புதன், 6 ஜூன், 2012

ஜாதி பேதத்தால் ரௌடிகளே அதிகமானார்கள்.......

இப்போது இருக்கும் ஜாதி பிரிவினைகள் தொழிலை அடிப்படையாக வைத்து பாகுபடுத்தப்பட்டவை. முன்னய காலங்கில் பணத்தின் அடிப்படையிலும், பதவிகளின் அடிப்படையிலும் மனிதன் பாகுபடுத்தப்பட்டிருந்தான்.

இந்த ஜாதி பிரிவுகள் சில சமூகங்களை ரௌடிகளாகவே மாற்றி விட்டன. அதற்கு என்ன காரணம் என நானே ஆராய்ந்தேன் அதற்கு பல விடைகள் எனக்கு கிடைத்தன (இதில் நான் பேசப்போகும் ஜாதிகளை பற்றியோ அவர்கள் வாழும் ஊர்களின் இடங்களை பற்றியோ குறிப்பிடி விரும்பவில்லை)  நான் என ஆய்வுக்காக பலதரப்பட்ட இடத்திற்கும் பலதரப்பட்ட நபர்களையும் சந்திக்க வேண்டிய சூழல் இருந்தது ஆனால் என் தோழிகளும், உறவினர்களும் போக கூடாது என தடுத்த சில இடங்கள் உண்டு . ஏன் போக வேண்டாம் என கேட்ட போது அவர்கள் அவர்களை பற்றி பல விதமான காரியங்களை கூறினால்கள் அவர்களை பற்றி நல்ல விதமாக ஒரு வார்த்தை கூட கூறவில்லை. ஆனாலும் எனக்கு அங்கு சென்று என் ஆய்வை மட்டுமல்ல ஏன் இந்த மக்கள் இப்படி இருக்கிறார்கள் என்றும் அறிய ஆவலாக இருந்தது. என் தோழிகளை வரும் படி கட்டாயப்படுத்தினேன. ஆனால் அவர்கள் யாரும் சம்மதிக்கவில்லை. ஆனால் என் உற்ற தோழி ஒருத்தி தன் தம்பியை கூட்டி கொண்டு செல்ல அனுமதித்தாள். அவன் எனக்கு அண்ணா மாதிரி இருந்ததால் சற்று பயம் குறைந்து அவனுடன் அந்த ஊருக்குள் கால் வைத்தேன்.

நான் கேள்விப்பட்ட விடயங்கள் என்னவென்றால் இவர்கள் வாள் வெட்டு கொலை, கள்ள சாராய விற்பனை, கஞ்சா விற்பனை பேன்றவற்றில் ஈடு படுபவர்களாகவும் மற்றும் பல செய்ய தகாத நடத்தைகளில் ஈடுபடுபவர்களாகவும் இவர்களை பற்றி நான் கேள்விப்பட்டேன். இவர்கள் பரம்பரை தொழிலை நான் குறிப்பிட விரும்பவில்லை

அந்த ஜாதியின் பெயர் ஈழத்து எழுத்தாளர் செ. கணேஷலிங்கம் அவர்களால் ஜாதி கட்டமைப்புகளை சாடி எழுதப்பட்ட நீண்ட பயணம் நாவலில் இடம் பெற்றுள்ளது. அந்த நாவிலின் நாயகனும் இவ் ஜாதி வகுப்பை சார்ந்தவனே.

அந்த ஊருக்குள் கால வைத்த உடனேயே வீடுகளில் இருந்து துர்வார்த்தைகளும், கள்ளு மற்றும் கள்ள சாராய (வடி) நாற்றமும், வீதி எங்கும் வெற்றிலை காற்களுமாக இருந்தன அவைற்றை பார்த்ததும் நான் பயந்து விட்டேன். றொம்ப முயர்ச்சி செய்கிறோமோ திரும்பி போயிடலாமோ? என யோசித்தேன் ஆனாலும் என்னால் அப்படி இருக்க முடியவில்லை.

