புதன், 25 ஜூலை, 2012

திரைப்படங்களும் திருநங்கைகளும்

தயவு செய்து வாசித்து விட்டு கருத்துரையிடுங்கள் 

வெகு சன தொடர்காடலில் மக்களிடையே பிரசித்தி பெற்று காணப்படுவது சினிமா மற்றும் சின்னத்திரை இதில் அதிகம் பங்கு வகிப்பது.திரைப்படங்கள். இவை மனித சமுதாயத்தில் விளிப்புணர்ச்சி ஏற்படுத்தும் மூலாதாரமாக செய்படவேண்டுமே அன்றி. அவற்றை நாசமாக்க கூடாது.


திருநங்கைகளையும் அவர்களை ஊடகங்கள் எவ்வாறு சித்தரிக்கின்றன என்பது பற்றியும் பலர் எழுதியிருக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் திருநங்கைகளே. வேதனை அனுபவித்தவர்களுக்கே அதன் வலி புரியும் மற்றவர்கள் திருநங்கைகளை பற்றி எழுதுவதற்கும் ,திருநங்கைகளே தங்களை பற்றி எழுதுவதற்கும் நிறைய வேறுபாடு உண்டு. மற்றவர்கள் அவர்களின் வேதனையை தொட்டுச் செல்வர். ஆனால் திருநங்கைகள் அதனுள் இருக்கும் வலியை அப்பட்டமாக்குவர்.அந்த வகையில் திரைப்படங்களில் திருநங்கைகளின் அவல நிலை எழுத்தாளர் லிவிங் ஸ்மைல் வித்யா அவர்கள் தன் வலைப் பூவில் அதிகம் இந்த விடயம் பற்றி பேசியுள்ளார். இறுதியாக சகோதரி ஆயிஷா பாரூக் அவர்கள் தன் திருநங்கை தொடரின் 4ம் பாகத்தில் இது பற்றி பேசியுள்ளார். முக்கிய விடயம் இவர்கள் இருவருமே திருநங்கைகள்.


நான் அறிந்த வரை ஒரு தலை ராகம் முதற் கொண்டு இப்போது வந்த லீலை வரை அதிகமாக திருநங்கைகளை ஒரு கேவல ஜந்துவாக இயக்குனர்கள் காட்டியிருப்பார்கள். பாலியல் சுகத்திற்கு அலைபவர்களாகவும், காம பார்வைபார்த்து ஆஆஆ மாமா என்ற நச்சரிக்கும் குரலுடன் ஆண்களை வட்டமிட்டு கைதட்டும் எழிய பிறப்பாக இயக்குனர்கள் காட்டியிருப்பார்கள். இதெல்லாம் போக முகச்சவரன் செய்து தாடி மீசை எடுத்து பெண்ணுடை போட்டு கொள்பவர்களாகவும் காட்டியிருப்பார்கள் (அப்பு).


திருநங்கைகள் முகச்சவரன் செய்வது கிடையாது முகமுடிகளை வேரோடு பிடிங்கி எடுக்கும் முறையைதான் பின்பற்றுகின்றனர். அந்த காலமும் இப்போது படகேறி போய்விட்டது. இப்போது ஆர்மோன் மாத்திரைகள் மூலமும், லேசர் கதிர்கள் மூலமும் நிரந்தரமாக முடிகளை அகற்றி பெண்களுக்கு ஒப்பான தோற்றத்தோடு இருக்கிறார்கள்.


இது என்னவென்றால் ஆண்களுக்கு பெண்ணுடை போட்டு அவர்களை திருநங்கைகளாக காட்டுகின்றனர். ஆண்களுக்கு பெண்ணுடை அணிந்திருப்பதாக தெரிபவர்கள் நிஜமான திருநங்கைகள் கிடையாது அவர்களை crossdress என்று அழைப்பர். இவர்களுக்கும் திருநங்கைளுக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது.இதை நான் ஏற்கனவே  crossdress எனும் சிறுபாலினத்தாரை அறிவீர்களா? என்ற தொடரின் மூலம் உங்களுக்கு அறியப்படுத்தினேன்.


