செவ்வாய், 31 ஜூலை, 2012

மரித்துப் பிழைத்தவள் 10 (இறுதி)


2000ம் ஆண்டில் பண்டைதரிப்பு பற்றிமா மாதா கோவிலில் அகதிகளாக எம் பெட்டி பொருட்களுடன் நின்றோம். அப்போது அங்கு கடைமையாற்றி ஒரு அருட் தந்தையின் உதவியுடன் அங்கே உடைந்து கிடந்த ஒரு வீட்டை சீர் செய்து 04 உறவு குடும்பங்களாக அங்கு தங்கினோம்..

பண்டதரப்பு மாதா கோவில்
யுத்தம் கரையோரத்தில் வியாபித்திருந்ததால். உட்பகுதியிலிருக்கும் பண்டைதெருப்பில்  ஓரளவு பயம் குறைவாகவே எங்களுக்கு இருந்தது. என் மச்சான் ,மச்சாள்,ஒன்றுவிட்ட சகோதரர்கள் என்று ஏறத்தாள பத்துக்கு மேற்பட்ட 12 வயதுக்கும் கீழ்பட்ட சிறு பிள்ளைகள் இருந்தோம் எங்கள் கலடவிக்கு பங்கம் ஏற்படும் என பயந்து எங்கள் பெற்றோர் புனித யசிந்தா பாடசாலையில் எங்களை கலிவி கற்க அனுப்பினர். அது எங்களுக்கு புதிய உலகை தந்தது புதிய இடம் , புதிய நண்பர்கள் புதிய மனிதர்கள் என்று எல்லாம் புதுமையாக இருந்தது அது எங்களுக்கு புதிய உற்சாகத்தை கொடுத்தது.

மேலும் இங்கிருந்து சாவதை விட வெளிநாட்டில் புலம் பெயர்ந்த தமிழர்காளய் வாழ்வதே மேல் என்று என் பெரியம்மா தன் தன் பிள்ளைகளுடன் என்னையும் இணைத்து ஒரு ஏஜன்ற் உதவியுடன் பிரான்ஸ் நாட்டிற்கு அனுப்பி விட்டார். என் அம்மாவின் தங்கை ஏற்கனவே அங்கு குடியேறியிருந்ததால் எங்கள் பராமரிப்பு இலகுவானனது.

2002 ல் யுத்தம் ஓய்ந்து ஏ9 பாதை திறக்கப்பட்டது. அப்போது வன்னிக்கு குடியேறியவர்கள் சொந்த இடத்தில் குடியேற அனுமதிக்கப்பட்டனர். 05 வருட போர் நிறுத்தத்தின் பின் 2007ல் வெடித்த இரத்தம் கரைந்த சோக கதை அதாவது உள்நாட்டு போரின் இறுதிகட்டம், முள்ளிவாய்கால் சோகம் எல்லாம் உலகறிந்ததே மிண்டும் அக்கொடிய நிகழ்வை புரட்டி பார்க்க எனக்கு விருப்பம் இல்லை.

மிக்க நன்றி தோழர்களே இத்துடன் என் மரித்து பிழைத்தவள் தொடர் முடிந்து விட்டது... இது வரை ஆதரவு வழங்கிய உங்களுக்கு மிக்க நன்றி......

ஞாயிறு, 29 ஜூலை, 2012

அறிந்ததும் அறியாததும் (கிறிஸ்தவ பெண்கள் ஆலயங்களில் தலைமூடுவது ஏன்?)

கிறிஸ்தவ பெண்கள் தேவாலயங்களில் தலையை மூடுவது ஏன்????

கிறிஸ்தவ பாரம்பரியத்தின் படி தேவாலயங்களிலும், வழிபாடுகளிலும்,வேத நுாலை வாசிக்கும் போதும் பெண்கள் தலை பட்டி அணிந்து கொள்ள வேண்டும்.இதை துப்பட்டி என்றும் அழைப்பர். பலருக்கு ஏன் அவர்கள் தலைப்பட்டி போட்டு தலையை மூடுகின்றனர் என்பது தெரிந்தும் இருக்கலாம் தெரியாமலும் இருக்கலாம். தெரியாதவர்கள் இதோ அறிந்து கொள்ளுங்கள்.

கிறிஸ்தவ வேத நுாலில் இது ஒரு பாரம்பரிய முறைமை மட்டுமல்ல, கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டிய முறையும் கூட. இவற்றை கூறும் வேத வசனங்கள் இவையே....

I கொரிந்தியர் 11:5 ஜெபம்பண்ணுகிறபோதாவது, தீர்க்கதரிசனஞ் சொல்லுகிற போதாவது, தன் தலையை மூடிக்கொள்ளாதிருக்கிற எந்த ஸ்திரீயும் தன் தலையைக் கனவீனப்படுத்துகிறாள்; அது அவளுக்குத் தலை சிரைக்கப்பட்டது போலிருக்குமே.

