ஞாயிறு, 17 ஜூன், 2012

cross dresser எனும் சிறு பாலினத்தாரை தெரியுமா?

இப்பதிவு சிலருக்கு புரியாததாக இருக்கலாம் ஆறுதலாக வாசித்தால் புரியும் என நம்புகிறேன்.

நான் எனது வலைப் பூவில் அதிகம் அடக்கு முறையில் சிக்கி தவிக்கும் மக்களுக்காக அவர்களின் நிலையினை வெளிப்படுத்தி எழுதுவதுண்டு. அதிலும் இது வரைக்கும் திருநங்கைகளை பற்றி நான் அதிகம் எழுதியுள்ளேன். பலர் ஏன் அதிகம் நீங்கள் திருநங்கைகளை பற்றி எழுதுகிறீர்கள்? என என்னை கேட்டதும் உண்டு அவர்களுக்கு ஒரே பதில்தான் நீங்கள் எழுதவில்லை அதனால் நான் எழுதுகிறேன்.

எனது முகப்புத்தகத்திற்கு ஒரு நாளைக்கு ஜந்திற்கு மேற்பட்ட நண்பர்கள் கோரிக்கை வருவதுண்டு. சில வேளைகளில் ஒரு சிலர் தம்மை cross dresser என தம்மை அறிமுகப்படுத்தி கொள்வதுண்டு. அதனால் அவர்களின் கோரிக்கைகளை நான் நிராகரிப்பதுண்டு. எனக்கு உண்மையில் மிக குழப்பமாகவே இருக்கும்  யார் இவர்கள் இவர்கள் எப்படிப்பட்ட உணர்வு கொண்டவர்கள் என அறியும் ஆவல் எனக்கு வந்தது. இணையத்திலும் தேடிப்படித்தேன் ஆனால் பெரிதாக தகவல்கள் ஒன்றும் கிடைக்கவில்லை. அதனால் இவர்களிடமே நேரடியாக கேட்கலாம் என்ற எண்ணம் வந்தது. அதனால் அதற்காக ஒருவரிடம் மனம் விட்டு பேசினே்.

இவர்களில் முதலில் ஆண் cross dresser ஜ பற்றி பார்ப்போம். இவர்கள் பிறப்பில் ஆணாக இருப்பார்கள். ஆனால் இவர்களுக்கு பெண் உடையில், பெண் அலங்காரத்தில் அதீத ஈடுபாடு உண்டு. தம்மை பெண்ணாக அலங்கரித்து பார்த்து மகிழ்வதில் அதீத ஆசை. பிறகு நீங்கள் யோசிக்லாம் திருநங்கைகளும் ஆரம்காலத்தில் இப்படித்தானே என்று அப்படியில்லை திருநங்கைகளுக்கும் இவர்களுக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது. இவர்கள் பெண் உடை மற்றும் அலங்காரத்தையே விரும்புவார்கள் தம்மை பெண் என்றும் அழைத்து கொள்வார்கள் ஆனால் அறுவை சிகிச்சை செய்து கொள்ளமாட்டார்கள் அதுமட்டுமல்ல இவர்களின் பாலியல் உடலுறவு ஈர்ப்பு சராசரியாக ஓர் ஆணுக்கு எப்படி பெண் மேல் காணப்படுமோ அப்படியே  காணப்படும். ஆனால் திருநங்கைகள் மனதளவில் மட்டுமல்ல உடலளவிலும் பெண்ணாக வாழ்பவர்கள். சிலர் இவர்களையும் திருநங்கைகள் என எண்ணுவதுண்டு இது மிக தவறு.

அதே போல் பெண்களிலும் உள்ளனர் இவர்கள் தங்களை ஆண் என்று நினைத்து கொண்டு ஆண் உடை மேலும் , அலங்காரத்தின் மேலும் அதீத ஈடுபாடு உண்டு ஆனால் அவர்களின் பாலியல் ஈர்ப்பு சராசரி பெண்ணுக்கு எப்படி ஓர் ஆண் மேல் இருக்குமோ அப்படியேதான் இருக்கும்.

உலகை நினைக்க வியப்பாக உள்ளது மனிதனை ஏன் படைத்தான் இறைவன் அதற்குள் ஏன் இத்தனை விந்தை வைத்தான். என்ற கேள்வி என்னுள் எழும்புகிறது.

3 கருத்துகள்:

 1. //பலர் ஏன் அதிகம் நீங்கள் திருநங்கைகளை பற்றி எழுதுகிறீர்கள்? என என்னை கேட்டதும் உண்டு அவர்களுக்கு ஒரே பதில்தான் நீங்கள் எழுதவில்லை அதனால் நான் எழுதுகிறேன்.//


  எல்லாரும் சொல்லும் ஒரு விஷயத்தையே
  பெயரும் பொருளும் மாற்றி சொல்வதில் பயனில்லை

  பிற சொல்லத்தயங்கும் சமூக உண்மைகளை நாம் சொல்லிடவேண்டும்
  அதுதான் சிறந்தது

  பதிலளிநீக்கு
 2. //உலகை நினைக்க வியப்பாக உள்ளது மனிதனை ஏன் படைத்தான் இறைவன் அதற்குள் ஏன் இத்தனை விந்தை வைத்தான். என்ற கேள்வி என்னுள் எழும்புகிறது.//
  அவன்தான் பதில் சொல்ல வேண்டும்!

  பதிலளிநீக்கு
 3. தோழி அறுவை சிகிச்சை செய்துகொள்ளவில்லை என்பதற்காக crossdresser ஐ நீங்கள் cross dresser எனும் சிறு பாலினத்தாரை தெரியுமா? என்று கேட்பது வியப்பாக உள்ளது... திருநங்கை என்ற அங்கீகாரம் கிடைப்பதற்கு முன்பு அண்களும் பெண்களும் என்னென்னவோ சொல்லி கேலிசெயதர்கள் இன்றைய திருநங்கைகளும் அன்றைய cross dresser தான். அறுவை சிகிச்சை செய்தலும் செய்யாவிட்டாலும் எல்லாரும் ஒன்றுதான்.. எந்த ஆணும் புடவை கட்டிக்கொள்ள ஆசைபடமட்டன்... அது அவனுக்கு அருவெறுப்பாக இருக்கும் பெண்மை குணம் உள்ளவன் தான் பெண்களின் உடைகளை அணிந்துகொள்ள தானாக முன்வருவான்... திருநங்கை என்ற அன்கீகரதிற்காக போராடியவர்களில் crossdresser தான் அதிகம்... பாலியல் தொழில் ஈடுபட விருப்பம் இல்லாத காரணத்தினால் தான் நங்கள் அறுவை சிகிச்சைக்கு முன்வரவில்லை... உங்கள் தெயவில்லாத கட்டுரை தவறு... crossdresser ஆகா இருப்பதே மேல் பல திருநங்கைகள் பாலியல் தொழில் செய்வதும் பிச்சை எடுப்பதும் அவமானம்... ஆணாகவும் பெண்ணாகவும் இருப்பவள் தான் திருநங்கை...

  பதிலளிநீக்கு