இப்படியெல்லாமாக திருநங்கைகள் திரைப்பட இயக்குனர்களால் கேலிச்சித்திரங்களாக்கப்பட்டு நெருக்கப்பட்டு மனிதர்களால் அவமானச் சின்னங்களாக நினைக்கப்படும் அளவிற்கு தள்ளப்பட்டுவிட்டனர்.


திரைப்படங்களின் எல்லை மீறல்களை கட்டுப்படுத்த ஏற்படுத்தபட்டது தணிக்கை குழு இது மனித சமூதாயத்திற்கு தேவையற்ற பல விடயங்களை திரையில் ஊலாவ விட்டு தேவையானவற்றை தணிக்கை செய்யும் நாசகார கும்பலாகவே நான் கருதுகிறேன். பொதுவாக திரைப்படங்களில் திருநங்கைகளை கேலம் செய்வதை இது கண்டுக்கிறதே கிடையாது. இப்படிப்பட்ட குழு இருந்தென்ன இல்லாவிட்டால் என்ன?


இது எல்லாம் போக சமூகத்தில் நல்ல நிலையில் இருக்கும் திருநங்கைகளை கூட இவர்கள் விட்டு வைக்கவில்லை. பாவம் அவர்களே எவ்வளவு அவமானங்கள் கஸ்டங்கள் துன்பங்கள் எல்லாவற்றையும் தாண்டி இன்று நல்ல நிலைக்கு வந்துள்ளனர் அவர்களை கூட மிச்சம் விடாமல் கிண்டல் செய்கிறார்கள் (லீலை திரைப்படத்தில் நடிகர் சந்தானத்தால் ரோஸ் கிண்டல் செய்யப்பட்டார்).


இருப்பினும் சில மனித நேயமுள்ள சில இயக்குனர்கள் (மணிரத்னம்,மிஸகின்,கரி,லாரன்ஸ்,விஜயபத்மா) திருநங்கைகளை மனிதர்களாக காட்டியுள்ளனர். இப்போது திருநங்கைகள் திரைப்படத்தின் நாயகிகளாகவே உருவெடுத்துவிட்டனர். நர்த்தகி திரைப்படத்தில் கல்கி, பால் திரைப்படத்தில் கற்பகா போன்றோரை கூறலாம்.


இதெல்லாம் போய் இன்று திருநங்கை ரோஸ். ஓர் படத்தை தானே இயக்கி நடித்து வெளியிட உள்ளார். இத்திரைப்படம் ஆங்கில மொழயில் தயாரிக்கப்டுகிறது. யூலை 28 2012 இதன் ஆரம்ப விழா இடம் பெற இருக்கிறது.
இத்திரைப்படம் கிரிக்கட் சூதாட்டத்தை மையப்படுத்தி வெளிவர இருக்கிறது. ஓர் காலத்தில் கேவல யந்துவாக சினிமாவினால் அடையாளம் காணப்பட்ட திருநங்கைகள் இன்று திரைப்பட நாயகிகளானார்கள் என்பது நாகீகத்தின் முன்னேற்றம் கிடையாது திருநங்கை சமூக போராளிகளின் முன்னேற்றமே..


அடுத்த தலைமுறையினராவது உணர்ந்து தெளிந்து திபை்படங்களை இயக்கட்டு்ம்.


திருநங்கை ரோஸ் அவர்களுக்கு எனது வலைப் பூ சார்பாகவும் என் வலைத்தள நன்பர்கள் சார்பாகவும் என வாழ்துக்களை கூறுகின்றேன்...

19 கருத்துகள்:

 1. இந்த நிலை இப்போது கொஞ்சம் மாறிக் கொண்டு வருகிறது. மாறி விடும்.

  அவர்களும் மனிதர்கள் தானே என்று நினைத்தால் இந்த பிரச்சனையே வராது...

  பலரின் மனதில் ஊனங்கள் உள்ளன.

  நடிகர் மற்றும் இயக்குனர் லாரன்ஸ் அவர்கள் "காஞ்சனா" படம் மூலம், திருநங்கையாய் நடித்த சரத்குமார் மூலம் இந்த சமூகத்தை ஒரு வாங்கு வாங்கியிருப்பார்.

  நன்றி.
  திண்டுக்கல் தனபாலன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு

   இயக்குனர் லாரரன்ஸ் மனித நேயம் கொண்டவரென்பது உலகறியும்....

   நீக்கு
 2. மிகவும் உணர்வுப்பூர்வமான கருத்துக்கள். சமூகம் தன் கண்மூடித்தனத்தில் இருந்து எதிர்காலத்திலாவது வெளிவரவேண்டும்.

  பதிலளிநீக்கு
 3. உண்மைதான் திருநங்கைகள் உணர்வை கொச்சைப்படுத்தக்கூடாது! படம் பற்றிய தகவலுக்கு நன்றி அடிக்கடி எழுத்துப்பிழை வந்துவிடுகின்றது போல

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இருக்கும் நேரத்தில் அவசர அவசரமாக தட்டச்சு செய்வதில் பிழைவந்துவிடுகிறது...

   அது என்னவென்று சுட்டி காட்டியிருக்கலலாமே அண்ணா....

   நீக்கு
 4. வணக்கம் சகோதரி,
  இங்கே நீங்கள் பரிமளிக்கும் அத்தனை கருத்துக்களும் உண்மை.
  திரைப்பட துறை பெரும்பாலும் அப்படித்தான் காட்டுகிறார்கள்..
  "அப்பு" என்ற திரைப்படத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் திருநங்கையாக வருவார்..
  வில்லனாக காட்டி இருப்பார்கள்..ஆனாலும் நல்லவிதமாக..
  ஆனால் பாலியலை சம்பந்தப்படுத்த தவறுவதில்லை..
  காலங்களும் மாற வேண்டும் கருத்துக்களும் மாறவேண்டும்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்த பாத்திரம் மேற்கொள்ளும் அனைத்து செயல்களும் திருநங்கைகளின் செயல்களுக்கு முரனானவையே ...

   நன்றி அங்கிள் தங்கள் கருத்துக்கு.....

   நீக்கு
 5. உன் ஆதங்கம் புரிகிறதம்மா..நிச்சயம் நிலை மாறும்..

  பதிலளிநீக்கு
 6. சிறப்பான கருத்துக்கள்! திருநங்கைகளை பற்றிய கருத்து மாறி வருகிறது! புதிய சமுதாயத்தில் இவர்களுக்கு நிச்சயம் வழிகிடைக்கும்!

  பதிலளிநீக்கு
 7. மக்கள் மேல் பாரம்/பழி போட்டு எத்தனை நாள் தான் இவர்கள் ஏமாற்றுவார்கள்?

  பதிலளிநீக்கு
 8. உன் பதிவில் எழுத்துப் பிழை இருக்கலாம் எஸ்தர். ஆனால் கருத்துப் பிழை இருப்பதில்லை. மனித உணர்வுகளை மதிக்கத் தெரிந்த யாரும் திருநங்கைகளை கேலிப் பொருளாக சித்தரிக்க மாட்டார்கள். அருமையான கருத்துப் பகிர்ந்த உனக்கு பாராட்டுக்களும். திரைப்படம் இயக்க இருக்கும் ரோஸுக்கு உன் மூலம் நல்வாழ்த்துக்களும் தெரிவித்துக் கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 9. வாசிக்கக் கொஞ்சம் கஸ்டமாய் இருந்தாலும்...வாழ்வைப் போராடி ஜெயிக்க வைக்கும் பதிவு !

  பதிலளிநீக்கு