ஞாயிறு, 17 ஜூன், 2012

மரித்துப் பிளைத்தவள் 08


சென்ற பதிவின் தொடர்ச்சியாக ......

நாங்கள் எஞ்சியிருந்த குடும்பங்கள் ஒருவருக்கொருவர் பாதுகாப்பாக பக்கத்து பக்கத்து வீடுகளில் குடியேறி சற்று பயமில்லாமல் இருந்தோம் இடம் பெயர்ந்து மக்கள் எல்லாரும் வன்னி நோக்கி சென்றதால் அத்தியாவசிய பொருட்கள் எம்மிடம் இருக்கவில் ஏற்கனவே ஜெயபுரத்தில் விடுதலைப் புலிகள் ஜ.நா நிறுவனங்கள் உதவியால் வழங்கியவற்றை மட்டும் சில நாட்கள் சமாளித்தோம் ஆனாலும் வெகுநாள் அவை போதாது.

இது ஒரு புறமிருக்க ராணுவத்தினர் சந்திக்கு சந்தி வீதிகளை அடைத்து தமிழ் மக்கின் வீடுகள் பலவற்றை சேர்த்து முகாம்கள் அமைத்து கொண்டிருந்தனர். ஒவ்வொரு சந்தியிலும் ஒவ்வொரு சிறிய முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதற்குள் என் பெரிய அக்கா வயசுக்கு வந்திட்டாள். அவளுக்கான பத்திய உண்வுகளுக்கு தழிழ் மருந்து கடைகள் (இயற்கை மருந்து) எல்லாம் அடைக்கப்பட்டிருந்ததால் மிகுந்த வலி அனுபவித்தள். என் அம்மாவிற்கு பாட்டி வைத்தியம் றொம்பவே தெரியும் என்பதால் கிடை்த்தவற்றை மட்டும் வைத்து அவளுக்கான சடங்குகளை முடித்தனர்.

வெளியே பெண்கள் அப்பப்படவே பயப்பட்டனர். ராணுவத்தினர் ரோந்து எனும் போர்வைக்குள் வீட்டில் எத்தனை வயதுக்கு வந்த பெண்கள் இருந்தனர் என பார்த்தது எல்லோருக்கும் நன்றாகவே தெரியும்.

உணவு பஞ்ஞம் அப்படியே இருக்க ராணுவ முகாம்களில் எமக்கான உணவுகளை பெற்று தருமாறு எல்லாரும் போய் முறையிட்டனர். சில நாட்களின் பின் ஜ.யா நிறுவனங்கள் பல எம் இடத்திற்கு வந்து நிவாரண உதவிகளை வழங்கின.

அப்படியே வன்னியில் இருந்த பல யாழ்ப்பாண வாழ் குடும்பங்கள் ஜ.நா நிறுவனங்களின் உதவியுடன். மீண்டும் யாழ்ப்பாணம் வந்து குடியேறினர் ஏனென்றால் யாழ்ப்பாணம் ராணுவத்தினரின் கட்டுப்பாட்டிற்குள் இருந்ததாலும். போர் வன்னி மாநகரில் மூண்டதாலும் மக்கள் தம் பாதுகாப்பை கருத்திற் கொண்டு யாழ்பாணம் நோக்கி ஜ.நா நிறுவனங்கள் உதவியுடன் கொஞ்ஞம் கொஞ்ஞமாக வர தொடங்கினர் இது தனத்து பயந்து கொண்டிருந்த எமக்கு பெரிய சந்தோஷத்தை ஏற்படுத்தியது.

வலைச்சரத்தில் சென்ற வார ஆசிரியர் மயிலன் அண்ணா மரித்து (என்னை அறிமுகப்படுத்தியதற்காக மிக்க நன்றி அண்ணா)பிளைத்வளில் ஒரு தொடரை என் அம்மாவின் உதவியுடன் எழுதினேன் என்று குறிப்பிட்டிருந்தார் ஆனால் மரித்துப் பிளைத்தவள் 01 இருந்து இத்தொடர் வரைக்கும் (08) என் அம்மாவின் உதவியுடன்தான் எழுதினேன். ஏனென்றால் இவை நடந்தேறியது 1993 - 1999 வரையான காலப்பகுதி. இப்போதுதான் எனக்கு 07  வயது (1999). எனது அம்மாவிற்கு மிக்க நன்றி. இனி மரித்துப்பிளைத்தவள் 09 இருந்து நானே அனுபவித்தவற்றை எழுத ஆரம்பிக்கிறேன்.

7 கருத்துகள்:

 1. அந்த சூழலில் பெண்களின் நிலை குறித்து நினைத்தாலே பயமாகத் தான் இருக்கிறது .

  பதிலளிநீக்கு
 2. தொடருங்கள்., தொடர்ந்து வாசித்துக்கொண்டே இருக்கிறேன்.!

  பதிலளிநீக்கு
 3. படிக்கும்போது அந்த நாட்களின்நிலையை உணர முடிகிறது

  பதிலளிநீக்கு
 4. தொடருங்கள் மரித்துப்பிறந்தவள் கதையோடு நானும் பின் தொடர்கின்றேன்.
  வாழ்த்துக்கள் வலைச்சரம் ஏறிய தங்களின் தொடருக்கு இன்னும் மெருகூட்டி வாசிக்கவிடுவீர்கள் என்ற நம்பிக்கையோடு நானும் காத்திருக்கின்றேன் கதை கேட்க!

  பதிலளிநீக்கு
 5. தொடருங்கள் மரித்துப்பிறந்தவள் கதையோடு நானும் பின் தொடர்கின்றேன்.
  வாழ்த்துக்கள் வலைச்சரம் ஏறிய தங்களின் தொடருக்கு இன்னும் மெருகூட்டி வாசிக்கவிடுவீர்கள் என்ற நம்பிக்கையோடு நானும் காத்திருக்கின்றேன் கதை கேட்க!

  பதிலளிநீக்கு
 6. அம்மா + உங்கள் அனுபவம் எங்களை நிறைய உணர வைக்கிறது...

  தொடருங்கள் எஸ்தர்...

  பதிலளிநீக்கு
 7. இன்று தான் தங்கள் அனுபவம் பகிர்ந்தேன்... இனி முயற்சிக்கிறேன்..

  தங்கள் தளத்தில் ஸ்பாம் தொடுப்புகள் ஏதோ இருக்கிறது கவனத்தில் எடுங்கள்...

  அன்புச் சகோதரன்
  ம.தி.சுதா
  ஏழை மாணவன் ஒருவனை கரை ஏற்ற வாருங்கள்

  பதிலளிநீக்கு