I கொரிந்தியர் 11:6 ஸ்திரீயானவள் முக்காடிட்டுக்கொள்ளாவிட்டால் தலைமயிரையும் கத்தரித்துப்போடக்கடவள்;தலைமயிர் கத்தரிக்கப் படுகிறதும் சிரைக்கப்படுகிறதும் ஸ்திரீக்கு வெட்கமானால் முக்காடிட்டுக் கொண்டிருக்கக் கடவள்.

I கொரிந்தியர் 11:7 புருஷனானவன் தேவனுடைய சாயலும் மகிமையுமாயிருக்கிறபடியால், தன் தலையை மூடிக்கொள்ள வேண்டுவதில்லை; ஸ்திரீயானவள் புருஷனுடைய மகிமையாயிருக்கிறாள்.

I கொரிந்தியர் 11:10 ஆகையால் தூதர்களினிமித்தம் ஸ்திரீயானவள் தலையின் மேல் முக்காடிட்டுக்கொள்ளவேண்டும்.

I கொரிந்தியர் 11:13 ஸ்திரீயானவள் தேவனை நோக்கி ஜெபம் பண்ணுகையில், தன் தலையை மூடிக்கொள்ளாமலிருக்கிறது இலட்சணமாயிருக்குமோ என்று உங்களுக்குள்ளே நிதானித்துக் கொள்ளுங்கள். 

இவ்வாறு வேத வசனங்களுக்கு இணங்க பெண்கள் தங்கள் தலையை முக்காடிட்டு மறைத்து கொண்டு வழிபாடுகளில் கலந்து கொள்ள வேண்டும் என்பது கிறிஸ்தவ சட்டம். நாகரீக மாற்றங்கள் இப்போது பெண்களிடையே மாற்றங்களை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது என்பது உலகறிந்த உண்மை. அதன் காரணமாக பெண்களிடையே முக்காடு  போட்டு கொள்ளும் பழக்கம் அருகி வருகிறது. எது என்னவோ பழைய பாரம்பரியங்களை விட்டு கொடுக்க நான் தயாராக இல்லை..

புதன், 25 ஜூலை, 2012

திரைப்படங்களும் திருநங்கைகளும்

தயவு செய்து வாசித்து விட்டு கருத்துரையிடுங்கள் 

வெகு சன தொடர்காடலில் மக்களிடையே பிரசித்தி பெற்று காணப்படுவது சினிமா மற்றும் சின்னத்திரை இதில் அதிகம் பங்கு வகிப்பது.திரைப்படங்கள். இவை மனித சமுதாயத்தில் விளிப்புணர்ச்சி ஏற்படுத்தும் மூலாதாரமாக செய்படவேண்டுமே அன்றி. அவற்றை நாசமாக்க கூடாது.


திருநங்கைகளையும் அவர்களை ஊடகங்கள் எவ்வாறு சித்தரிக்கின்றன என்பது பற்றியும் பலர் எழுதியிருக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் திருநங்கைகளே. வேதனை அனுபவித்தவர்களுக்கே அதன் வலி புரியும் மற்றவர்கள் திருநங்கைகளை பற்றி எழுதுவதற்கும் ,திருநங்கைகளே தங்களை பற்றி எழுதுவதற்கும் நிறைய வேறுபாடு உண்டு. மற்றவர்கள் அவர்களின் வேதனையை தொட்டுச் செல்வர். ஆனால் திருநங்கைகள் அதனுள் இருக்கும் வலியை அப்பட்டமாக்குவர்.அந்த வகையில் திரைப்படங்களில் திருநங்கைகளின் அவல நிலை எழுத்தாளர் லிவிங் ஸ்மைல் வித்யா அவர்கள் தன் வலைப் பூவில் அதிகம் இந்த விடயம் பற்றி பேசியுள்ளார். இறுதியாக சகோதரி ஆயிஷா பாரூக் அவர்கள் தன் திருநங்கை தொடரின் 4ம் பாகத்தில் இது பற்றி பேசியுள்ளார். முக்கிய விடயம் இவர்கள் இருவருமே திருநங்கைகள்.


நான் அறிந்த வரை ஒரு தலை ராகம் முதற் கொண்டு இப்போது வந்த லீலை வரை அதிகமாக திருநங்கைகளை ஒரு கேவல ஜந்துவாக இயக்குனர்கள் காட்டியிருப்பார்கள். பாலியல் சுகத்திற்கு அலைபவர்களாகவும், காம பார்வைபார்த்து ஆஆஆ மாமா என்ற நச்சரிக்கும் குரலுடன் ஆண்களை வட்டமிட்டு கைதட்டும் எழிய பிறப்பாக இயக்குனர்கள் காட்டியிருப்பார்கள். இதெல்லாம் போக முகச்சவரன் செய்து தாடி மீசை எடுத்து பெண்ணுடை போட்டு கொள்பவர்களாகவும் காட்டியிருப்பார்கள் (அப்பு).


