புதன், 20 ஜூன், 2012

நான் ஓர் பெண் என்பதால்....

படைத்தவனே தலை வணங்கும்
அம்சம் பெண்மைக்கு உண்டு
என்ன தபம் செய்தேன் - முன்
ஜென்மமதில் இப்பாரினில் - இப்
பெண்மையை அடைவதற்கு

முதல் பத்து வருடமும்
பெண்மையின் கண்களில் நான்
படவில்லையோ என்னவோ
சிறகு முளைத்த பட்டாம் பூச்சியாய்
சுற்றினேன.

அதன் பின் நாணம் என்னை கவ்வி
கொண்டது
வெட்கம் என்னை பற்றி
கொண்டது
இளமான் நடினம் என் இடை
முதல் கால் வரை ஆடிற்று
அச்சம் என்னை கட்டிப் போட்டது
பயத்தால் அல்ல பெண்மையின்
தாண்டவத்தால்

தந்தையின் அருகில் உறங்கிட
துணியவில்லை
அவர் ஓர் ஆண் என்பதால் அல்ல
நான் ஓர் பெண் என்பதால
கல்லுாரியில் கை கோர்த்து
சுற்றிய ஆண் நண்பர்களில் கைகளில்ல
இருந்து நானே நளுவினேன்
அவர்கள் ஆண் என்பதால் அல்ல
நான் ஓர் பெண் என்பதால்

குனிந்த தலை நிமிரவில்லை
வெட்கத்தால் என் கன்னங்களில்
கௌவை பழங்கள் கனிந்தன
காதில் முடி கோரும் அழகிய
நடினம் என் கைகளில் தளர்ந்தன
நான் ஓர் பெண் என்பதால்

இத்தனையும் அனுபவித்தேன்
பெண் பெண்மையின் நிமிர்த்தம்
அனுபவிப்பேன் அனுபவித்து
கொண்டே இருப்பேன்
நான் ஓர் பெண் என்பதால்....

வலையுலக நட்புகளுககு ஒரு மகிழ்வான அறிவிப்பு
ரும ஆகஸ்ட் 15 (புதன்) சுதந்திர தினத்தன்று சென்னையில பதிவர் சநதிப்புக்குத் திட்டமிடப்பட்டுளளது, புலவர் ச.இராமாநுசம் அவர்கள் தலைமையில், இந்தச் சந்திப்பு நிகழ இருககிறது, கவிதை பாடுபவர்கள் கவியரங்கத்தில் கவிதை படிக்கலாம், மற்றையோர் தங்களுக்குப பிடித்தமான ஏதேனும் ஒரு தலைப்பின் கீழ் (சுவாரஸ்ய அனுபவம். நகைச்சுவைத் துணுக்கு போன்றவை) பேசலாம்.இவை பற்றிய விரிவான அறிவிப்பு இனி வரும் நாட்களில் வெளிவரும்.முழுக்க முழுக்க நமக்கான இந்த நிகழ்ச்சிக்கு அவசியம் வருகை தரும்படி அனைவரையும வேண்டுகிறோம். நிகழ்ச்சிக்கு வர இருப்பவர்கள் தங்களின் வருகையை 98941 24021 (மதுமதி), 73058 36166 (பா,கணேஷ்), 94445 12938 (சென்னைப் பித்தன்), 90947 66822 (புலவர் சா,இராமானுசம்) ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவித்தால் ஏற்பாடுகள் செய்வதற்கு வசதியாக இருக்கும்..
இத்தகவலை நட்புகள் அனைவரும் தங்கள் பதிவுகளில் வைத்து அனைவரிடமும் கொண்டு சேர்க்கும்படி வேண்டுகிறோம்..........(நன்றி:பா.கணேஷ்)

9 கருத்துகள்:

 1. பெண்கள் இன்றேல் ஆண்கள் ஏது? பெண்மையின் பெருமையையும், பெண்ணாய் இருப்பதில் பெருமைப்படுவதையும் அழகாகச் சொல்லியிருக்கிறாய் எஸ்தர். கவிதை இனிமை. மிக ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 2. நான் ஓர் பெண் என்பதால் வரிகளின் அழகிய கர்வம் என்னிலும் தொற்றிக்கொண்டது .

  பதிலளிநீக்கு
 3. "அவர் ஓர் ஆண் என்பதால் அல்ல
  நான் ஓர் பெண் என்பதால"
  இவை மேலும் இக்கவிதைக்கு அழகு சேர்க்கும் வரிகள்..

  பதிலளிநீக்கு
 4. பெண்மைக்கு அழகே நாணம் தானே :)

  அழகான கவிதை.!

  பதிலளிநீக்கு
 5. படைத்தவனே தலை வணங்கும்
  அம்சம் பெண்மைக்கு உண்டு

  உண்மைதான் மகளே! அருமை யான கருத்து கவிதை நன்று!

  த ம ஓ 3  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 6. பெண்மை இன்றி மண்ணில் இன்பம் எதடா!
  கண்ணை மூடி கனவில் வாழும் மானிடா!
  ~~~~~~~~~~~~~~~~~~~~~~~
  நல்ல பாஸிடிவ் சிந்தனை கவிதையில் தொனிக்கிறது,,,
  அருமை...

  பதிலளிநீக்கு