலங்காரத்தின் மேலும் அதீத ஈடுபாடு உண்டு ஆனால் அவர்களின் பாலியல் ஈர்ப்பு சராசரி பெண்ணுக்கு எப்படி ஓர் ஆண் மேல் இருக்குமோ அப்படியேதான் இருக்கும்.

உலகை நினைக்க வியப்பாக உள்ளது மனிதனை ஏன் படைத்தான் இறைவன் அதற்குள் ஏன் இத்தனை விந்தை வைத்தான். என்ற கேள்வி என்னுள் எழும்புகிறது.

வெள்ளி, 15 ஜூன், 2012

நர்த்தகி திரைப்படம் பார்த்தீர்களா??? இதோ பாருங்கள்

அன்பு மிக்க நண்பர்களே நான் பார்த்து வியந்த திரைப் படங்களில் நர்த்தகியும் ஒன்று இத்திரைப் படம் முழு நீளமான திருநங்கைகளை பற்றிய திரைக் காவியம். இத்திபை்படத்திற்கு சர்வதேச நோர்வே திரைப்படத்திற்கான விருதும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது  பலர் அதை பார்த்திருக்க மாட்டீர்கள். அதனால் உங்களுக்காக இத்திரைப் படத்தை அறிமுகப்படுத்தி. பார்க்க அழைக்கிறேன்.

                            நர்த்தகி

                                                                 பகுதி 01

பகுதி 02


பகுதி 03


பகுதி 04


பகுதி 05


பகுதி 06


பகுதி 07


பகுதி 08


பகுதி 09

புதன், 13 ஜூன், 2012

கண்ணீரில் ஒரு கடிதம்...

என் அன்புக்குரியவனே

நீ நலமா? என்று கேட்க மாட்டேன் நீ மிக்க நலம் என எனக்கு தெரியும். உன் நினைவில் நான்தான் தினம் தினம் கண்ணீர் சமைக்கிறேன். இயற்கை விதித்த கட்டளை நம் இருவருக்குமான துாரங்கள் அதிகரித்தே செல்கின்றன. நீ என்னை புரிவதாய் இல்லை என்னால் புரிய வைக்கவும் முடியவில்லை.

காரணங்கள் ஆயிரம் சொல்லி என்னை நானே தேற்ற முயன்றேன் என்னால் முடியவில்லை. உன் நினைவலைகள் என்னை தொம்சம் செய்கின்றன. இரவு என்பது எனக்கு வெம்மை பார்க்கிலும் கொடுமையாகிறது. பால் நிலாவை கூட ரசிக்க முடியவில்லை என் தோழன் நீ அருகில் இல்லை என்று...

என்றாவது என்னை புரிந்து கொள்வாய் என்ற நம்பிக்கையும் என்னை விட்டு ஓடி விட்டது. உயிரினங்களில் கூட யோடிகளை பார்த்தால் எனக்கு பொறாமை வருகிறது. நான் உன்னை விட்டு தனித்துள்ளேன் என்பதால்.

என் பெண்மையை எனக்கு உணர வைத்தவன் நீதானே. என் பெண்மையின் அங்கலாப்பு உனக்கு புரியவில்லையா? நெற்றியில் உள்ள என் பொட்டும் என்னை கேவலம் செய்கிறது. என் கால்கொலுசின் ஓசையும் என்னை நையபுடைக்கிறது. என் கண்ணுக்கு மையிட்டு பல நாட்களாகிவிட்டது. என் ஆடையில் பொன்னிறம் கண்டு பல வாரங்களாகவிட்டன. அன்னம் என் நாவு தொட மறுக்கிறது தண்ணீர் என் நாசி தொட மறுக்கிறது.

கவிதையாய் வடிக்க வேண்டிய என்
உணர்வுகளை கடிதாமாய் தருகிறேன் எப்போதாவது
நீ இதை பார்ப்பாய் என்ற நம்பிக்கையுடன்..

இப்படிக்கு உன்னை காதலிப்பவள்..


திங்கள், 11 ஜூன், 2012

தமிழரை அரக்கராக்கிய மகாவம்ச எழுத்தாளன்.