திருநங்கைகள் முகச்சவரன் செய்வது கிடையாது முகமுடிகளை வேரோடு பிடிங்கி எடுக்கும் முறையைதான் பின்பற்றுகின்றனர். அந்த காலமும் இப்போது படகேறி போய்விட்டது. இப்போது ஆர்மோன் மாத்திரைகள் மூலமும், லேசர் கதிர்கள் மூலமும் நிரந்தரமாக முடிகளை அகற்றி பெண்களுக்கு ஒப்பான தோற்றத்தோடு இருக்கிறார்கள்.


இது என்னவென்றால் ஆண்களுக்கு பெண்ணுடை போட்டு அவர்களை திருநங்கைகளாக காட்டுகின்றனர். ஆண்களுக்கு பெண்ணுடை அணிந்திருப்பதாக தெரிபவர்கள் நிஜமான திருநங்கைகள் கிடையாது அவர்களை crossdress என்று அழைப்பர். இவர்களுக்கும் திருநங்கைளுக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது.இதை நான் ஏற்கனவே  crossdress எனும் சிறுபாலினத்தாரை அறிவீர்களா? என்ற தொடரின் மூலம் உங்களுக்கு அறியப்படுத்தினேன்.


இப்படியெல்லாமாக திருநங்கைகள் திரைப்பட இயக்குனர்களால் கேலிச்சித்திரங்களாக்கப்பட்டு நெருக்கப்பட்டு மனிதர்களால் அவமானச் சின்னங்களாக நினைக்கப்படும் அளவிற்கு தள்ளப்பட்டுவிட்டனர்.


திரைப்படங்களின் எல்லை மீறல்களை கட்டுப்படுத்த ஏற்படுத்தபட்டது தணிக்கை குழு இது மனித சமூதாயத்திற்கு தேவையற்ற பல விடயங்களை திரையில் ஊலாவ விட்டு தேவையானவற்றை தணிக்கை செய்யும் நாசகார கும்பலாகவே நான் கருதுகிறேன். பொதுவாக திரைப்படங்களில் திருநங்கைகளை கேலம் செய்வதை இது கண்டுக்கிறதே கிடையாது. இப்படிப்பட்ட குழு இருந்தென்ன இல்லாவிட்டால் என்ன?


இது எல்லாம் போக சமூகத்தில் நல்ல நிலையில் இருக்கும் திருநங்கைகளை கூட இவர்கள் விட்டு வைக்கவில்லை. பாவம் அவர்களே எவ்வளவு அவமானங்கள் கஸ்டங்கள் துன்பங்கள் எல்லாவற்றையும் தாண்டி இன்று நல்ல நிலைக்கு வந்துள்ளனர் அவர்களை கூட மிச்சம் விடாமல் கிண்டல் செய்கிறார்கள் (லீலை திரைப்படத்தில் நடிகர் சந்தானத்தால் ரோஸ் கிண்டல் செய்யப்பட்டார்).


இருப்பினும் சில மனித நேயமுள்ள சில இயக்குனர்கள் (மணிரத்னம்,மிஸகின்,கரி,லாரன்ஸ்,விஜயபத்மா) திருநங்கைகளை மனிதர்களாக காட்டியுள்ளனர். இப்போது திருநங்கைகள் திரைப்படத்தின் நாயகிகளாகவே உருவெடுத்துவிட்டனர். நர்த்தகி திரைப்படத்தில் கல்கி, பால் திரைப்படத்தில் கற்பகா போன்றோரை கூறலாம்.


இதெல்லாம் போய் இன்று திருநங்கை ரோஸ். ஓர் படத்தை தானே இயக்கி நடித்து வெளியிட உள்ளார். இத்திரைப்படம் ஆங்கில மொழயில் தயாரிக்கப்டுகிறது. யூலை 28 2012 இதன் ஆரம்ப விழா இடம் பெற இருக்கிறது.
இத்திரைப்படம் கிரிக்கட் சூதாட்டத்தை மையப்படுத்தி வெளிவர இருக்கிறது. ஓர் காலத்தில் கேவல யந்துவாக சினிமாவினால் அடையாளம் காணப்பட்ட திருநங்கைகள் இன்று திரைப்பட நாயகிகளானார்கள் என்பது நாகீகத்தின் முன்னேற்றம் கிடையாது திருநங்கை சமூக போராளிகளின் முன்னேற்றமே..


