திங்கள், 11 ஜூன், 2012

தமிழரை அரக்கராக்கிய மகாவம்ச எழுத்தாளன்.


இரண்டு நாட்களுக்கு முன்பு யாழ்ப்பாணம் பொது நுாலகம் சென்றிருந்தேன். இலங்கை வரலாறு எனும் நுால் கையில் கிடைத்தது ஆர்வத்துடன் எடுத்து படித்தேன் சிறிய வயதில் நானட வரலாற்று பாடத்தில் கற்ற இலங்கை சம்பந்தமான விடயங்கள் புரியாத புதிராக இருந்தன ஆனால் அப்புத்தகம்
என் பல புதிர்களுக்கு விடைதந்தன.

இலங்கை வரலாற்றை கூறும் முக்கிய நுால்களில் மகாவம்சம் மிக முக்கியமான நுால் ஆகும் காவிய வடிவில் அமையம் பெற்றாலும் காவியத்தின் அடிப்படை பண்புகள் அற்றது. இது சிங்கள மூல மொழியை கொண்டது. இதை எழுதியவர் மகாநந்த தேரர் எனும் பௌத்த பிக்கு ஆவார். இவரின் எழுத்துகளே சிங்கள மக்கள் தமிழ் மக்கள் மேல் கொண்டுள்ள அதிருப்திக்கு எடுத்து காட்டு. உலகில் அரக்கர் எனும் இனம் வாழ்ந்தாக கட்டுக்கதைகள் மட்டுமே உலா வந்தன. இவை மத விடயங்களுக்கு சில வேளைகளில் ஒத்துப் போகலாம். உதாரணமாக ராமாயணத்தில் ராவணன் அரக்கனாக சித்தரிக்கப்பட்டிருப்பார். அவர் குணத்தில் கீழ் தரமானவர் என்ற படியால் கம்பரால் அப்படிப்பட்டவராக சித்தரிக்கப்பட்டிருக்லாம்

ஆனால் உண்மையில் வாழந்த மனித இனத்தை அரக்க இனம் என்று ஒரு எழுத்தாளர் குறிப்பிடுவது அவ்வினத்கு மிக பெரிய அவமானமாகும் அப்படிப்பட்ட காரியமே நடந்தேறியது மகாவம்ச மகாநந்த தேரரால். விஜயன் என்ற ஆரிய வம்சத்தவனோடே இலங்கையில் சிங்கள வம்சத்தின் கதை ஆரம்பமாகிறது.

வட இந்தியாவில் உள்ள வங்காளம், ஒரிசா ஆகிய பகுதிகள் ஒரு காலத்தில் லாலாதேசம் என்று அழைக்கப்பட்டது. இந்த ராஜ்ஜியத்தை ஆண்ட மன்னன் பெயர் சிங்கபாகு. இவர் சிங்கத்துக்கும் ஒரு ராஜகுமாரிக்கும் பிறந்தவர்!

பிற்காலத்தில் இவருக்கு உண்மை தெரிகிறது. ஒரு குகையில் இருந்த சிங்கத்தை (தன் தந்தையை) கண்டுபிடித்து தலையை வெட்டி துண்டிக்கிறார்.

சிங்கபாகு, சிகாசிவாலி என்ற பெண்ணை மணந்து அவளை பட்டத்து ராணி ஆக்குகிறார். இவர்களுக்கு 16 முறை இரட்டைக் குழந்தைகள் பிறக்கின்றன! (அதாவது 32 குழந்தைகள்)

இந்தக் குழந்தைகளில் மூத்தவன் விஜயன். அவனை பட்டத்து இளவரசனாக சிங்கபாகு நியமிக்கிறார்.


விஜயன் மிகவும் கொடூரமானவன். அவன் செய்த அட்டூழியங்கள் பற்றி, மன்னனிடம் மக்கள் முறையிடுகிறார்கள். மகனைத் திருத்த முயற்சிக்கிறார், சிங்கபாகு. ஆனால் விஜயன் திருந்தவில்லை. நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு, மக்களைத் துன்புறுத்துகிறான்.

அவன் அட்டூழியங்கள் எல்லை மீறிப்போனதால், மன்னனிடம் மக்கள் மீண்டும் முறையிடுகிறார்கள். "விஜயனுக்கு மரண தண்டனை விதியுங்கள்'' என்று வற்புறுத்துகிறார்கள்.

