செவ்வாய், 3 ஜூலை, 2012

சுற்று சூழல் பாதுகாப்பு தொடர்பாக அஜந்தா பரேராவுடன் இனணந்த என் எண்ணம்..

யாழ்ப்பாண அமெரிக்க மூலை (corner) மூலமாக. அமெரிக்க துாதரக அனுசருனையுடன் சுற்று சூழல் பாதுகாப்பு வேலை திட்டத்தின் பங்காளியாக என்னையும் ஒரு சில நண்பர்களையும் அழைத்திருந்தனர். இதற்கு தலைமை தாங்கியவர் பல நாடுகளில் சுற்று சூழல் பாதுகாப்பு தொடர்பாக பல பட்ட படிப்புகளை மேற் கொண்ட திருமதி. அஜந்தா பெரேரா அவர்கள்.
அஜந்தா பெரேரா.

ஆரம்பத்தில் இவர் ஓர் சிங்களவர் எப்படியும் கொஞ்ஞம் கஸ்ரமாகத்தான் இருக்குமென எண்ணினேன் ஆனால் என் எண்ணம் முற்றும் தவிடு பொடியானது. அவர் எங்களுடன் ஒரு அம்மாவை போன்று பழகினார்.

எங்களின் வேலைத்திட்டம் யாழ்ப்பாணத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்த குடியேறு கிராமமான மணியந்தோட்டத்தில் அமைந்திருந்தோம் முதற்கட்ட பணியாக அங்குள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ஒவ்வொரு தென்னங்கன்று வீதம் நுாறு குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. எப்படியும் கன்று வளர்ந்து பலன் தர குறைந்தது ஜந்து வருடமாவது ஆகும் இதனால் அஜந்தா அவர்கள் பழைய பொருட்களை மீள் சுழற்சி செய்து விலையேற்றுவதில் கைதேர்ந்தவர். அந்த மக்களுக்கு பல வகையான தேவையற்ற பொருட்களை அரங்கார பொருட்களாக மாற்ற கற்று கொடுத்தார்.
ajantha pereta
அது மட்டுமல்ல சுற்றாடல் எமக்கு எவ்வளவு மிக முக்கியம் என உரையும் வழங்கினார் அவரின் உரையாடல் ஆங்கிலத்தில் இருந்ததால் தமிழ் ஆசிரியர் ஒருவர் அதை தமிழில் மொழி பெயர்த்தார்.

நாமும் நம் சுற்று சூழல் தொடர்பான விடயங்களில் மிகவும் கவனம் தேவை. மரம் அனைத்து உயிர்களும் வாழ மூலகாரணி. இதை அழித்து நாம் வாழலாம் என கனவு காண வேண்டாம்.

முன்னய காலங்களில் மழையிலும் வெய்யிலிலும் தம்மை பாதுகாத்து கொள்ள மனிதர்கள் வீடுகள் அமைத்தனர் ஆகால் இப்போது ஆடம்பரத்துக்காகவும், பொருளாதாரத்துக்காகவும் , வர்த்தகத்திற்காகவும் காடுகளை அழத்து அடுக்கு மாடிகள அமைக்கின்றனர். இது எல்லாம் அவசியமா? இந்தோனேசியா இன்னும் பத்து வருடத்தில் மிக பெரிய ஆபத்தை சந்திக்கவுள்ளது இயற்கை வழங்கள் அனைத்தும் சூரையாடபட்டு வர்த்தகத்திற்காக பயன்படுகின்றன.

எமக்கு தேவையில்லை என நாம் வீச கூடிய பொருட்களான பழைய காகிதங்கள், தேங்காய் மூடிகள்(சிரட்டை), பழைய துணிகள், மரத்து பிசின், மூங்கில் தடிகள், இறுவெட்டுக்கள் (சி.டி) போன்றவற்றை வைத்து விதம்விதமான பொருட்களை உருவாக்கலாம்.

இவை அஜந்தா பெரேரா அவர்களின் உரையின் சாராம்சம்

மிகவும் பயன்மிக்க இந்த கலந்துரையாடலில் எனக்கு யாழ்ப்பான சுற்று சூழல் கழக அங்கத்துவ அனுமதியை அமெரிக்க துாதரக அனுசருனையுடன் அஜந்தா அவர்கள் வழங்கினார்.

இந்த பதிவை நான் என் சுய கௌரவத்திற்காக எழுதவில்லை நீங்களும் சுற்று சூழல் தொடர்பான விளிப்பில் இருக்கும்படியும் தேவையில்லை என வீச கூடிய பொருட்களை மீள் சுழற்ச்சி செய்து பயன்படுத்தலாம் என்ற அறிவுரையையும் வழங்கவே இந்த பதிவு...

மரம் நடுவோம் உலகை காப்போம்...


11 கருத்துகள்:

 1. மிக நல்ல பணியில் இணைந்தமைக்கு வாழ்த்துகள் எஸ்தர்.மீள் சுழற்சி அறிவுரை எல்லோரும் கடைப்பிடிக்க வேண்டியதே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி அங்கிள் தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்....

   நீக்கு
 2. நல்ல முயற்ச்சி எஸ்தர்-சபி தொடருங்கள் மக்களுக்கு நல்ல இயற்கைச்சூழல்  ஆலோசனை சொல்லும் ஒரு சமுகப்போராளியாக!

  பதிலளிநீக்கு
 3. மரம் அனைத்து உயிர்களும் வாழ மூலகாரணி. இதை அழித்து நாம் வாழலாம் என கனவு காண வேண்டாம்.
  உணருவார்களா சகோதரி உணர்ந்தால் நன்மை நமக்கே.

  பதிலளிநீக்கு
 4. வாழ்த்துக்கள்...நல்ல முயற்சி இது...தொடர்ந்து முன்னேற வாழ்த்துக்கள் சொந்தமே!

  பதிலளிநீக்கு
 5. மருமகளே
  அன்பின் விருது ஓன்று பகிர்ந்துள்ளேன் ஏற்றுக்கொள்ளவும்

  பதிலளிநீக்கு