வியாழன், 5 ஜூலை, 2012

புனித பிலோமினா (வீர மங்கையின் வரலாறு)


”புனித” என்ற வார்த்தையை பார்த்ததும் ஏதோ சமய பிரச்சாரமாக இருக்க போகுதோ என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் நிச்சயம் அது கிடையாது. தன் தீர்மானத்தில் உறுதியும் ஆடவர் முன் தலை குனியா வீரமும் கொண்ட ஒரு பெண்ணின் வரலாறே இது.

கத்தோலிக்க கிறிஸ்தவ உலகில் பல புனிதர்கள் உள்ளனர். புனிதர்கள் என்றால் இவ்வுலக வாழ்வை புனிதமாக வாழ்ந்து இறைபதம் அடைந்து மக்களுக்கு தமது பரிந்துரைகள் மூலம் இறைவனிடம் அருளை பெற்று கொடுப்பவர்கள். அந்த வரிசையில் பிலோமினாவும் ஒரு புனிதரே.. வரலாற்று துறை பாடத்தில் கிறிஸ்தவ நாகரீகத்தை கற்போர் நிச்சயம் இவரது வரலாற்றை கடந்தே ஆக வேண்டும்.

இவரின் வரலாறு கிட்டத்தட்ட கி.பி 1500ம் ஆண்டளவில் ஆரம்பிக்கிறது. கிரேக்க அரச வம்சத்தில் இளவரசியாக இவர் பிறந்தார். பல தெய்ய வழிபாட்டில் ஈடுபட்டு வந்த இவர் பெற்றோர்க்கு பல ஆண்டு காலம் பிள்ளைகள் இல்லை கிறிஸ்தவத்தை இறிந்து அதை தழுவிய பிறகே புனித பிலோமினா அவர்களுக்கு மகளாக பிறந்தார். பி லோமினா (fi lomna) என்றால் ஒளியின் மகள் என பொருள்படும். அழகு இவர் தனிதன்னை இவர் காலத்தில் இவரைப்போன்று ஒரு மங்கையரும் அழகில் கிரேக்கத்தில் இல்லை என்பது வரலாறு கூறும் உண்மை.

இவர் அரச குமாரியாக இருந்தாலும் கூட தன் வாழ்வை முழுவதும் இயேசுவிற்கு அர்ப்பணித்து அவரையே தம் மணவாளனாக ஏற்று வாழந்து வந்தார். அக்காலத்தில் ஆட்சி செய்த உரோம் அரசன் இவரை மணம் செய்ய விரும்பினான் ஆனால் பிலோமினா அவர் விருப்பத்திற்கு உடன் வரவில்லை. அதனால் அவ்வரசன் பிலோமினாவை கைது செய்து சிறை வைத்தான். சிறையில் இருக்கும் போதே அவ்வரண்மனையில் பலரை மனம்திருப்பினார். நல் வழி காண்பித்தார். ஏன் அரசியை கூட இறைபதம் கொண்டு வந்தார்.

இதனால் அரசனின் கடுங்கோபத்திற்கு ஆளானார். அரசன் துர் பெண்களை அவர் இருக்கும் சிறயில் விட்டு அவரை மனமாற்றப் பார்த்தார் ஆனால் மனம்மாறி நன்நெறி கற்றனர் அத்துர் பெண்கள்.

இதனால் மேலும் கோபம் கொண்ட அரசன் அவரை கசையடிகளுக்கு உட்படுத்தினார் இயேசுவைப்போல் வேதத்திற்காக கசையடி வாங்கிய ஒரேயொரு பெண் என்ற பெருமை புனித பிலோமினாவை சாரும்.

சாதாரண கசையடிகள் கிடையாது ஒரு பெண்னை திருமணம் செய்து கொள்மாட்டேன் என்று கூறியதற்காக சிறை வைத்து அந்த சிறையில் எக்காரணத்திற்காக மணம் வேண்டாம் என்றாலோ அக்காரணத்தையே பரப்புகிறாளே என்று நிர்வாணமாக பல கடை போராளிகள் முன் ஒரு பெண்ணை கசையால் அடத்து துன்பப்படுத்தினர்.