இதன் காரணமாக, விஜயனையும், அவன் நண்பர்கள் 700 பேர்களையும் நாடு கடத்துகிறார், மன்னர். இவர்களை மூன்று கப்பல்களில் ஏற்றி, "எங்காவது போய் பிழைத்துக் கொள்ளுங்கள். இனியாவது திருந்தி வாழுங்கள்'' என்று புத்திமதி கூறி அனுப்பி வைக்கிறார். மூன்று கப்பல்களும் இலங்கையை அடைகின்றன.


விஜயன் கப்பலை விட்டு இறங்கி, இலங்கைத் தீவில் காலடி வைக்கிறான். இது கி.மு. 543-ல் நடந்தது.

தாங்கள்தான் இலங்கையில் முதன் முதல் வந்தவர்களட என்று காட்டுவதற்காக ஏற்கனவே இங்கு பல ஆண்டு காலமாக ஒரு நாகரீகமான வாழ்க்கைக்கு பழக்கப்பட்டு வாழ்ந்து வந்த திராவிடர்களை அரக்கர்கள் என கூறுகிறார் அந்த புத்த பிக்கு.

நான் கேட்கிறேன் இவ்வரியத்தகு நுால் எழுத அறிவிருந்த அந்த பிக்குவிற்கு ஒரு பகுத்தறிவு இல்லாமலா போயடவிட்டது அரக்கர்கள் விடயத்தில். சரி இங்கிருந்தவர்கள் அரக்கர்களாகவே இருக்கட்டும். பூமில் அவர்கள் வாழ்வதில்லை நரகத்திலேயே அவர்கள் வாழ்கிறார்கள் இது பல மதங்கள் கொண்டுள்ள நம்பிக்கை அதை தவிடு பொடி ஆக்கவிட்டார் இந்த பிக்கு.
சரி இது போகட்டும்  சிங்களவர்கள்  மனித ஜாதியே கிடையாது என்பதற்கு அவர்கள் நுாலே எடுத்துக்காட்டு சிங்கத்திற்கும் ஒரு பெண்ணிற்குமான தலை முறையினர் இச்சிங்களவர்கள்.

இலங்கை வந்து குடியேறிய விஜயன் குவேனி எனும் அரக்க குல பெண்ணின் உதவியை நாடி தஞ்ஞம் புகுந்து அவளை காதலிதது மணந்ததாக மகாவம்சம் கூறுகிறது.குவேனி என்பது கவனி என்ற தமிழ் சொல்லின் திரிபு கவனி என்றால் பேரளகுள்ளவள் என்பது பொருள்.  இது நடக்க கூடிய காரியமா இது பைத்திய காரனின் புத்தகம் போல எனக்கு காட்சி தருகிறது. இலங்கையின் மூத்த மைந்தர்கள் தமிழர்கள் என்பதற்கு இதை விட எடுத்து காட்டு வேறென்ன வேண்டும்.

இலக்கிய ஆய்வாளர்கள் பகுத்தறிவுடன் நிஜாமாக இந்த மகாவம்ச நுாலை ஆராய்தால் ஈழம் பற்றிய பல கேள்விகளுக்கு விட கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

5 கருத்துகள்:

 1. உங்கள் புத்தக வாசிப்பிற்கு ஒரு சல்யூட்
  வாசிப்பின் பகிர்தலுக்கு நன்றி எஸ்தர்

  பதிலளிநீக்கு
 2. வரலாற்று ஏடுகள் புரட்டி
  தமிழனின் பெருமைகளை
  உரைத்திட்ட செயலுக்கு
  நன்றிகள் தங்கையே...

  பதிலளிநீக்கு
 3. ஆய்வாளர்கள் உண்மை சொல்ல பேரினவாதம் விடுமா என்பதே கேள்விக்குறிதான்!ம்ம் நல்ல புத்தகம் ஒன்றை பார்த்தேன் எடுப்பிக்க முயல்கின்றேன்!

  பதிலளிநீக்கு
 4. புதியதொரு நூல். ஆழ்ந்த வாசிப்புடன் அழகாக எழுதியிருக்க எஸ்தர். தமிழனின் பெருமையை இம்மாதிரி நூல்கள் அழித்துவிட முடியாது. அருமையான பகிர்விற்கு நன்றி.

  பதிலளிநீக்கு