ஞாயிறு, 22 ஜூலை, 2012

அறிந்ததும் அறியாததும் 01 (யானையின் இலத்தி)

நான் அறிந்ததும் அறியாததும் என்ற பகுதியில் தர போகும் விடயங்கள், சிலவேளைகளில் நீங்கள் அறிந்திருக்கலாம்,அறியாமலும் இருக்கலாம். ஆனால் நிச்சயம் அறிந்து கொள்ள வேண்டிய விடயங்கள்......


கிருமிகளை அழிக்கும் யானையின் இலத்தி


பல வகையான மிருகங்களின் கழிவுகளில் இருந்து பல மருத்துவ மூலாதாரங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது யாரும் மறுக்க முடியாத உண்மை. உதாரணமாக மாடு ஆடு போன்ற மிருகங்களின் கழிவுகளில் இருந்து இயற்கை உரம் தயாராகிறது. இந்த வகையில் யானையின் இலத்தியில் நுண் கிருமிகளை அழிக்கும் சக்தி உண்டு இதை நன்கு உணர்ந்தவர்கள் இலங்கை வாழ் மக்கள்.

போர்த்துக்கேயர் காலத்திலேயே இலங்கை யானைக்கு பெரும் கிராக்கி இருந்தது. தந்தம்,முடி போன்றவற்றோடு இலத்தியும் விற்பனையாகியிருக்கிறது.

வீட்டில் சாம்பிராணி காட்டும் பழக்கம் வெளிநாட்டவர் வருகையின் பின் அடையாளம் கண்டு கொண்டதாயினும். யானையின் இலத்தியை வைத்து புகை காட்டியவர்கள் அதிகம். நுளம்பு, ஈ போன்றவற்றை ஒழிக்க யானையின் இலத்தி பலம் மிக்க ஆயுதம்

காட்டு பகுதி கிராம புற மக்கள் தங்களுக்கு பிறந்த குழந்தைகளுக்கு யானை இலத்தியுடன் மஞ்ஞள் கலந்த புகையை காட்டுவர். இது தொற்று நோய் ஏற்படுவதை தடுக்கவே இவ்வாறு செய்வர். காற்றில் கலந்திருக்கும் நுண்கிருமிகளையும் இது நொடியில் கொன்று விடும்.

ஒரு காலத்தில் அத்தியாவசிய தேவையாகவே கருதப்பட்ட இந்த யானை இலத்தி. இன்று இரசாயன உலக மாற்றத்தால் கிராக்கி இழந்து போனது வருந்த தக்கது. இரசாயன கிருமி நாசினிகளை பாவிப்பதை தவிர்த்து இப்படிப்பட்ட இயற்கை கிருமி கொல்லிகளை பயன்படுத்துவது நமக்கு மிக்க நலம்..

16 கருத்துகள்:

 1. யானையின் கழிவு கிருமி நாசினியா... எனக்கு புதுத் தகவல் இது. நன்றி எஸ்தர்.

  பதிலளிநீக்கு
 2. வணக்கம் எஸ்தர்-சபி நலமா? என்ன விசாவில் வைத்துவிட்டாங்களா ஆப்பு நம்மவர் தேசத்தில் !ம்ம் பிணம் திண்ணும் தேசமல்லவா! /// யானையின் கழிவில் இருக்கும் கிருமிநாசினி பற்றிய விழிப்புணர்வுப் பதிவு. உண்மையில் நாம் இயற்கை இராசாயணங்களை இப்போது பயன்படுத்தாமல் இருப்பது இழப்புக்கள் எமக்கே ஆகும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் அண்ணா பெரிய ஆப்பு எல்லாமே மீள்மாற்றம் செய்ய வேண்டிய நிலை போதாத குறைக்கு பிரான்ஸ் அரசும் கைகோர்த்து கொண்டுள்ளது....

   நீக்கு
 3. புதிய தகவலை தந்தமைக்கு நன்றி....

  புதிய வரவு: குடிதண்ணீரை எப்போ குடிக்கனும்னு உங்களுக்கு தெரியுமா?
  www.tvpmuslim.blogspot.com

  பதிலளிநீக்கு
 4. புதிய தகவல்! நல்ல தகவல்! பகிர்வுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 5. யானையின் இலத்தி கிருமிகளை அழிக்கும் என்பதால், சிறு வயதில் பெரியவர்கள் யானை தெருவில் வரும் போது, இலத்தி போட்டால், போய் மிதி என்பார்கள்..
  பகிர்வுக்கு நன்றி (த.ம. 5)

  பதிலளிநீக்கு
 6. நலமா?

  இது வரை அறியாத தகவல் எஸ்தர்...

  பதிலளிநீக்கு