செவ்வாய், 10 ஜூலை, 2012

புது சிறகு முளைத்த பறவை நான்....

சிறகை இழந்த பறவை நான்
பறக்க நினைக்கின்றேன்
முடியவில்லை என்று நான்
புலம்பி அழுகின்றேன்.
எதற்கு படைத்தாய் இறைவா
என நான் கேள்வி கோர்கின்றேன்.
பதிலை நீயே சொல்லிடு
இறகை மாற்றி தந்திடு

சொந்தம் எல்லாம் விலகி ஓடிற்று
பாழமய் போன
ஒடிந்த சிறகால்
உற்ற துணையாய் எண்ணியவனும்
விலகி நடந்தான்
ஒடிந்த சிறகால்.

சித்தம் தெளிந்து புறப்பட்டேன்
ஒடிந்த சிறகினை சரி செய்ய
போன இடங்களில் அவமானம்
தற்கொலை உந்துதலும்
வந்ததுவே
அத்தனையும் தாங்கிய இறுமாப்புடன்
சரி செய்தேன் என் சிறகு தனை

பறந்தேன் பாடினேன்
ஆர்பரித்தேன் குதுாகலித்தேன்
புதிதாய் நானும்
புதுப் பிறப்பானேன்

பிரிந்த சொந்தம் சேர்ந்தேனே
புதிய காதலும் கொண்டேனே
பது சிறகு முளைத்த பறவை நானே...

22 கருத்துகள்:

 1. பறந்தேன் பாடினேன்
  ஆர்பரித்தேன் குதுாகலித்தேன்
  புதிதாய் நானும்
  புதுப் பிறப்பானேன்.

  அழகு வரிகள் சகோ. அன்றேனும் பிறந்த குழந்தையாய் பிள்ளை மொழி பேசி வாழ வாழ்த்துகிறேன்.

  பதிலளிநீக்கு
 2. ஆஹா... வாழ்க்கைலருந்து ஜனிச்ச கவிதைன்னு நினைக்கறேன் எஸ்தர். உணர்வுகள் கொப்பளிக்குது கவிதைல. புதுசா சிறகு முளைச்ச எஸ்தர் பறவைக்கு என்னோட நல்வாழ்த்துக்கள்மா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நிரூ நன்றி அக்கா தங்கள் கருத்துக்கு...

   நீக்கு
 3. பதில்கள்
  1. நன்றி அங்கிள் எப்படி சுகம் என் முக புத்தகத்திற்கு வருகை தந்துள்ளீர்கள் போல....நண்பராய் ஏற்று கொண்டேன்...

   நீக்கு
 4. புதிய காதலும் கொண்டேனே..//

  வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 5. ஒவ்வொரு தருணத்திலும்
  வீழ்ந்தாலும்
  விழித்தெழுந்து
  சிறகு முளைத்து
  அடுத்து பார்ப்பவைகளுடன்
  புதுக்காதல் கொண்டு
  எழுந்து வர முயற்சிக்கும்
  புதுச் சிறகு அழகு சகோதரி....

  பதிலளிநீக்கு
 6. ஒடிந்த சிறகு வளருமே
  பிறப்பின் அதிசயமே அது
  விதியின் பயனே
  வென்றிடுவோம் உலகை
  நாமே! பறந்திடு!....
  அருமை! சகோ....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆயிஷா உங்களுக்கு கூடவா புரியவில்லை நான் என்ன கருத்தை தொக்க வைத்துள்ளேன் என்று...

   நீக்கு
 7. கண் முன் எப்போதும் குதுகலிக்கும் பறவையை அடிப்படையாக வைத்து அதற்குள்ளும் சோகம் இருக்கென உறுத்தி ஏதோ சொல்ல வந்த உணர்வை தொக்க வைத்திருக்கிறது சகோதரம்...

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  தென்னிந்தியக் கலைஞர்களின் ஈழவருகையின் சாதகமும் பாதகமும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு மிக்க நன்றி நீங்கள் கூறியது சரியே....ஒன்றை தொக்க வைத்துள்ளேன்...

   நீக்கு
 8. ம்ம் // புத்துணர்ச்சியும் புதுமையும் கொண்ட கவிதை!

  பதிலளிநீக்கு
 9. இது என் முதல் வருகை எஸ்தர்...

  அழகான கவிதை....

  பதிலளிநீக்கு
 10. அருமையான கருத்தும் கவி வரிகளும் வாழ்த்துக்கள் உங்களுக்கு


  வானம் கண்மூடியதால்
  மேகம் இருட்டானதோ
  மேகம் கைவிட்டதனால்
  மழை நீர் நிலம் தொட்டதோ

  பூமி அணைக்காததால்
  வெள்ளம் நதி சென்றதோ
  நதிகள் வளைவென்றதால் - அது
  வழுக்கி கடல் சென்றதோ

  கடலில் அலை செல்வதால் - என்
  காதலும் அலைகின்றதோ
  அலைகள் கரை தட்டுவதால் - நான்
  கரையில் காத்து நிற்பதோ

  பதிலளிநீக்கு