அடுத்த தலைமுறையினராவது உணர்ந்து தெளிந்து திபை்படங்களை இயக்கட்டு்ம்.


திருநங்கை ரோஸ் அவர்களுக்கு எனது வலைப் பூ சார்பாகவும் என் வலைத்தள நன்பர்கள் சார்பாகவும் என வாழ்துக்களை கூறுகின்றேன்...

காதலன் தந்த வலிகள்

இடியின் வீரியத்தை
கூட தாங்க முடிந்த
என்னால் - உன்
பாாவையின் வீரியத்தை 
தாங்க முடியவில்லை

உன் பார்வையிலே
 தடுக்கி விழுந்தேன் 
என்னும் எழவில்லை 
விழுந்த இடத்தை விட்டு

உனக்கும் எனக்கும்
இறைவன் போட்ட
காதல் எனும் முடிச்சு
நீயே அவிழ்த்தாலும்
அவிழ்க்கப்படாது...

உன் பெயரை கூறி
என் தோழயரும் 
உன் தோழர்களும்
கிண்டல் செய்யும் போது
கோபம் கொண்டேன் முகத்தில்
மகிழ்ந்தேன் உள்ளத்தில்

என் பெண்மையை எனக்கு
அறிமுக படுத்தியவன் நீதானே
உன்னை காதலித்த பிறகே
நான் பெண்ணானதன் 
உண்மை புரிந்தது.

உன் பெயரை - என்
கைகளில் பொறித்தேன்
உன்னை மிகையாக 
காதலிக்கிறேன் - என்று
காட்ட அல்ல - என்
இறுதி ஊர்வலத்தில் - உன்
பெயராவது என்னுடன் வரட்டுமே
என்றுதான்.....

இது வரை நீ எனக்கு
ஒன்றும் செய்யவில்லை
நான் அமரத்துவம்
அடைந்த பிறகாவது - என்
கல்லறையில் ஒரு பூச்செடி
நட்டு வை
உன் கை பட்ட 
அம் மரத்தின் பூவின்
வாசனையை நுகர்ந்தாவது
என் ஆன்மா உறங்கட்டும்.
திங்கள், 23 ஜூலை, 2012

மரித்துப் பிளைத்தவள் 09

யாழ்ப்பாண கோட்டை
மிக நீண்ட இடை வேளையின் பின் மரித்துப் பிளைத்தவள் அனுபவ தொடரை எழுதுகிறேன். பல அலைச்சல் பயணங்கள், இடையூகள், அடக்குமுறைகள் என எல்லாவற்றையும் அனுபவித்துவிட்டேன் ஓர் இலங்கை தமிழச்சியாய் பிறந்ததற்காக. அதனால்தான் இவ்வளவு காலதாமதம்...

2000ம் ஆண்டு யாழ்பாண கரையோர மக்களை இடம் பெயருமாறு ராணுவம் எச்சரித்தது. அப்போது எனக்கு வயது எட்டு நடந்த அனைத்து சம்பவங்களும் திரைப்படம் போல கண் முன் ஓடுகிறது.

முக்கியமாக பாஷையூர்,குருநகர்,நாவாந்துறை,கொழும்புத்துறை போன்ற கரையோர ஊர்களில் வாழ்ந்த மக்கள் யாழ்ப்பாணத்தின் உட்பகுதிக்குள் இடம் பெயர்ந்து செல்ல வேண்டிய நிலை. எல்லாரும் மூட்டை முடிச்சுகளை கட்டிக் கொண்டு நடை பயணமாக புறப்பட்டோம் யாழ்ப்பாண ஒல்லாந்தர் கோட்டையிலிருந்து ராணுவம் கல்லடி விடுதலைப் புலிகளின் முகாம்களில் தாக்குதல் நடத்தினர் விடுதலைப் புலிகளும் பதிலுக்கு கோட்டை மீது தாக்குதல் நடத்தினர். யாழ்ப்பாணமே புழுதி மயமானது அனைவரும் பயத்தோடும் நடுக்கத்தோடும் நடைபயணமானோம்.
யாழ் கோட்டை வாயில்


நாங்கள் புறப்பட்டது மாலை நேரமென்றபடியால் இருட்டில் வயசுப் பெண்களுடன் பணம் செல்ல எல்லோரும் துணியவிலலை. இதனால் நாவாந்துறையில் அன்றைய இரவுப் பொழுதை கழிப்பதற்காக பாளயம் அமைத்தோம். அதற்கு துணையாக அங்குள்ள கிறிஸ்தவ பாதியார்கள் புனித. நீக்லார் தேவாலய வளாகத்தை ஒதுக்கி தந்தனர் மக்கள் கூட்டம் அதிகமாகவே   நாவாந்துறை மக்கள் தங்கள் வீடுகளில் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தனர்.

