திங்கள், 23 ஜூலை, 2012

மரித்துப் பிளைத்தவள் 09

யாழ்ப்பாண கோட்டை
மிக நீண்ட இடை வேளையின் பின் மரித்துப் பிளைத்தவள் அனுபவ தொடரை எழுதுகிறேன். பல அலைச்சல் பயணங்கள், இடையூகள், அடக்குமுறைகள் என எல்லாவற்றையும் அனுபவித்துவிட்டேன் ஓர் இலங்கை தமிழச்சியாய் பிறந்ததற்காக. அதனால்தான் இவ்வளவு காலதாமதம்...

2000ம் ஆண்டு யாழ்பாண கரையோர மக்களை இடம் பெயருமாறு ராணுவம் எச்சரித்தது. அப்போது எனக்கு வயது எட்டு நடந்த அனைத்து சம்பவங்களும் திரைப்படம் போல கண் முன் ஓடுகிறது.

முக்கியமாக பாஷையூர்,குருநகர்,நாவாந்துறை,கொழும்புத்துறை போன்ற கரையோர ஊர்களில் வாழ்ந்த மக்கள் யாழ்ப்பாணத்தின் உட்பகுதிக்குள் இடம் பெயர்ந்து செல்ல வேண்டிய நிலை. எல்லாரும் மூட்டை முடிச்சுகளை கட்டிக் கொண்டு நடை பயணமாக புறப்பட்டோம் யாழ்ப்பாண ஒல்லாந்தர் கோட்டையிலிருந்து ராணுவம் கல்லடி விடுதலைப் புலிகளின் முகாம்களில் தாக்குதல் நடத்தினர் விடுதலைப் புலிகளும் பதிலுக்கு கோட்டை மீது தாக்குதல் நடத்தினர். யாழ்ப்பாணமே புழுதி மயமானது அனைவரும் பயத்தோடும் நடுக்கத்தோடும் நடைபயணமானோம்.
யாழ் கோட்டை வாயில்


நாங்கள் புறப்பட்டது மாலை நேரமென்றபடியால் இருட்டில் வயசுப் பெண்களுடன் பணம் செல்ல எல்லோரும் துணியவிலலை. இதனால் நாவாந்துறையில் அன்றைய இரவுப் பொழுதை கழிப்பதற்காக பாளயம் அமைத்தோம். அதற்கு துணையாக அங்குள்ள கிறிஸ்தவ பாதியார்கள் புனித. நீக்லார் தேவாலய வளாகத்தை ஒதுக்கி தந்தனர் மக்கள் கூட்டம் அதிகமாகவே   நாவாந்துறை மக்கள் தங்கள் வீடுகளில் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தனர்.

நாங்கள் புனித.நீக்லார் தேவாலய பாடசாலை மண்டபம் ஒன்றிற்குள் அன்றை இரவை கழித்து அதிகாலையிலேயே பணத்தை ஆரம்பித்தோம். எங்கள் உறவினர்கள் எல்லாரும் பண்டதெருப்பு என்ற ஊர் பாதுகாப்பானதாக கூறினர் அதனால் எல்லோம் அங்கே போய் குடியிருக்கலாம் என தீர்மானித்து அவ்விடம் நோக்கி பயணமானோம்..

தொடரும்.....

15 கருத்துகள்:

 1. வணக்கம் எஸ்தர்-சபி!
  அலைச்சலுடன் அனுபவமும் பகிரும் தொடர் தொடருங்கள் சில எழுத்துக்கள் காலைவாருகின்றது போல!:)))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சுட்டி காட்டியிருந்தால் திருத்தியிருப்பேனே...

   நீக்கு
 2. அனுபவ பதிவு அருமை! பழைய பகுதிகளை வாசிக்கத் தூண்டுகிறது! தொடருங்கள்! தொடர்ந்து வருவேன்!

  பதிலளிநீக்கு
 3. வலிகளை வலிக்க வலிக்க பதிவிடுவோம் வருங்காலச் சந்ததிக்கு நிச்சயம் தேவை எஸ்தர் !

  பதிலளிநீக்கு
 4. இந்த தொடர் பதிவை மீண்டும் எழுத துவங்கியமைக்கு நன்றி சிஸ்டர்! அடுத்த பாகத்திற்கு வெய்ட்டிங் (TM 4)

  பதிலளிநீக்கு
 5. சுட்டி காட்டியிருந்தால் திருத்தியிருப்பேனே//

  நான் ஒரு முறை ஒரு மூத்த பதிவரின் பிழைகளை சரி செய்யச்சொல்லி சொல்லப்போய் (உடனே அந்த மறுமொழியை நீக்கவும் சொன்னேன்..)...
  அவர் அதன் பின் என் வலைக்கு வருவதே இல்லை...-:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படி அகங்காரம் எனக்கு இல்லை அண்ணா பிழையென்றால் அது யார் சுட்டிக்காட்டினால் எனன திருந்துவதும் திருத்துவதும் என் கடைமைதானே....

   நீக்கு
 6. அனுபவம்...தொடருங்கள் எஸ்தர்...

  பதிலளிநீக்கு
 7. வலி மிகுந்த அனுபவங்கள்.தொடருங்கள் எஸ்தர்

  பதிலளிநீக்கு