இரண்டு நாட்களுக்கு முன்பு யாழ்ப்பாணம் பொது நுாலகம் சென்றிருந்தேன். இலங்கை வரலாறு எனும் நுால் கையில் கிடைத்தது ஆர்வத்துடன் எடுத்து படித்தேன் சிறிய வயதில் நானட வரலாற்று பாடத்தில் கற்ற இலங்கை சம்பந்தமான விடயங்கள் புரியாத புதிராக இருந்தன ஆனால் அப்புத்தகம்
என் பல புதிர்களுக்கு விடைதந்தன.

இலங்கை வரலாற்றை கூறும் முக்கிய நுால்களில் மகாவம்சம் மிக முக்கியமான நுால் ஆகும் காவிய வடிவில் அமையம் பெற்றாலும் காவியத்தின் அடிப்படை பண்புகள் அற்றது. இது சிங்கள மூல மொழியை கொண்டது. இதை எழுதியவர் மகாநந்த தேரர் எனும் பௌத்த பிக்கு ஆவார். இவரின் எழுத்துகளே சிங்கள மக்கள் தமிழ் மக்கள் மேல் கொண்டுள்ள அதிருப்திக்கு எடுத்து காட்டு. உலகில் அரக்கர் எனும் இனம் வாழ்ந்தாக கட்டுக்கதைகள் மட்டுமே உலா வந்தன. இவை மத விடயங்களுக்கு சில வேளைகளில் ஒத்துப் போகலாம். உதாரணமாக ராமாயணத்தில் ராவணன் அரக்கனாக சித்தரிக்கப்பட்டிருப்பார். அவர் குணத்தில் கீழ் தரமானவர் என்ற படியால் கம்பரால் அப்படிப்பட்டவராக சித்தரிக்கப்பட்டிருக்லாம்

ஆனால் உண்மையில் வாழந்த மனித இனத்தை அரக்க இனம் என்று ஒரு எழுத்தாளர் குறிப்பிடுவது அவ்வினத்கு மிக பெரிய அவமானமாகும் அப்படிப்பட்ட காரியமே நடந்தேறியது மகாவம்ச மகாநந்த தேரரால். விஜயன் என்ற ஆரிய வம்சத்தவனோடே இலங்கையில் சிங்கள வம்சத்தின் கதை ஆரம்பமாகிறது.

வட இந்தியாவில் உள்ள வங்காளம், ஒரிசா ஆகிய பகுதிகள் ஒரு காலத்தில் லாலாதேசம் என்று அழைக்கப்பட்டது. இந்த ராஜ்ஜியத்தை ஆண்ட மன்னன் பெயர் சிங்கபாகு. இவர் சிங்கத்துக்கும் ஒரு ராஜகுமாரிக்கும் பிறந்தவர்!

பிற்காலத்தில் இவருக்கு உண்மை தெரிகிறது. ஒரு குகையில் இருந்த சிங்கத்தை (தன் தந்தையை) கண்டுபிடித்து தலையை வெட்டி துண்டிக்கிறார்.

சிங்கபாகு, சிகாசிவாலி என்ற பெண்ணை மணந்து அவளை பட்டத்து ராணி ஆக்குகிறார். இவர்களுக்கு 16 முறை இரட்டைக் குழந்தைகள் பிறக்கின்றன! (அதாவது 32 குழந்தைகள்)

இந்தக் குழந்தைகளில் மூத்தவன் விஜயன். அவனை பட்டத்து இளவரசனாக சிங்கபாகு நியமிக்கிறார்.


விஜயன் மிகவும் கொடூரமானவன். அவன் செய்த அட்டூழியங்கள் பற்றி, மன்னனிடம் மக்கள் முறையிடுகிறார்கள். மகனைத் திருத்த முயற்சிக்கிறார், சிங்கபாகு. ஆனால் விஜயன் திருந்தவில்லை. நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு, மக்களைத் துன்புறுத்துகிறான்.

அவன் அட்டூழியங்கள் எல்லை மீறிப்போனதால், மன்னனிடம் மக்கள் மீண்டும் முறையிடுகிறார்கள். "விஜயனுக்கு மரண தண்டனை விதியுங்கள்'' என்று வற்புறுத்துகிறார்கள்.

இதன் காரணமாக, விஜயனையும், அவன் நண்பர்கள் 700 பேர்களையும் நாடு கடத்துகிறார், மன்னர். இவர்களை மூன்று கப்பல்களில் ஏற்றி, "எங்காவது போய் பிழைத்துக் கொள்ளுங்கள். இனியாவது திருந்தி வாழுங்கள்'' என்று புத்திமதி கூறி அனுப்பி வைக்கிறார். மூன்று கப்பல்களும் இலங்கையை அடைகின்றன.


