செவ்வாய், 31 ஜூலை, 2012

மரித்துப் பிழைத்தவள் 10 (இறுதி)


2000ம் ஆண்டில் பண்டைதரிப்பு பற்றிமா மாதா கோவிலில் அகதிகளாக எம் பெட்டி பொருட்களுடன் நின்றோம். அப்போது அங்கு கடைமையாற்றி ஒரு அருட் தந்தையின் உதவியுடன் அங்கே உடைந்து கிடந்த ஒரு வீட்டை சீர் செய்து 04 உறவு குடும்பங்களாக அங்கு தங்கினோம்..

பண்டதரப்பு மாதா கோவில்
யுத்தம் கரையோரத்தில் வியாபித்திருந்ததால். உட்பகுதியிலிருக்கும் பண்டைதெருப்பில்  ஓரளவு பயம் குறைவாகவே எங்களுக்கு இருந்தது. என் மச்சான் ,மச்சாள்,ஒன்றுவிட்ட சகோதரர்கள் என்று ஏறத்தாள பத்துக்கு மேற்பட்ட 12 வயதுக்கும் கீழ்பட்ட சிறு பிள்ளைகள் இருந்தோம் எங்கள் கலடவிக்கு பங்கம் ஏற்படும் என பயந்து எங்கள் பெற்றோர் புனித யசிந்தா பாடசாலையில் எங்களை கலிவி கற்க அனுப்பினர். அது எங்களுக்கு புதிய உலகை தந்தது புதிய இடம் , புதிய நண்பர்கள் புதிய மனிதர்கள் என்று எல்லாம் புதுமையாக இருந்தது அது எங்களுக்கு புதிய உற்சாகத்தை கொடுத்தது.

மேலும் இங்கிருந்து சாவதை விட வெளிநாட்டில் புலம் பெயர்ந்த தமிழர்காளய் வாழ்வதே மேல் என்று என் பெரியம்மா தன் தன் பிள்ளைகளுடன் என்னையும் இணைத்து ஒரு ஏஜன்ற் உதவியுடன் பிரான்ஸ் நாட்டிற்கு அனுப்பி விட்டார். என் அம்மாவின் தங்கை ஏற்கனவே அங்கு குடியேறியிருந்ததால் எங்கள் பராமரிப்பு இலகுவானனது.

2002 ல் யுத்தம் ஓய்ந்து ஏ9 பாதை திறக்கப்பட்டது. அப்போது வன்னிக்கு குடியேறியவர்கள் சொந்த இடத்தில் குடியேற அனுமதிக்கப்பட்டனர். 05 வருட போர் நிறுத்தத்தின் பின் 2007ல் வெடித்த இரத்தம் கரைந்த சோக கதை அதாவது உள்நாட்டு போரின் இறுதிகட்டம், முள்ளிவாய்கால் சோகம் எல்லாம் உலகறிந்ததே மிண்டும் அக்கொடிய நிகழ்வை புரட்டி பார்க்க எனக்கு விருப்பம் இல்லை.

மிக்க நன்றி தோழர்களே இத்துடன் என் மரித்து பிழைத்தவள் தொடர் முடிந்து விட்டது... இது வரை ஆதரவு வழங்கிய உங்களுக்கு மிக்க நன்றி......

14 கருத்துகள்:

 1. இனி வரும் காலம் எல்லாம் மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன்.

  நன்றி.
  (த.ம. 2)

  பதிலளிநீக்கு
 2. உள்ளத்தை உருக்கி விட்டது எஸ்தர்.
  படத்தில் காண்பதை விட நீ நேரில் அழகு பதுமை ஆயிற்றே

  எப்போது இந்த படம் எடுத்தாய்?
  இப்போதுள்ள தோற்றத்திலேயே படத்தை பிரசுரிக்கலாமே....

  பதிலளிநீக்கு
 3. படித்து முடித்தபோது மனம் கனத்துப் போகிறது.துன்பங்கள் தொடர்கதையாய்த் தொடராமல்,இனியாவது நன்மைகள் தொடராய் வரவேண்டும்!பிரார்த்திக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 4. தமிழகத்தில் நாங்கள் இருந்தாலும் ஈழத்தில் உள்ள தமிழ் மக்களின் அனைவரும் எம் சொந்தங்களே, தமிழீழம் என்பது எங்களின் கனவு கூட... உங்களின் வலி எங்களின் வலி.. சந்தர்ப்ப அரசியல் செய்யும் அரசியல்வாதிகள் இல்லை நாங்கள், நாங்கள் தமிழ் மக்கள்.. எங்களின் உணர்வும், வலியும் உண்மையானது..

  பதிலளிநீக்கு
 5. அவலங்கள் தொடர்வதே தமிழர் கதையாகிப்போன நிலையில்.மரித்துப்பிறந்தவளும் ஒரு சாதனைதான்.ம்ம்

  பதிலளிநீக்கு
 6. சொல்லச் சொல்ல இன்னும் புரையோடும் நினைவுகள் தோழி !

  பதிலளிநீக்கு
 7. நல்ல பதிவு. யுத்தம் தந்த வடுக்கள் எத்தனை காலம் சென்றாலும் நாம் மனங்களை ஆற்றப் போவதில்லை தோழா.

  பதிலளிநீக்கு
 8. இன்றைய வலைச்சரத்தில் உங்கள் வலைப்பூ பற்றிச் சொல்லும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.நேரமிருந்தால் பாருங்கள்

  பதிலளிநீக்கு
 9. பரவால மாத்திடிங்க போல.. 50 % ஓகே.. கீழ இருக்குற பச்சை பெட்டியையும் தூக்கிட்டு இருட்டையும் குறைச்சா உங்க ப்ளாக் இன்னும் கலக்கலா இருக்கும்..

  பதிலளிநீக்கு
 10. இன்று தான் தங்கள் தளத்திற்கு வந்தேன்.
  மரித்துப் பிழைத்தவள் 10 (இறுதி) படித்தேன்.
  இனி வருங்காலங்கள் தங்களுக்கு நல்லகாலமாக இருக்கட்டும்.

  என்னுடைய தளத்தில் ஏணிப்படி

  பதிலளிநீக்கு
 11. உங்கட வருங்காலம் சிறக்க வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு