புதன், 25 ஜூலை, 2012

காதலன் தந்த வலிகள்

இடியின் வீரியத்தை
கூட தாங்க முடிந்த
என்னால் - உன்
பாாவையின் வீரியத்தை 
தாங்க முடியவில்லை

உன் பார்வையிலே
 தடுக்கி விழுந்தேன் 
என்னும் எழவில்லை 
விழுந்த இடத்தை விட்டு

உனக்கும் எனக்கும்
இறைவன் போட்ட
காதல் எனும் முடிச்சு
நீயே அவிழ்த்தாலும்
அவிழ்க்கப்படாது...

உன் பெயரை கூறி
என் தோழயரும் 
உன் தோழர்களும்
கிண்டல் செய்யும் போது
கோபம் கொண்டேன் முகத்தில்
மகிழ்ந்தேன் உள்ளத்தில்

என் பெண்மையை எனக்கு
அறிமுக படுத்தியவன் நீதானே
உன்னை காதலித்த பிறகே
நான் பெண்ணானதன் 
உண்மை புரிந்தது.

உன் பெயரை - என்
கைகளில் பொறித்தேன்
உன்னை மிகையாக 
காதலிக்கிறேன் - என்று
காட்ட அல்ல - என்
இறுதி ஊர்வலத்தில் - உன்
பெயராவது என்னுடன் வரட்டுமே
என்றுதான்.....

இது வரை நீ எனக்கு
ஒன்றும் செய்யவில்லை
நான் அமரத்துவம்
அடைந்த பிறகாவது - என்
கல்லறையில் ஒரு பூச்செடி
நட்டு வை
உன் கை பட்ட 
அம் மரத்தின் பூவின்
வாசனையை நுகர்ந்தாவது
என் ஆன்மா உறங்கட்டும்.
20 கருத்துகள்:

 1. ஏனிந்த வேதனை வரிகள்...?
  கஷ்டமா இருக்கே...
  நன்றி.. (த.ம. 2)
  திண்டுக்கல் தனபாலன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசித்த உங்களுகே இப்படியென்றால் அனுபவித்தவளுக்கு.

   நீக்கு
 2. //உன் பெயரை - என்
  கைகளில் பொறித்தேன்
  உன்னை மிகையாக
  காதலிக்கிறேன் - என்று
  காட்ட அல்ல - என்
  இறுதி ஊர்வலத்தில் - உன்
  பெயராவது என்னுடன் வரட்டுமே
  என்றுதான்//

  நச்
  ஆனால் ரெம்ப டச்சிங்கா ...
  மருமகளே கவிதை சூப்பர்

  பதிலளிநீக்கு
 3. காதல் சொட்டும் வரிகள்! அருமையான கவிதை!

  பதிலளிநீக்கு
 4. பதில்கள்
  1. மிக்க நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.....

   நீக்கு
 5. கலர் கலரா கவிதை மின்னுது அதில் சோகம் இழையோடுகிறது..

  என் பெண்மையை எனக்கு
  அறிமுக படுத்தியவன் நீதானே
  உன்னை காதலித்த பிறகே
  நான் பெண்ணானதன்
  உண்மை புரிந்தது.

  நல்ல வரிகள்..
  பிரபல பதிவர்கள் சங்கமிக்கும் சென்னை பதிவர் சந்திப்பு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வரியின் உள்கருத்து உங்களுக்கு புரிந்து விட்டது...
   என் அண்ணனுக்கு தெரிந்தது சந்தோசமே.....

   நீக்கு
 6. காதல் யாசிக்கக்கூடாது நேசிக்க வேண்டும் !ம்ம் வலிகள் அதிகம் வரிகளில்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. யாசிப்பும், நேசிப்பும் காதலில் சகயம்தானே.. அண்ணா....

   நீக்கு