எல்லோரும் எங்கள் இருவரையும் வியப்பாய் பார்த்தார்கள் யாரும் இந்த ஊருக்குள் வரமாட்டார்களே இந்த பொண்ணு வந்துள்ளாளே என்று பார்த்தார்களோ என்னவோ. எல்லோரும் முறுக்கிய மீசை சிறியவர்கள் கூட பாடசாலைக்கு அனுப்பப்படாமல். புழுதி படிந்த மேனியுடன் வீதியில் விளையாடிக் கொண்டிருந்தார்கள் யாரும் படித்தவர்களாக தெரியவில்லை கூப்பிட்டு பேசவே பயமாக இருந்தது.

அப்போது ஒரு நபர் எங்களை கடந்து சென்றார் (எப்போது்ம் என் ஊகம் தவறானது கிடையாது) அவரை பார்த்த மாத்திரத்தில் இவர் நம்ம ஆய்வுக்கு பொருத்தமான ஆள் என முடிவு செய்தேன். அவரை அண்ணா என்று தழும்பிய ஒலியுடன் கூப்பிட்டேன். அவர் என்ன என்று தாழ்மையுடன் கேட்டார். நீங்க இந்த ஊரா? என்றேன். அவர் ஆம் என்றார். உங்களிடம் கொஞ்ஞ நோரம் பேசலாமா? என்றேன். ஏன் என்றார் நான் எல்லா விடயங்களையும் கூறினேன்.
உடனே தங்கள் வீட்டுக்கு அழைத்து சென்றார். அவர் வீடு பூந் தோட்டங்களால் அலங்கரிக்கப்பட்டு அழகாக இருந்தது. அவர் பாடசாலை படிப்பை முடித்தவர்.
அவரிடம் பேசியதில் என் பல கேள்விகளுக்கு விடை கிடைத்தது.

அவர்கள் இவர்கள் ரௌடிகளாகவும் இப்படிப்பட்ட பழக்க வழக்கங்களுக்கும் அடிமையாகி இருப்பதன் காரணம். தங்களை பார்த்து மரியாதைதான் வரவில்லை பயமாவது வரட்டுமே என்றுதான் இப்படி எல்லாம் நடிக்கிறார்கள் பாடசாலைகளில் கூட மற்ற மாணவர்கள் இவர்களை மதிப்பது கிடையாது. அதனால் பாடசாலையில் இவர்கள் ரௌடி ஆட்டம் ஆடி அவர்களை பயத்தால் அடக்கி வைத்துள்ளார்கள். கஞ்சா விற்பனை என்பது சர்வசாதாரணமாக பெண்களே செய்கிறார்கள் என்று அவர் கூறினார். அப்போது நான் கேட்டேன் இதுவும் தங்களின் பயம் வரவேண்டுமென்றா செய்கிறார்கள்.. அவர் அதற்கு இங்கு நடக்கும் அனைத்துமே தங்கள் மேல் மற்றவர்கள் பயப்படவேண்டும் என்றுதான் செய்யப்படுகிறது. என்றார்.

ஆனாலும் இந்த காரணம் சரியாகுமா? படித்து நல்ல உத்தியோகத்தில் இருந்தால் மரியதை தன் பாட்டில் வருமே என்று நான் நினைத்தேன். ஆனால் அம் மக்கள் யாரும் படிப்பறிவற்றவர்கள்.மற்றும் பாடசாலை செல்ல விரும்பாதவர்கள் என அறிந்து கொண்டேன். மற்றவர்கள் பேச்சை கேட்கும் நிலையில் இல்லாதவர்கள் இப்போது சிலர் புத்தி தெளிந்து வெளி இடங்களுக்கு பாசாலை சென்று கல்வி கற்று வருகின்றனர்.

தங்கள் மேல் மற்றவர்களுக்கு பயமாவது வரவேண்டும் என்று இவர்கள் செய்யும் இம்மடத்தனமான காரியங்கள் என்னும் வெறுப்பைதான் வளர்க்கும் என் அவர்கள் அறியவில்லை. அவர் பேச்சை கேட்ட போது எனக்கும் சற்று கோபம் வந்தது. ஆனாலும் எம் சமூகத்தின் மேல் பாரிய பிழை இருப்பதை நான் ஒத்து கொண்டுள்ளேன். என்பதால் ஒன்றும் செய்ய முடியாது. அவர்களை  சீர்திருத்த என்ன வழி என்பது நான் கண்டிராத விடை..