விஜயன் கப்பலை விட்டு இறங்கி, இலங்கைத் தீவில் காலடி வைக்கிறான். இது கி.மு. 543-ல் நடந்தது.

தாங்கள்தான் இலங்கையில் முதன் முதல் வந்தவர்களட என்று காட்டுவதற்காக ஏற்கனவே இங்கு பல ஆண்டு காலமாக ஒரு நாகரீகமான வாழ்க்கைக்கு பழக்கப்பட்டு வாழ்ந்து வந்த திராவிடர்களை அரக்கர்கள் என கூறுகிறார் அந்த புத்த பிக்கு.

நான் கேட்கிறேன் இவ்வரியத்தகு நுால் எழுத அறிவிருந்த அந்த பிக்குவிற்கு ஒரு பகுத்தறிவு இல்லாமலா போயடவிட்டது அரக்கர்கள் விடயத்தில். சரி இங்கிருந்தவர்கள் அரக்கர்களாகவே இருக்கட்டும். பூமில் அவர்கள் வாழ்வதில்லை நரகத்திலேயே அவர்கள் வாழ்கிறார்கள் இது பல மதங்கள் கொண்டுள்ள நம்பிக்கை அதை தவிடு பொடி ஆக்கவிட்டார் இந்த பிக்கு.
சரி இது போகட்டும்  சிங்களவர்கள்  மனித ஜாதியே கிடையாது என்பதற்கு அவர்கள் நுாலே எடுத்துக்காட்டு சிங்கத்திற்கும் ஒரு பெண்ணிற்குமான தலை முறையினர் இச்சிங்களவர்கள்.

இலங்கை வந்து குடியேறிய விஜயன் குவேனி எனும் அரக்க குல பெண்ணின் உதவியை நாடி தஞ்ஞம் புகுந்து அவளை காதலிதது மணந்ததாக மகாவம்சம் கூறுகிறது.குவேனி என்பது கவனி என்ற தமிழ் சொல்லின் திரிபு கவனி என்றால் பேரளகுள்ளவள் என்பது பொருள்.  இது நடக்க கூடிய காரியமா இது பைத்திய காரனின் புத்தகம் போல எனக்கு காட்சி தருகிறது. இலங்கையின் மூத்த மைந்தர்கள் தமிழர்கள் என்பதற்கு இதை விட எடுத்து காட்டு வேறென்ன வேண்டும்.

இலக்கிய ஆய்வாளர்கள் பகுத்தறிவுடன் நிஜாமாக இந்த மகாவம்ச நுாலை ஆராய்தால் ஈழம் பற்றிய பல கேள்விகளுக்கு விட கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஞாயிறு, 10 ஜூன், 2012

சமந்தாவுக்கு தொடர் ஜாக்பாட்.தமிழ் சினிமாவின் எதிர்கால கனவுக் கன்னியாக சமந்தா இருப்பார் என நம்பப்படுகிறது. பாணா காத்தாடி திரைப் படம் மூலமாக தமிழில் குதித்தவர் சமந்தா தொடர்ந்து மாஸ்கோவின் காவிரி திரைப்படத்தில் நடித்தார் அதன் பிறகு தமிழில் காண முடியவில்லை ஆனால் தெலுங்கில் முன்னனி நாயகியாக வளர ஆரம்பித்தார்.

இப்போது தமிழ் ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார் சமந்தா அனைத்தும் பெரிய இயக்குனர்கள் பெரிய நடிகர்கள். சங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்தில் இவர்தான் நாயகி, கௌதம் மேனன் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் படத்தில் இவர்தான் யோடி, தொ்ர்ந்து கார்த்தி, என்று முன்னனி நடிகர்களுடன் களமிறஙக ஆரம்பித்துள்ளார் சமந்தா. இது போதாதென்று தமிழ் மற்றும் தெலுங்கில் ஓரே நேரத்தில் வெளியாக இருக்கும் நான் ஈ திரைப்படத்தின் நாயகியும் இவர்தான்.

