சனி, 30 ஜூன், 2012

கல்லறைகளாக்காதீர் பெண்களே கருவறைகளை..

”தாய்மை” பெண்கள் அனைவருக்கும் இதன் மகத்துவம் இக்காலத்தில் புரிகிறதோ எனக்கு தெரியவில்லை????..

பண்டைய கிரேக்க, யூத சமுதாயங்களில் திருமணமாகாத பெண்களுக்கு ஓர் தனி மரியாதை இருந்தது, திருமணமான பெண்களுக்கு ஒரு மரியாதை இருந்தது. ஆனால் திருமணமாகி குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு மலடி எனும் இழிச் சொல்லே இருந்தது. இந்த விடயத்தை ஆராய்ந்தால் இது கிரேக்க யூத சமுதாயங்களுக்கு மாத்திரம் பொருந்த கூடிய விடயம் என எனக்கு தோன்றவில்லை இது என் தனிப்பட்ட கருத்து.

காரணம் என்னவென்றால் பெண்களின் இந்த நிலை பொதுவாக எல்லா சமுதாயத்திற்கும் பொருந்த கூடியதாக இருக்கிறது. (பெண்ணடிமை ஒரு புறம் இருக்கட்டும் அதை பற்றி நான் பேசவில்லை ) இந்து தேசத்தை பொறுத்தமட்டில் சந்நியாசிகளின் தோற்றம் அதிகம் அதிலும் ஆண் சந்நியாசிகள் அதிகம். ஆனால் பெண்கள் என்று வரும் போது மிக குறைவே ஆனால் அவர்களுக்கு மரியாதை இருந்ததை யாராலும் மறுக்க முடியாது. அது போல் திருமணமாகி குழந்தை பேறு அற்றவர்களுக்கு சமூகத்தில் ஒதுக்கு நிலையே மிஞ்சியது. அதனாலோ என்னவோ அக்கா பெண்கள் அனைவரும் தாய்மையின் மகத்துவத்தை அறிந்திருந்தனர்.

ஆனால் தற்கால நாகரீகமடைந்த சமுதாயத்தில் குழந்தை பேறு அற்றவர்கள்
ஒடுக்கப்படுவது என்பது குறைவு இது நாகரீகத்தின் வளர்ச்சியாக கூட இருக்கலாம். ஆனால் இம்முறை முற்று முழுதாக ஒழிந்து விட்டது என நான் கூறவில்லை தொடருகிறதுதான் ஆனாலும் குறைவு பெண்கள் இப்போது மாடல், அழகி, மிஸ்...... என பலவகையாக கட்டமைப்பு பதவிகள் வகிப்பதால் அவர்கள்களுக்கு இது ஒரு பொருட்டல்ல என எண்ணுகிறேன்.

கரு கலைப்பு , சிசு கொலை என பெண்கள் தங்கள் கருவறைகளை கல்லறையாக்குகிறார்கள். காதல் எனும் ஒன்றை சாட்டாக வைத்து திருமணத்திற்கு முன்னரான தகாத உடலுறவு பெண்களை கொலை காரிகளாக்குகிறது. காதல் மோகத்தால் தாம் செய்வது பிழை என் தெரிந்தும் அவ்வாறு பெண்கள் செய்கிறார்கள் நான் எல்லாரையும் குறை கூறவில்லை (தொப்பி அளவானவர்கள் போட்டு கொள்ளட்டும்). குழந்தை பிறந்தால் தம்“ அழகு பறிபோய்விடும் என எண்ணி உடலுறவின் போதே கருத்தடை மாத்திரைகளை பிரயோகித்து புனிதமான கருவறையை தீட்டு படுத்துகிறார்கள்.

என்னும் சில பெண்கள் மார்பழகு போய்விடும் என்பதற்காக தம் குழந்தைகளுக்கு தாய்பால் கொடுக்க மறுப்பது மிகமிக கொடுமை. உண்மையில் தாய்மையை முழுக்க அனுபவித்தவள் இத்தகைய கேடு கெட்ட வேலையை செய்யாள். மஞ்ஞத்திற்காக ஆசைபடுபவளே இதை செய்வாள் இத்தகைய மனுஷிகளை கண்டால் பாரதியில் கவி வரி ஒன்று என் உள்ளம் தொடுகிறது நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நெறி கெட்ட மனிதரை நினைக்க.....