14 கருத்துகள்:

 1. ஒன்றும் செய்ய முடியாது. அவர்களை சீர்திருத்த என்ன வழி என்பது நான் கண்டிராத விடை..
  அதே நிலையில் நம் போன்றவர்கள் என்ன செய்வது சகோதரி புலம்புவதைத் தவிர .
  Tha.ma.3

  பதிலளிநீக்கு
 2. கல்வி அறிவு ஒன்றுதான் மனிதனை பண்படுத்தும் அதுய் கிடைக்க அவர்களுக்கு வழி செய்தாலே போதும் மாற்றம் தன்னால் நிகழ்ந்து விடும். அதுவும் ஓரிரு ஆண்டுகளில் நிகழ்ந்துவிடாது தலைமுறைகள் மாறும் போதும் மாற்றம் நிகழும் ..!

  பதிலளிநீக்கு
 3. உடையவன் உணர்ந்து
  திருந்தாவிட்டால் இதற்கு
  விடையே இல்லை சகோதரி...

  பதிலளிநீக்கு
 4. நீங்கள் குறிப்பிட்ட மக்கள், ஜாதி பிரிவுகள் என்கின்ற பெயர்களில் ஒடுக்குமுறைக்கு உள்ளான அப்பாவி மக்களாவர். வாள் வெட்டு கொலைகளுக்கு பதிலாக துப்பாக்கி ஏந்துபவன், நவீன ஆயுதங்கள் தரித்தவன் நல்லவனாககிவிட முடியாது.

  கள்ளு மற்றும் கள்ள சாராய (வடி) நாற்றமும் வீதி எங்கும் வெற்றிலை காற்களுமாக இருந்தன அவைற்றை பார்த்ததும் நான் பயந்து விட்டேன்.

  schottland whisky நாற்றத்தை வெளிநாட்டு கோட்டு போட்ட லண்டன் தமிழர்களிடம் பார்த்து நானும் பயந்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 5. மாற்றம் வருகிறது...கொஞ்சம் மெல்ல...நல்ல ஆதங்க பதிவு எஸ்தர்...

  பதிலளிநீக்கு
 6. அவர்கள் தான் திருந்த வேண்டும் சமுகம் என்ன செய்ய முடியும் சட்டம் என்ன செய்ய முடியும் ஆனால் அவர்களுக்கு மாற்று வழி காட்ட வேண்டியது குடியரசின் கடமை என்பது மட்டும் நிஜம் எஸ்தர்!

  பதிலளிநீக்கு
 7. மாற்றம் மனதில் வரவேண்டும் எனில் அதற்கான சூழலை உண்டாக்கித் தருவது அரசு மற்றும் சார்ந்த அமைப்புகளின் கடமை..
  நீங்கள் தைரியசாலிதான் எஸ்தர்!

  பதிலளிநீக்கு
 8. மனிதனின் பலஹீனமும் கூட எஸ்தர்.ஏதோ ஒரு வழியில் பெயர்,புகழ்,பதவி,பணம் தேவைப்படுகிறது !

  பதிலளிநீக்கு
 9. ஆம் நிலவன்பன் அண்ணா இலங்கையில்தான் அதுவும் தமிழ் வளர்க்கும்“ யாழ்ப்பாணத்தில்தான்....

  பதிலளிநீக்கு
 10. இந்த மாற்றத்திற்கு மக்களும் மனம் வைக்க வேண்டும். அதற்கான சூழ்நிலையை உருவாக்கித்தர அரசும் மனம் வைக்க வேண்டும் எஸ்தர். இடையிலிருக்கும் நம்மால் பார்த்து வேதனிப்பதைத் தவிர வேறு ஒன்றும் செய்துவிட இயலாது என்பதே நிதர்சனம்.

  பதிலளிநீக்கு
 11. உன் தைரியம் என்னை பிரமிக்க வைக்கிறது எஸதர். உன்னை மாதிரியே நானும் அவங்க படிக்கணும், மாறணும்னு விரும்பறேன்.

  பதிலளிநீக்கு
 12. உன் தைரியம் என்னை பிரமிக்க வைக்கிறது எஸதர். உன்னை மாதிரியே நானும் அவங்க படிக்கணும், மாறணும்னு விரும்பறேன்.

  பதிலளிநீக்கு