ஞாயிறு, 3 ஜூன், 2012

மரித்துப் பிளைத்தவள் 07



சென்ற பதிவில் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலைக்கு கடல் மார்க்கமாக செல்லும் போது நடந்த அசம்பாவிதங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்.

இறந்தவர்களின் உடல்களை துாக்கி கொண்டு முதலில் எங்கள் வீடுகளுக்கு செல்லோம் என எனது உறவினர்கள் தீர்மானித்தனர். சரி என வீடு சென்றனர் அப்போது எல்லா வீடுகளும் இடிக்கப்பட்டு சில தரை மட்டமாகவும் சில அரை குறை நிலையிலும் காட்சி அளித்தன. அது என்னும் மனதை ரண படுத்துவதாய் அமைந்தது.

இந்த செய்தி எப்படியோ ஜெயபுரத்தில் இருந்த எங்களுக்கு எட்டவே எல்லோரும் செத்தால் ஒன்றாகு சாவோம் என்ற எண்ணத்துடன் கிராலி கடலுாடாக வெள்ளை கொடியில் நாங்கள் பொதுமக்கள் என்ற வாசகத்துடன். பயணப்பட்டோம்.

ஒருவழியாக எங்கள் உறவினர்களுக்கு நடந்தது போல் அல்லாது பயத்தோடும் அச்சத்தோடும். சுமூகமாக வந்து சேர்ந்தோம். எல்லோருக்குமே பயம் காரணமாக காய்ச்சல் என்றால் நீங்கள் நம்பியே ஆகவேண்டும். உறவினர்கள் வீடுவந்ததும் எல்லோரும் இறந்தவர்களை கண்டு ஓஓஓஓ என்ற புலம்பலுடன் குமுறி அழுதனர். சடங்குகள் சம்பிரதாயங்கள் ஒன்றும் செய்ய முடியாத சூழ்நிலை ஏனெனில் தேவாலயங்கள் இடிங்கப்பட்டு மதகுருமார்கள் இடம் பெயர்ந்திருந்தனர். இறந்தவர்களே எம் உறவினர்களே குளிப்பாட்டி அன்றோ கல்லறைகளில் அடக்கம் செய்தோம்.

பின் என் நாங்கள் எங்கள் வீடு சென்றோம் நான் எப்போதும் என் சின்ன அக்கா கையில்தான் என்பது தொடர்ந்து படி ப்பவர்களுக்கு தெரியும்.

எங்கள் வீடு ஒரு சேதமும் இல்லை ஆனால் எங்கள் ஜன்னல்கன் கதவுகள் எல்லாம் இலங்கை ராணுவத்தினரால் காம்ப் (முகாம்) அமைப்பதற்கு சூரையாடப்பட்டிருந்தன. எங்கும் துாசி பூரான், தேள், சிலந்திகளின் ஆட்சி எங்கள் வீட்டில் இடம் பெற்றுக் கொண்டிருந்தது.


ஒருவழியாக எல்லாவற்றையும் கூட்டி கழுவி துப்பரவு செய்தோம் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்த எங்கள் ஊரில் அங்கும் இங்குமாக இருபது குடும்பங்களே எஞ்சியிருந்தன. மற்றகுடும்பங்கள் எல்லாம் இடப்பெயர்ந்து வன்னியில் குடியேறியிருந்தனர். பின் கிராலி கடல் முகப்பும் மூடப்பட்டு யாழ்ப்பாணத்திற்கு யாரும் வராத படிக்கு இலங்கை ராணுவம் தடை செய்தது.

இருந்த இருபது குடும்பங்களும் துார துார இருந்ததால் ஒரு வகையான பயம் சூழ்ந்தது. அதானால் அருகருகே இருந்த இடம் பெயர்ந்தவர்களின் வீடுகளில் குடியேறி ஒருவருக் கொருவர் ஆறுதலாக இருந்தனர்.

8 கருத்துகள்:

 1. வணக்கம் உறவே
  உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
  http://www.valaiyakam.com/

  முகநூல் பயணர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.

  5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.

  ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்க: http://www.valaiyakam.com/page.php?page=votetools
  நன்றி

  வலையகம்

  பதிலளிநீக்கு
 2. பட்ட அனுபவங்கள் நெஞ்சில்
  அம்பெனப் பாய்கிறது சகோதரி...

  பதிலளிநீக்கு
 3. எதோ திகில் கதை போலும் உள்ளது ஆனால் இவை எல்லாம் உண்மை சம்பவம் எனும் போதே நெஞ்சு துடிக்கிறது .

  பதிலளிநீக்கு
 4. எல்லாப் பதிவையும் படித்துவிட்டு முழுமையாய்ச் சொல்கிறேன்

  பதிலளிநீக்கு
 5. நிறைய என் உறவுகளும் நண்பர்களும் பட்ட அவஸ்தை உங்களதும்...தொடருங்கள்...எஸ்தர்...

  பதிலளிநீக்கு
 6. //ங்கள் வீடு ஒரு சேதமும் இல்லை ஆனால் எங்கள் ஜன்னல்கன் கதவுகள் எல்லாம் இலங்கை ராணுவத்தினரால் காம்ப் (முகாம்) அமைப்பதற்கு சூரையாடப்பட்டிருந்தன.//

  எத்தனை கொடுமைகளைச் சமாளித்தோம்....ஆனாலும்...!

  பதிலளிநீக்கு
 7. ம்ம் ஆனாலும் மிகுதி சொல்ல நாவுக்கு பலம் இல்லையோ.. கேமா அக்கா.....

  பதிலளிநீக்கு