உயிரை காப்பாற்றுவதற்காக ஏற்படுத்தப்பட்ட துறை மருத்துவ துறை. இதை சிலர் கடவுளால் தோற்றுவிக்க பட்டது என்று கூறுவார்கள் அப்படிப்பட்ட மருத்துவ உலகம் இன்று உலகம் காணா அந்த சிசுகளை பாவமறியா அந்த பாலகர்களை அழிப்பது நிஜாயமா??? கருத்தடைக்கு மாத்திரை ஏன் ???? கருவழிப்புக்கு மாத்திரை ஏன்????

ஒரு வேளை அறிருந்தது போல் இன்றும் பலவந்தமான சமூக அடக்குமுறை
குழந்தை பேறில்லாதவர்களுக்கு இருந்திருக்க இப்படி கருவழிப்புக்கள் சில சமயங்களில் இல்லாமல் இருந்திருக்கும்.

பெண்களே கேளீர் உங்கள் புனிதமான கருவறைகளை கல்லலைகளாக்காதீர் தாய்மையின் மேன்மை உணருங்கள் மஞ்ஞம் ஏறி உடற்சுகம் அனுபவிப்பது மட்டுமல்ல தாம்பத்தியம். இந்த பூமிக்கோர் உயிரை கொடுப்பதற்காக இடம்பெறும் உயிரோட்ட அனுபவம் தாம்பத்தியம் என்பதை நினைவிற் கொள்ளுங்கள்

17 கருத்துகள்:

 1. இந்த உலகில்., உருவான எந்த உயிரையும் அழிப்பதற்கு இறைவனுக்கு மட்டுமே அதிகாரம் உண்டு, இதை உணர்ந்தால் இத்தகைய பாவ செயல்களில் ஈடுபடமாட்டார்கள் எவரும்!

  நல்ல பதிவு சகோ!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் கருத்தும் நியாயமே

   மிக்க நன்றி கருத்துரைக்கு....

   நீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   நீக்கு
 2. நாட்டில் நடக்கும் தவறான நடப்பை கட்டுரையாக தந்தமைக்கு நன்றி....நல்ல ஆழமான கருத்தை தந்து இருக்கிறீர்கள் ....நல்ல பதிவு வாழ்த்துக்கள்....உங்கள் தளம் சிறக்க என்னை FOLLOWER ஆகிகொண்டேன்....

  புதிய வரவுகள்:
  கொடூரத்தின் மறுபெயர் இஸ்ரேல்(மனதை பிழியும் புகைப்படங்களுடன்)

  கருணாநிதி,ஜெயலலிதா இருவரில் நல்லவர் யார்?
  ,பில்லி சூனியம் செய்தால் எல்லாம் சரியாகிவிடும்

  பதிலளிநீக்கு
 3. பெண்களே கேளீர் உங்கள் புனிதமான கருவறைகளை கல்லலைகளாக்காதீர் தாய்மையின் மேன்மை உணருங்கள் மஞ்ஞம் ஏறி உடற்சுகம் அனுபவிப்பது மட்டுமல்ல தாம்பத்தியம். இந்த பூமிக்கோர் உயிரை கொடுப்பதற்காக இடம்பெறும் உயிரோட்ட அனுபவம் தாம்பத்தியம் என்பதை நினைவிற் கொள்ளுங்கள்//
  உணருவார்களா ? சகோதரியின் ஆதங்க வரிகள் . என்னிடத்திலும் இந்த ஆதங்கம் உண்டு .

  பதிலளிநீக்கு
 4. பலரும் மிகவும் ஜோசிக்க வேண்டிய காலத்தின் கட்டாயமான பதிவு ! புரியவேண்டியவர்கள் உணர்ந்து கொண்டாள் சிறப்பே!

  பதிலளிநீக்கு
 5. பெண்களே கருவறைகளை கல்லறைகளாக்காதீர்...//

  கொலைகாரர்கள் உணரவேண்டுமே...

  பதிலளிநீக்கு
 6. அருமையான கருத்தைச் சொல்லிய அழகான கட்டுரை படைத்திருக்கிறாய் எஸ்தர். இந்த ஆதங்க சிந்தனையுடன் நான் ஒத்துப் போகிறேன். இன்னும் நிறைய நிறைய எழுதுவதறகு உனக்கு என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 7. மிக்க நன்றி அங்கிள் தங்கள் கருததுக்கும் சிந்தனைக்கும்.....

  பதிலளிநீக்கு