ஆனால் சமந்தா பெரிய ஜாக்பாட்டை தற்போது தவற விட்டு விட்டதாக சினிமா ஊடகங்கள் அறிவித்துள்ளன. மணிரத்னம் இயக்கத்தில் இவர் நடித்து வந்த கடல் திரைப் படத்தில் இருந்து இவர் விலகி விட்டதாக கூறப்படுகிறது. ஏனதான் சமந்தா இந்த நல்ல வாய்ப்பை விட்டாரோ தெரியவில்லை நானென்றிருக்க சம்பளமே வேண்டாமல் நடித்து கொடுத்திருப்பேன். (hahaha plzz திட்டாதிங்க)

எது என்னவோ சமந்தா இப்போது எனக்கு பிடித்த நடிகையாகி விட்டார். அதனால் அவர் வளர்ந்து பல விருதுகளை குவிக்கவும் இன்னும் பல படங்கள் நடித்து நற் பெயரை காக்கவும் எனது வாழ்த்துக்கள்...

புதன், 6 ஜூன், 2012

ஜாதி பேதத்தால் ரௌடிகளே அதிகமானார்கள்.......

இப்போது இருக்கும் ஜாதி பிரிவினைகள் தொழிலை அடிப்படையாக வைத்து பாகுபடுத்தப்பட்டவை. முன்னய காலங்கில் பணத்தின் அடிப்படையிலும், பதவிகளின் அடிப்படையிலும் மனிதன் பாகுபடுத்தப்பட்டிருந்தான்.

இந்த ஜாதி பிரிவுகள் சில சமூகங்களை ரௌடிகளாகவே மாற்றி விட்டன. அதற்கு என்ன காரணம் என நானே ஆராய்ந்தேன் அதற்கு பல விடைகள் எனக்கு கிடைத்தன (இதில் நான் பேசப்போகும் ஜாதிகளை பற்றியோ அவர்கள் வாழும் ஊர்களின் இடங்களை பற்றியோ குறிப்பிடி விரும்பவில்லை)  நான் என ஆய்வுக்காக பலதரப்பட்ட இடத்திற்கும் பலதரப்பட்ட நபர்களையும் சந்திக்க வேண்டிய சூழல் இருந்தது ஆனால் என் தோழிகளும், உறவினர்களும் போக கூடாது என தடுத்த சில இடங்கள் உண்டு . ஏன் போக வேண்டாம் என கேட்ட போது அவர்கள் அவர்களை பற்றி பல விதமான காரியங்களை கூறினால்கள் அவர்களை பற்றி நல்ல விதமாக ஒரு வார்த்தை கூட கூறவில்லை. ஆனாலும் எனக்கு அங்கு சென்று என் ஆய்வை மட்டுமல்ல ஏன் இந்த மக்கள் இப்படி இருக்கிறார்கள் என்றும் அறிய ஆவலாக இருந்தது. என் தோழிகளை வரும் படி கட்டாயப்படுத்தினேன. ஆனால் அவர்கள் யாரும் சம்மதிக்கவில்லை. ஆனால் என் உற்ற தோழி ஒருத்தி தன் தம்பியை கூட்டி கொண்டு செல்ல அனுமதித்தாள். அவன் எனக்கு அண்ணா மாதிரி இருந்ததால் சற்று பயம் குறைந்து அவனுடன் அந்த ஊருக்குள் கால் வைத்தேன்.

நான் கேள்விப்பட்ட விடயங்கள் என்னவென்றால் இவர்கள் வாள் வெட்டு கொலை, கள்ள சாராய விற்பனை, கஞ்சா விற்பனை பேன்றவற்றில் ஈடு படுபவர்களாகவும் மற்றும் பல செய்ய தகாத நடத்தைகளில் ஈடுபடுபவர்களாகவும் இவர்களை பற்றி நான் கேள்விப்பட்டேன். இவர்கள் பரம்பரை தொழிலை நான் குறிப்பிட விரும்பவில்லை

அந்த ஜாதியின் பெயர் ஈழத்து எழுத்தாளர் செ. கணேஷலிங்கம் அவர்களால் ஜாதி கட்டமைப்புகளை சாடி எழுதப்பட்ட நீண்ட பயணம் நாவலில் இடம் பெற்றுள்ளது. அந்த நாவிலின் நாயகனும் இவ் ஜாதி வகுப்பை சார்ந்தவனே.

