ஞாயிறு, 29 ஜூலை, 2012

அறிந்ததும் அறியாததும் (கிறிஸ்தவ பெண்கள் ஆலயங்களில் தலைமூடுவது ஏன்?)

கிறிஸ்தவ பெண்கள் தேவாலயங்களில் தலையை மூடுவது ஏன்????

கிறிஸ்தவ பாரம்பரியத்தின் படி தேவாலயங்களிலும், வழிபாடுகளிலும்,வேத நுாலை வாசிக்கும் போதும் பெண்கள் தலை பட்டி அணிந்து கொள்ள வேண்டும்.இதை துப்பட்டி என்றும் அழைப்பர். பலருக்கு ஏன் அவர்கள் தலைப்பட்டி போட்டு தலையை மூடுகின்றனர் என்பது தெரிந்தும் இருக்கலாம் தெரியாமலும் இருக்கலாம். தெரியாதவர்கள் இதோ அறிந்து கொள்ளுங்கள்.

கிறிஸ்தவ வேத நுாலில் இது ஒரு பாரம்பரிய முறைமை மட்டுமல்ல, கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டிய முறையும் கூட. இவற்றை கூறும் வேத வசனங்கள் இவையே....

I கொரிந்தியர் 11:5 ஜெபம்பண்ணுகிறபோதாவது, தீர்க்கதரிசனஞ் சொல்லுகிற போதாவது, தன் தலையை மூடிக்கொள்ளாதிருக்கிற எந்த ஸ்திரீயும் தன் தலையைக் கனவீனப்படுத்துகிறாள்; அது அவளுக்குத் தலை சிரைக்கப்பட்டது போலிருக்குமே.

I கொரிந்தியர் 11:6 ஸ்திரீயானவள் முக்காடிட்டுக்கொள்ளாவிட்டால் தலைமயிரையும் கத்தரித்துப்போடக்கடவள்;தலைமயிர் கத்தரிக்கப் படுகிறதும் சிரைக்கப்படுகிறதும் ஸ்திரீக்கு வெட்கமானால் முக்காடிட்டுக் கொண்டிருக்கக் கடவள்.

I கொரிந்தியர் 11:7 புருஷனானவன் தேவனுடைய சாயலும் மகிமையுமாயிருக்கிறபடியால், தன் தலையை மூடிக்கொள்ள வேண்டுவதில்லை; ஸ்திரீயானவள் புருஷனுடைய மகிமையாயிருக்கிறாள்.

I கொரிந்தியர் 11:10 ஆகையால் தூதர்களினிமித்தம் ஸ்திரீயானவள் தலையின் மேல் முக்காடிட்டுக்கொள்ளவேண்டும்.

I கொரிந்தியர் 11:13 ஸ்திரீயானவள் தேவனை நோக்கி ஜெபம் பண்ணுகையில், தன் தலையை மூடிக்கொள்ளாமலிருக்கிறது இலட்சணமாயிருக்குமோ என்று உங்களுக்குள்ளே நிதானித்துக் கொள்ளுங்கள். 

இவ்வாறு வேத வசனங்களுக்கு இணங்க பெண்கள் தங்கள் தலையை முக்காடிட்டு மறைத்து கொண்டு வழிபாடுகளில் கலந்து கொள்ள வேண்டும் என்பது கிறிஸ்தவ சட்டம். நாகரீக மாற்றங்கள் இப்போது பெண்களிடையே மாற்றங்களை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது என்பது உலகறிந்த உண்மை. அதன் காரணமாக பெண்களிடையே முக்காடு  போட்டு கொள்ளும் பழக்கம் அருகி வருகிறது. எது என்னவோ பழைய பாரம்பரியங்களை விட்டு கொடுக்க நான் தயாராக இல்லை..

20 கருத்துகள்:

 1. பழைய பாரம்பரியங்களை காரண காரியம் அறிந்து கடைப்பிடிப்பது மிக நல்ல பழக்கம் எஸ்தர். சரியான காரணங்களை அறியாமல் செய்வதும். பழையவை தேவையற்றவை என்று புறக்கணிப்பதும்தான் தவறு. நல்லதொரு பகிர்விற்காக உன்னை மனம் நிறையப் பாராட்டுகிறேன்.

  பதிலளிநீக்கு
 2. Nice presentation


  http://sivaparkavi.wordpress.com/

  பதிலளிநீக்கு
 3. சும்மா எந்தப் பழக்கமும் வந்துவிடவில்லை..
  அதற்கான காரணங்களும் உண்டு..
  நீங்கள் கொடுத்த விளக்கங்கள்
  அதை பறைசாற்றுகின்றன...

  பதிலளிநீக்கு
 4. காலத்தின் மாற்றத்தினால பல பாரம்பரிய விஷயங்கள் இப்ப மாறிட்டு வர்றதைப் போல இந்த முக்காடு விஷயமும் மாறியிருக்கலாம். ஆனா பழமையை மதிக்கிற உன்னை மாதிரி இளைய சமுதாயம் இருக்கறது ஆறுதலா இருக்கு எஸ்தர்.

  பதிலளிநீக்கு
 5. பாரம்]பரியம் தேவையான் ஒன்றாக இருந்திருக்கும் கால ஓட்டம் சிலதை விட்டுச் செல்லுகின்றது!ம்ம் பழமையில் புதுமை!

  பதிலளிநீக்கு
 6. இதற்கு தானா? எனக்கு ஏன் எதற்கு தெரியாது .. ஆனால் கிருத்தவ பெண்கள் தலைமூடி வணங்கும் போது அழகாகவும் அடக்கமானவர்களாகவும் தோன்றுவார்கள். எனது முன்னாள் காதலியும் அப்படியே செய்து வந்தாள். அவளும் ஒரு கிருத்தவப் பெண் தான் !!! எனக்கு அது பிடித்து இருந்தது .. ஆனால் விரும்பாதோர் மீது எதையும் திணிக்கக் கூடாது என்பது எனதுக் கருத்து !!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ம் மிக்க நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...

   யாரும் யாரையும் கட்டாய படுத்தவில்லை......

   நீக்கு
 7. தெரிந்திருக்காத புதுத் தகவல் எஸ்தர்.காரணம் இல்லாமல் எதுமேயில்லைப்போல சமயங்களில் !

  பதிலளிநீக்கு