நாங்கள் புனித.நீக்லார் தேவாலய பாடசாலை மண்டபம் ஒன்றிற்குள் அன்றை இரவை கழித்து அதிகாலையிலேயே பணத்தை ஆரம்பித்தோம். எங்கள் உறவினர்கள் எல்லாரும் பண்டதெருப்பு என்ற ஊர் பாதுகாப்பானதாக கூறினர் அதனால் எல்லோம் அங்கே போய் குடியிருக்கலாம் என தீர்மானித்து அவ்விடம் நோக்கி பயணமானோம்..

தொடரும்.....

ஞாயிறு, 22 ஜூலை, 2012

அறிந்ததும் அறியாததும் 01 (யானையின் இலத்தி)

நான் அறிந்ததும் அறியாததும் என்ற பகுதியில் தர போகும் விடயங்கள், சிலவேளைகளில் நீங்கள் அறிந்திருக்கலாம்,அறியாமலும் இருக்கலாம். ஆனால் நிச்சயம் அறிந்து கொள்ள வேண்டிய விடயங்கள்......


கிருமிகளை அழிக்கும் யானையின் இலத்தி


பல வகையான மிருகங்களின் கழிவுகளில் இருந்து பல மருத்துவ மூலாதாரங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது யாரும் மறுக்க முடியாத உண்மை. உதாரணமாக மாடு ஆடு போன்ற மிருகங்களின் கழிவுகளில் இருந்து இயற்கை உரம் தயாராகிறது. இந்த வகையில் யானையின் இலத்தியில் நுண் கிருமிகளை அழிக்கும் சக்தி உண்டு இதை நன்கு உணர்ந்தவர்கள் இலங்கை வாழ் மக்கள்.

போர்த்துக்கேயர் காலத்திலேயே இலங்கை யானைக்கு பெரும் கிராக்கி இருந்தது. தந்தம்,முடி போன்றவற்றோடு இலத்தியும் விற்பனையாகியிருக்கிறது.

வீட்டில் சாம்பிராணி காட்டும் பழக்கம் வெளிநாட்டவர் வருகையின் பின் அடையாளம் கண்டு கொண்டதாயினும். யானையின் இலத்தியை வைத்து புகை காட்டியவர்கள் அதிகம். நுளம்பு, ஈ போன்றவற்றை ஒழிக்க யானையின் இலத்தி பலம் மிக்க ஆயுதம்

காட்டு பகுதி கிராம புற மக்கள் தங்களுக்கு பிறந்த குழந்தைகளுக்கு யானை இலத்தியுடன் மஞ்ஞள் கலந்த புகையை காட்டுவர். இது தொற்று நோய் ஏற்படுவதை தடுக்கவே இவ்வாறு செய்வர். காற்றில் கலந்திருக்கும் நுண்கிருமிகளையும் இது நொடியில் கொன்று விடும்.

ஒரு காலத்தில் அத்தியாவசிய தேவையாகவே கருதப்பட்ட இந்த யானை இலத்தி. இன்று இரசாயன உலக மாற்றத்தால் கிராக்கி இழந்து போனது வருந்த தக்கது. இரசாயன கிருமி நாசினிகளை பாவிப்பதை தவிர்த்து இப்படிப்பட்ட இயற்கை கிருமி கொல்லிகளை பயன்படுத்துவது நமக்கு மிக்க நலம்..

ஜயோ பெரிய தலையிடி

வணக்கம் என் அருமை தோழமைகளே. வீசா தொடர்பான  வேலைகளின் நிமிர்த்தம் கணினி பக்கமே தலை சாய்க்க முடியவில்லை. உங்கள் வலைத்தளத்திற்கும் சமூகம் தரவில்லை. யாரிடம் மாட்டி கொண்டாலும் இலங்கை அரசிடம் மாட்டிக் கொள்ள ’கூடாது இதற்கு நானே சிறந்த எடுத்துக்காட்டு

இனி கொஞ்ஞம் நான் விடுதலை தொடர்வேன் எழுத்துக்களை.....

வியாழன், 12 ஜூலை, 2012

விருதை பகிர்ந்து கொள்கிறேன்என் வலைப்பதிவை ஆரம்பித்து ஏழு மாதம் முழுதாக நிறைவடைந்து விட்டது. முகம் தெரியாத தெரிந்த பல உறவுகள் எனக்கு கிடைத்தன. அதோடு என் வலைப்பதிவிற்கும் நல்ல வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கிறது

அந்த வகையில் அன்பின் உறவுகள் பல தங்களுக்கு கிடைத்த விருதை என்னுடன் பகிர்ந்து மகிழ்ந்தனர். இது வரை எனக்கு நான்கு விருதுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இறுதியாக செய்தாலி அங்கிள் எனக்கு இந்த நான்காவது விருதை பரிந்துரை செய்தார் நானும் மகிழ்வுடன் பெற்று கொண்டேன். நேரப் பிரச்சினை காரணமாக இவ்விருது பற்றி இப்போதுதான் பேச முடிகிறது. செய்தாலி அங்கிளுக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கிறேன். அத்தோடு அவர் வலைப் பதிவுகள் அனைத்தும் வெற்றி பெற என் வாழ்த்தி இறைவனை வேண்டுகிறேன்.