அந்த ஊருக்குள் கால வைத்த உடனேயே வீடுகளில் இருந்து துர்வார்த்தைகளும், கள்ளு மற்றும் கள்ள சாராய (வடி) நாற்றமும், வீதி எங்கும் வெற்றிலை காற்களுமாக இருந்தன அவைற்றை பார்த்ததும் நான் பயந்து விட்டேன். றொம்ப முயர்ச்சி செய்கிறோமோ திரும்பி போயிடலாமோ? என யோசித்தேன் ஆனாலும் என்னால் அப்படி இருக்க முடியவில்லை.

எல்லோரும் எங்கள் இருவரையும் வியப்பாய் பார்த்தார்கள் யாரும் இந்த ஊருக்குள் வரமாட்டார்களே இந்த பொண்ணு வந்துள்ளாளே என்று பார்த்தார்களோ என்னவோ. எல்லோரும் முறுக்கிய மீசை சிறியவர்கள் கூட பாடசாலைக்கு அனுப்பப்படாமல். புழுதி படிந்த மேனியுடன் வீதியில் விளையாடிக் கொண்டிருந்தார்கள் யாரும் படித்தவர்களாக தெரியவில்லை கூப்பிட்டு பேசவே பயமாக இருந்தது.

அப்போது ஒரு நபர் எங்களை கடந்து சென்றார் (எப்போது்ம் என் ஊகம் தவறானது கிடையாது) அவரை பார்த்த மாத்திரத்தில் இவர் நம்ம ஆய்வுக்கு பொருத்தமான ஆள் என முடிவு செய்தேன். அவரை அண்ணா என்று தழும்பிய ஒலியுடன் கூப்பிட்டேன். அவர் என்ன என்று தாழ்மையுடன் கேட்டார். நீங்க இந்த ஊரா? என்றேன். அவர் ஆம் என்றார். உங்களிடம் கொஞ்ஞ நோரம் பேசலாமா? என்றேன். ஏன் என்றார் நான் எல்லா விடயங்களையும் கூறினேன்.
உடனே தங்கள் வீட்டுக்கு அழைத்து சென்றார். அவர் வீடு பூந் தோட்டங்களால் அலங்கரிக்கப்பட்டு அழகாக இருந்தது. அவர் பாடசாலை படிப்பை முடித்தவர்.
அவரிடம் பேசியதில் என் பல கேள்விகளுக்கு விடை கிடைத்தது.

அவர்கள் இவர்கள் ரௌடிகளாகவும் இப்படிப்பட்ட பழக்க வழக்கங்களுக்கும் அடிமையாகி இருப்பதன் காரணம். தங்களை பார்த்து மரியாதைதான் வரவில்லை பயமாவது வரட்டுமே என்றுதான் இப்படி எல்லாம் நடிக்கிறார்கள் பாடசாலைகளில் கூட மற்ற மாணவர்கள் இவர்களை மதிப்பது கிடையாது. அதனால் பாடசாலையில் இவர்கள் ரௌடி ஆட்டம் ஆடி அவர்களை பயத்தால் அடக்கி வைத்துள்ளார்கள். கஞ்சா விற்பனை என்பது சர்வசாதாரணமாக பெண்களே செய்கிறார்கள் என்று அவர் கூறினார். அப்போது நான் கேட்டேன் இதுவும் தங்களின் பயம் வரவேண்டுமென்றா செய்கிறார்கள்.. அவர் அதற்கு இங்கு நடக்கும் அனைத்துமே தங்கள் மேல் மற்றவர்கள் பயப்படவேண்டும் என்றுதான் செய்யப்படுகிறது. என்றார்.

ஆனாலும் இந்த காரணம் சரியாகுமா? படித்து நல்ல உத்தியோகத்தில் இருந்தால் மரியதை தன் பாட்டில் வருமே என்று நான் நினைத்தேன். ஆனால் அம் மக்கள் யாரும் படிப்பறிவற்றவர்கள்.மற்றும் பாடசாலை செல்ல விரும்பாதவர்கள் என அறிந்து கொண்டேன். மற்றவர்கள் பேச்சை கேட்கும் நிலையில் இல்லாதவர்கள் இப்போது சிலர் புத்தி தெளிந்து வெளி இடங்களுக்கு பாசாலை சென்று கல்வி கற்று வருகின்றனர்.

தங்கள் மேல் மற்றவர்களுக்கு பயமாவது வரவேண்டும் என்று இவர்கள் செய்யும் இம்மடத்தனமான காரியங்கள் என்னும் வெறுப்பைதான் வளர்க்கும் என் அவர்கள் அறியவில்லை. அவர் பேச்சை கேட்ட போது எனக்கும் சற்று கோபம் வந்தது. ஆனாலும் எம் சமூகத்தின் மேல் பாரிய பிழை இருப்பதை நான் ஒத்து கொண்டுள்ளேன். என்பதால் ஒன்றும் செய்ய முடியாது. அவர்களை  சீர்திருத்த என்ன வழி என்பது நான் கண்டிராத விடை..


ஞாயிறு, 3 ஜூன், 2012

மரித்துப் பிளைத்தவள் 07சென்ற பதிவில் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலைக்கு கடல் மார்க்கமாக செல்லும் போது நடந்த அசம்பாவிதங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்.

இறந்தவர்களின் உடல்களை துாக்கி கொண்டு முதலில் எங்கள் வீடுகளுக்கு செல்லோம் என எனது உறவினர்கள் தீர்மானித்தனர். சரி என வீடு சென்றனர் அப்போது எல்லா வீடுகளும் இடிக்கப்பட்டு சில தரை மட்டமாகவும் சில அரை குறை நிலையிலும் காட்சி அளித்தன. அது என்னும் மனதை ரண படுத்துவதாய் அமைந்தது.

இந்த செய்தி எப்படியோ ஜெயபுரத்தில் இருந்த எங்களுக்கு எட்டவே எல்லோரும் செத்தால் ஒன்றாகு சாவோம் என்ற எண்ணத்துடன் கிராலி கடலுாடாக வெள்ளை கொடியில் நாங்கள் பொதுமக்கள் என்ற வாசகத்துடன். பயணப்பட்டோம்.

ஒருவழியாக எங்கள் உறவினர்களுக்கு நடந்தது போல் அல்லாது பயத்தோடும் அச்சத்தோடும். சுமூகமாக வந்து சேர்ந்தோம். எல்லோருக்குமே பயம் காரணமாக காய்ச்சல் என்றால் நீங்கள் நம்பியே ஆகவேண்டும். உறவினர்கள் வீடுவந்ததும் எல்லோரும் இறந்தவர்களை கண்டு ஓஓஓஓ என்ற புலம்பலுடன் குமுறி அழுதனர். சடங்குகள் சம்பிரதாயங்கள் ஒன்றும் செய்ய முடியாத சூழ்நிலை ஏனெனில் தேவாலயங்கள் இடிங்கப்பட்டு மதகுருமார்கள் இடம் பெயர்ந்திருந்தனர். இறந்தவர்களே எம் உறவினர்களே குளிப்பாட்டி அன்றோ கல்லறைகளில் அடக்கம் செய்தோம்.

பின் என் நாங்கள் எங்கள் வீடு சென்றோம் நான் எப்போதும் என் சின்ன அக்கா கையில்தான் என்பது தொடர்ந்து படி ப்பவர்களுக்கு தெரியும்.

எங்கள் வீடு ஒரு சேதமும் இல்லை ஆனால் எங்கள் ஜன்னல்கன் கதவுகள் எல்லாம் இலங்கை ராணுவத்தினரால் காம்ப் (முகாம்) அமைப்பதற்கு சூரையாடப்பட்டிருந்தன. எங்கும் துாசி பூரான், தேள், சிலந்திகளின் ஆட்சி எங்கள் வீட்டில் இடம் பெற்றுக் கொண்டிருந்தது.


ஒருவழியாக எல்லாவற்றையும் கூட்டி கழுவி துப்பரவு செய்தோம் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்த எங்கள் ஊரில் அங்கும் இங்குமாக இருபது குடும்பங்களே எஞ்சியிருந்தன. மற்றகுடும்பங்கள் எல்லாம் இடப்பெயர்ந்து வன்னியில் குடியேறியிருந்தனர். பின் கிராலி கடல் முகப்பும் மூடப்பட்டு யாழ்ப்பாணத்திற்கு யாரும் வராத படிக்கு இலங்கை ராணுவம் தடை செய்தது.

இருந்த இருபது குடும்பங்களும் துார துார இருந்ததால் ஒரு வகையான பயம் சூழ்ந்தது. அதானால் அருகருகே இருந்த இடம் பெயர்ந்தவர்களின் வீடுகளில் குடியேறி ஒருவருக் கொருவர் ஆறுதலாக இருந்தனர்.