அக்காயங்களோடு 37 நாட்கள் சிறையில் அவர் இருந்தார். அப்போது துாய மரியாளை காட்சியில் கண்டதாக வரலாறுகள் கூறுகின்றன. அதுமட்டுமல்ல அவர் காயங்களை வான துாதர்கள் தேற்றியதோடு அவர் இருந்த சிறயில் ஒரு வித நறுமணம் வருவதை அரண்மனை காரர்கள் எல்லாரும் உணர்ந்தனர்.

பின் சிறையிலிருந்து அற்புத விதமாக அவர் வெளியில் கொண்டு வரப்பட்டார். வெளியே வந்து இயேசுவைப் பற்றி ஊரெங்கும் போதித்தார். இச்செய்தி அரசனுக்கு வரவே அவர் சிறை காவலர்களை அனுப்பி பிலோமினாவை கைது செய்ய சொன்னார் ஆனால் சிறை காவலர்கள் அவர் அருகில் செல்ல கூட தயங்கினர். ஒரு வழியாக பிலோமினாவை கைது செய்து கழுத்தில் இரும்பு சங்கிலிகளை கோர்த்து. அதனுடன் நங்கூரத்தையும் கட்டி தைபர் கணவாயில் (நதியில்) வீசினர். ஆனால் அவர் போட்டிருந்த துணி கூட நனையாமல் கரையொதுங்கினார்.

அரசன் அவரை மீண்டும் பிடித்து இழுத்து வந்து உரோம் நகர தெருக்களினுாடாக நிர்வாணமாக இழுத்து வந்தான். பின் அம்பு மழைகளை அவர் மேல் பொழிய செய்தான் அவர் மயங்கவும் இல்லை தன் புன் சிரிப்பை இழக்கவும் இல்லை. இதற்கும் அவர் சாகவில்லையென்று ஈட்டிகளால் பல கொடிய ஆடவர்களை கொண்டு அவருமைய பெண்மையின் அடையாளங்கள் வஞ்சிக்கப்பட்டன.

அவர் இறை புகழை் பாடி இறந்தார் அவர் இறந்ததும் ஒரு குகையில் துாக்கி இவர் உடலை வீசினர்.1833 ல் அவருடைய புனித பண்டங்கள் அக்குயைில் கண்டு பிடிக்கப்பட்டன. கல்லறை திறக்கும் போதே அந்நறுமணம் உரோம் நகரையே சுதாகரித்து கொண்டது. வரலாற்று ஆய்வார்களின் கூற்றுப் படி புனிக பிலோமினா இறக்கும் போது அவரது வயது 35 க்கும் குறைவானதாக இருந்திருக்கும்.

ஆண்மையின் கோர தாண்டவத்திற்கு அடிபணியாதவள் எவளும் வீர மங்கைதான் இப் புனித வதியை போன்று...

11 கருத்துகள்:

 1. இது வரை எனக்குத் தெரியாத ஒரு வீரப் பெண்மணியின் வரலாறு நன்று;நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி அங்கிள் தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்...

   நீக்கு
 2. Saint Philomena பற்றி மகள் படிக்கையில் அறிந்தேன்...ந்ன்றி எஸ்தர்...

  பதிலளிநீக்கு
 3. ஆண்மையின் கோர தாண்டவத்திற்கு அடிபணியாதவள் எவளும் வீர மங்கைதான் இப் புனித வதியை போன்று...
  இதுவரை கேட்டிறாத வரலாறு தங்கள் மூலம் தெரிந்துகொண்டதில் மகிழ்ச்சி .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புனிதர்களின் வரலாற்றை இந்து சகோதரர்கள் அதிகம் அறிய வாய்பில்லைதானே அக்கா...

   நீக்கு
 4. மனதை உருக வைக்கும் இந்த வீர மங்கையின் வரலாறை இப்போதுதான் உன் மூலம் அறிந்து கொண்டேன் எஸதர். பெண்களுக்கு எதிரான கொடுமைகள் எக்காலமும் தொடர்கதைதான் போலும். மனம் கனக்க வைத்து விட்டது புனித பிலோமினாவின் கதை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி நிரூ உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்...

   நீக்கு
 5. புனித பிலோமினாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள். ஆமென்.

  பதிலளிநீக்கு