இந்த விருதை என் மூன்று உறவுகளுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
1.ஆயிஷா பாரூக் என்று தன் பெரிலேயே வலைப்பதிவை கொண்ட சகோதரி ஆயிஷா பாரூக்

2. என் ஜன்னலுக்கு வெளியே ஆசிரியை சகோதரி நிரஞ்சனா

3. மாலதியின் சிந்தனைகள் ஆசிரியை மாலதி அக்கா அவர்கள்.

இவர்களுக்கு இவ் விருதை பகிர்கிறேன்....

செவ்வாய், 10 ஜூலை, 2012

புது சிறகு முளைத்த பறவை நான்....

சிறகை இழந்த பறவை நான்
பறக்க நினைக்கின்றேன்
முடியவில்லை என்று நான்
புலம்பி அழுகின்றேன்.
எதற்கு படைத்தாய் இறைவா
என நான் கேள்வி கோர்கின்றேன்.
பதிலை நீயே சொல்லிடு
இறகை மாற்றி தந்திடு

சொந்தம் எல்லாம் விலகி ஓடிற்று
பாழமய் போன
ஒடிந்த சிறகால்
உற்ற துணையாய் எண்ணியவனும்
விலகி நடந்தான்
ஒடிந்த சிறகால்.

சித்தம் தெளிந்து புறப்பட்டேன்
ஒடிந்த சிறகினை சரி செய்ய
போன இடங்களில் அவமானம்
தற்கொலை உந்துதலும்
வந்ததுவே
அத்தனையும் தாங்கிய இறுமாப்புடன்
சரி செய்தேன் என் சிறகு தனை

பறந்தேன் பாடினேன்
ஆர்பரித்தேன் குதுாகலித்தேன்
புதிதாய் நானும்
புதுப் பிறப்பானேன்

பிரிந்த சொந்தம் சேர்ந்தேனே
புதிய காதலும் கொண்டேனே
பது சிறகு முளைத்த பறவை நானே...

வியாழன், 5 ஜூலை, 2012

புனித பிலோமினா (வீர மங்கையின் வரலாறு)


”புனித” என்ற வார்த்தையை பார்த்ததும் ஏதோ சமய பிரச்சாரமாக இருக்க போகுதோ என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் நிச்சயம் அது கிடையாது. தன் தீர்மானத்தில் உறுதியும் ஆடவர் முன் தலை குனியா வீரமும் கொண்ட ஒரு பெண்ணின் வரலாறே இது.

கத்தோலிக்க கிறிஸ்தவ உலகில் பல புனிதர்கள் உள்ளனர். புனிதர்கள் என்றால் இவ்வுலக வாழ்வை புனிதமாக வாழ்ந்து இறைபதம் அடைந்து மக்களுக்கு தமது பரிந்துரைகள் மூலம் இறைவனிடம் அருளை பெற்று கொடுப்பவர்கள். அந்த வரிசையில் பிலோமினாவும் ஒரு புனிதரே.. வரலாற்று துறை பாடத்தில் கிறிஸ்தவ நாகரீகத்தை கற்போர் நிச்சயம் இவரது வரலாற்றை கடந்தே ஆக வேண்டும்.

இவரின் வரலாறு கிட்டத்தட்ட கி.பி 1500ம் ஆண்டளவில் ஆரம்பிக்கிறது. கிரேக்க அரச வம்சத்தில் இளவரசியாக இவர் பிறந்தார். பல தெய்ய வழிபாட்டில் ஈடுபட்டு வந்த இவர் பெற்றோர்க்கு பல ஆண்டு காலம் பிள்ளைகள் இல்லை கிறிஸ்தவத்தை இறிந்து அதை தழுவிய பிறகே புனித பிலோமினா அவர்களுக்கு மகளாக பிறந்தார். பி லோமினா (fi lomna) என்றால் ஒளியின் மகள் என பொருள்படும். அழகு இவர் தனிதன்னை இவர் காலத்தில் இவரைப்போன்று ஒரு மங்கையரும் அழகில் கிரேக்கத்தில் இல்லை என்பது வரலாறு கூறும் உண்மை.

இவர் அரச குமாரியாக இருந்தாலும் கூட தன் வாழ்வை முழுவதும் இயேசுவிற்கு அர்ப்பணித்து அவரையே தம் மணவாளனாக ஏற்று வாழந்து வந்தார். அக்காலத்தில் ஆட்சி செய்த உரோம் அரசன் இவரை மணம் செய்ய விரும்பினான் ஆனால் பிலோமினா அவர் விருப்பத்திற்கு உடன் வரவில்லை. அதனால் அவ்வரசன் பிலோமினாவை கைது செய்து சிறை வைத்தான். சிறையில் இருக்கும் போதே அவ்வரண்மனையில் பலரை மனம்திருப்பினார். நல் வழி காண்பித்தார். ஏன் அரசியை கூட இறைபதம் கொண்டு வந்தார்.

இதனால் அரசனின் கடுங்கோபத்திற்கு ஆளானார். அரசன் துர் பெண்களை அவர் இருக்கும் சிறயில் விட்டு அவரை மனமாற்றப் பார்த்தார் ஆனால் மனம்மாறி நன்நெறி கற்றனர் அத்துர் பெண்கள்.

இதனால் மேலும் கோபம் கொண்ட அரசன் அவரை கசையடிகளுக்கு உட்படுத்தினார் இயேசுவைப்போல் வேதத்திற்காக கசையடி வாங்கிய ஒரேயொரு பெண் என்ற பெருமை புனித பிலோமினாவை சாரும்.

சாதாரண கசையடிகள் கிடையாது ஒரு பெண்னை திருமணம் செய்து கொள்மாட்டேன் என்று கூறியதற்காக சிறை வைத்து அந்த சிறையில் எக்காரணத்திற்காக மணம் வேண்டாம் என்றாலோ அக்காரணத்தையே பரப்புகிறாளே என்று நிர்வாணமாக பல கடை போராளிகள் முன் ஒரு பெண்ணை கசையால் அடத்து துன்பப்படுத்தினர்.

அக்காயங்களோடு 37 நாட்கள் சிறையில் அவர் இருந்தார். அப்போது துாய மரியாளை காட்சியில் கண்டதாக வரலாறுகள் கூறுகின்றன. அதுமட்டுமல்ல அவர் காயங்களை வான துாதர்கள் தேற்றியதோடு அவர் இருந்த சிறயில் ஒரு வித நறுமணம் வருவதை அரண்மனை காரர்கள் எல்லாரும் உணர்ந்தனர்.

பின் சிறையிலிருந்து அற்புத விதமாக அவர் வெளியில் கொண்டு வரப்பட்டார். வெளியே வந்து இயேசுவைப் பற்றி ஊரெங்கும் போதித்தார். இச்செய்தி அரசனுக்கு வரவே அவர் சிறை காவலர்களை அனுப்பி பிலோமினாவை கைது செய்ய சொன்னார் ஆனால் சிறை காவலர்கள் அவர் அருகில் செல்ல கூட தயங்கினர். ஒரு வழியாக பிலோமினாவை கைது செய்து கழுத்தில் இரும்பு சங்கிலிகளை கோர்த்து. அதனுடன் நங்கூரத்தையும் கட்டி தைபர் கணவாயில் (நதியில்) வீசினர். ஆனால் அவர் போட்டிருந்த துணி கூட நனையாமல் கரையொதுங்கினார்.

அரசன் அவரை மீண்டும் பிடித்து இழுத்து வந்து உரோம் நகர தெருக்களினுாடாக நிர்வாணமாக இழுத்து வந்தான். பின் அம்பு மழைகளை அவர் மேல் பொழிய செய்தான் அவர் மயங்கவும் இல்லை தன் புன் சிரிப்பை இழக்கவும் இல்லை. இதற்கும் அவர் சாகவில்லையென்று ஈட்டிகளால் பல கொடிய ஆடவர்களை கொண்டு அவருமைய பெண்மையின் அடையாளங்கள் வஞ்சிக்கப்பட்டன.

அவர் இறை புகழை் பாடி இறந்தார் அவர் இறந்ததும் ஒரு குகையில் துாக்கி இவர் உடலை வீசினர்.1833 ல் அவருடைய புனித பண்டங்கள் அக்குயைில் கண்டு பிடிக்கப்பட்டன. கல்லறை திறக்கும் போதே அந்நறுமணம் உரோம் நகரையே சுதாகரித்து கொண்டது. வரலாற்று ஆய்வார்களின் கூற்றுப் படி புனிக பிலோமினா இறக்கும் போது அவரது வயது 35 க்கும் குறைவானதாக இருந்திருக்கும்.

ஆண்மையின் கோர தாண்டவத்திற்கு அடிபணியாதவள் எவளும் வீர மங்கைதான் இப் புனித வதியை போன்று...

