புதன், 13 ஜூன், 2012

கண்ணீரில் ஒரு கடிதம்...

என் அன்புக்குரியவனே

நீ நலமா? என்று கேட்க மாட்டேன் நீ மிக்க நலம் என எனக்கு தெரியும். உன் நினைவில் நான்தான் தினம் தினம் கண்ணீர் சமைக்கிறேன். இயற்கை விதித்த கட்டளை நம் இருவருக்குமான துாரங்கள் அதிகரித்தே செல்கின்றன. நீ என்னை புரிவதாய் இல்லை என்னால் புரிய வைக்கவும் முடியவில்லை.

காரணங்கள் ஆயிரம் சொல்லி என்னை நானே தேற்ற முயன்றேன் என்னால் முடியவில்லை. உன் நினைவலைகள் என்னை தொம்சம் செய்கின்றன. இரவு என்பது எனக்கு வெம்மை பார்க்கிலும் கொடுமையாகிறது. பால் நிலாவை கூட ரசிக்க முடியவில்லை என் தோழன் நீ அருகில் இல்லை என்று...

என்றாவது என்னை புரிந்து கொள்வாய் என்ற நம்பிக்கையும் என்னை விட்டு ஓடி விட்டது. உயிரினங்களில் கூட யோடிகளை பார்த்தால் எனக்கு பொறாமை வருகிறது. நான் உன்னை விட்டு தனித்துள்ளேன் என்பதால்.

என் பெண்மையை எனக்கு உணர வைத்தவன் நீதானே. என் பெண்மையின் அங்கலாப்பு உனக்கு புரியவில்லையா? நெற்றியில் உள்ள என் பொட்டும் என்னை கேவலம் செய்கிறது. என் கால்கொலுசின் ஓசையும் என்னை நையபுடைக்கிறது. என் கண்ணுக்கு மையிட்டு பல நாட்களாகிவிட்டது. என் ஆடையில் பொன்னிறம் கண்டு பல வாரங்களாகவிட்டன. அன்னம் என் நாவு தொட மறுக்கிறது தண்ணீர் என் நாசி தொட மறுக்கிறது.

கவிதையாய் வடிக்க வேண்டிய என்
உணர்வுகளை கடிதாமாய் தருகிறேன் எப்போதாவது
நீ இதை பார்ப்பாய் என்ற நம்பிக்கையுடன்..

இப்படிக்கு உன்னை காதலிப்பவள்..


6 கருத்துகள்:

 1. கடிதம் உணர்ச்சியின் உருகல் நிலையை சொல்லிச் செல்லுகின்றது!ஹீ பெண்மையின் ஏக்கம் சொல்லும் எழுத்து!

  பதிலளிநீக்கு
 2. அடக்கடவுளே... உரைநடை கூடக் கவிதை மாதிரி அருமையா இருக்குதே... சூப்பர்மா.

  பதிலளிநீக்கு
 3. கடிதமா தெரியல சகோதரி கவிதையாத் தான் தெரிகிறது .

  பதிலளிநீக்கு
 4. என்னைபோன்ற ஆளுகளுக்கு இதுவே பெரிய கவிதைதான்.

  நானும் ஆறு மாதமா முயற்சிக்கிறேன் ஒரு கவிதையாவது எழுதலாம்னு, ஒரு குயர் பேப்பர் வீணானது தான் மிச்சம் ஒன்னும் நடக்கமாட்டேங்குது, கவிதை எழுதுறதுக்கு தனித்திறமை வேணும் போல.!

  பதிலளிநீக்கு
 5. இப்படியும் பதிவு போடலாமுங்க//

  இந்த வரியை நீக்குங்கள் எஸ்தர்...பிடிததது

  பதிலளிநீக்கு