செவ்வாய், 3 ஜூலை, 2012

சுற்று சூழல் பாதுகாப்பு தொடர்பாக அஜந்தா பரேராவுடன் இனணந்த என் எண்ணம்..

யாழ்ப்பாண அமெரிக்க மூலை (corner) மூலமாக. அமெரிக்க துாதரக அனுசருனையுடன் சுற்று சூழல் பாதுகாப்பு வேலை திட்டத்தின் பங்காளியாக என்னையும் ஒரு சில நண்பர்களையும் அழைத்திருந்தனர். இதற்கு தலைமை தாங்கியவர் பல நாடுகளில் சுற்று சூழல் பாதுகாப்பு தொடர்பாக பல பட்ட படிப்புகளை மேற் கொண்ட திருமதி. அஜந்தா பெரேரா அவர்கள்.
அஜந்தா பெரேரா.

ஆரம்பத்தில் இவர் ஓர் சிங்களவர் எப்படியும் கொஞ்ஞம் கஸ்ரமாகத்தான் இருக்குமென எண்ணினேன் ஆனால் என் எண்ணம் முற்றும் தவிடு பொடியானது. அவர் எங்களுடன் ஒரு அம்மாவை போன்று பழகினார்.

எங்களின் வேலைத்திட்டம் யாழ்ப்பாணத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்த குடியேறு கிராமமான மணியந்தோட்டத்தில் அமைந்திருந்தோம் முதற்கட்ட பணியாக அங்குள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ஒவ்வொரு தென்னங்கன்று வீதம் நுாறு குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. எப்படியும் கன்று வளர்ந்து பலன் தர குறைந்தது ஜந்து வருடமாவது ஆகும் இதனால் அஜந்தா அவர்கள் பழைய பொருட்களை மீள் சுழற்சி செய்து விலையேற்றுவதில் கைதேர்ந்தவர். அந்த மக்களுக்கு பல வகையான தேவையற்ற பொருட்களை அரங்கார பொருட்களாக மாற்ற கற்று கொடுத்தார்.
ajantha pereta
அது மட்டுமல்ல சுற்றாடல் எமக்கு எவ்வளவு மிக முக்கியம் என உரையும் வழங்கினார் அவரின் உரையாடல் ஆங்கிலத்தில் இருந்ததால் தமிழ் ஆசிரியர் ஒருவர் அதை தமிழில் மொழி பெயர்த்தார்.

நாமும் நம் சுற்று சூழல் தொடர்பான விடயங்களில் மிகவும் கவனம் தேவை. மரம் அனைத்து உயிர்களும் வாழ மூலகாரணி. இதை அழித்து நாம் வாழலாம் என கனவு காண வேண்டாம்.

முன்னய காலங்களில் மழையிலும் வெய்யிலிலும் தம்மை பாதுகாத்து கொள்ள மனிதர்கள் வீடுகள் அமைத்தனர் ஆகால் இப்போது ஆடம்பரத்துக்காகவும், பொருளாதாரத்துக்காகவும் , வர்த்தகத்திற்காகவும் காடுகளை அழத்து அடுக்கு மாடிகள அமைக்கின்றனர். இது எல்லாம் அவசியமா? இந்தோனேசியா இன்னும் பத்து வருடத்தில் மிக பெரிய ஆபத்தை சந்திக்கவுள்ளது இயற்கை வழங்கள் அனைத்தும் சூரையாடபட்டு வர்த்தகத்திற்காக பயன்படுகின்றன.

எமக்கு தேவையில்லை என நாம் வீச கூடிய பொருட்களான பழைய காகிதங்கள், தேங்காய் மூடிகள்(சிரட்டை), பழைய துணிகள், மரத்து பிசின், மூங்கில் தடிகள், இறுவெட்டுக்கள் (சி.டி) போன்றவற்றை வைத்து விதம்விதமான பொருட்களை உருவாக்கலாம்.

இவை அஜந்தா பெரேரா அவர்களின் உரையின் சாராம்சம்

மிகவும் பயன்மிக்க இந்த கலந்துரையாடலில் எனக்கு யாழ்ப்பான சுற்று சூழல் கழக அங்கத்துவ அனுமதியை அமெரிக்க துாதரக அனுசருனையுடன் அஜந்தா அவர்கள் வழங்கினார்.

இந்த பதிவை நான் என் சுய கௌரவத்திற்காக எழுதவில்லை நீங்களும் சுற்று சூழல் தொடர்பான விளிப்பில் இருக்கும்படியும் தேவையில்லை என வீச கூடிய பொருட்களை மீள் சுழற்ச்சி செய்து பயன்படுத்தலாம் என்ற அறிவுரையையும் வழங்கவே இந்த பதிவு...

மரம் நடுவோம் உலகை காப்போம்...