செவ்வாய், 25 செப்டம்பர், 2012

ஏழை மீனவர் கூக்குரல்
கடலம்மா எமக்கோர் கதி சொல்லு
தஞ்ஞம் நீயே நம்பி வந்தோம் 
வழி சொல்லு.

ஊர் உறங்கும் சாமமதில்
படகு தள்ளி 
நங்கூரம் ஏத்தி
நடுங்கும் குளிர் என கூட 
பாராது..
உன் மீது பயணம் 
தொழில் செய்ய வந்தோம்

காற்றடிக்கும் புயலடிக்கும்
அலைகளோடு மாபெரும் 
யுத்தம்
இத்தனையும் பட்டும்
கொண்டு வருவோம் 
ஒரு சில மீனே

நடுக்கடலதில் அலையோடு
படகும் சேர்ந்தால்
மறு கரைதனில்
சடலங்களாவோம்.

இத்தனையும் போதாதா
நேவியின் துப்பாக்கி சூடும்
கல்லெறிகள் தடியடிகளும்
தாங்குகின்றோம்.

அரசும் இதற்கோர் விடை 
கூறவில்லை 
அரசிற் கெல்லாம் அரசாம்
இறையும் எமக்கோர் 
விடை கூட கூறவில்லை
எப்போது தீருமோ - இந்த
ஏழை மீனவர் கூக்குரல்.

புதன், 19 செப்டம்பர், 2012

கிசு கிசு எழுத்தாளர்களே உங்களுக்கு ஜயோ கேடு.

என்னங்க இந்த பொண்ணு  இயேசு போல ஜயோ கேடு என்று கத்துறாளே, என்று நினைக்காதீங்க. நான் நியமாவேதான் வயிறு எரிஞ்சு சொல்லுறன். 

ஒருவரைப் பற்றி நாம் பேசும் போது முதல் அது உண்மையான விடயமா? என ஆய்ந்து அறிந்து, பிறகு பேசுவது விரும்பத்தக்கது. சில மகான்கள் கிசு கிசு என்ற பெயரில் தக்களின் கற்பனை திறனை காண்பிக்க முயர்ச்சி செய்கின்றனர். ஒருவர் சந்திக்காத விடயத்தை கூட தாமாகவே சித்தரித்து இது நியமாகவே நடந்தது என்று படிப்பவரை நம்ப வைக்கும் அளவிற்கு இவர்களின் கற்பனை திறன் இருக்கிறது.

கிசு கிசு என்பது உண்மையாக நடந்த ஒரு விடயத்தை வெளிப்படை இல்லாமல் மறைமுகமாக கூறுவது என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்.   
ஆனால் நடக்காத ஒன்றை நடந்தது போல் எழுதினால் அது கிசு கிசு என்றாகிடுமா? இந்த விடயம் சினிமா சம்பந்தமாக எழுதுபவர்களை மட்டுமே சார்ந்து நிற்கிறது (தொப்பி அளவுள்ளோர் போட்டு கொள்ளட்டும்.).

உதாரணமாக அண்மை காலமாக சினிமா உலகில் வலம் வந்த ஒரு விடயத்தை கூறுகிறேன். நடிகை சமந்தா உடல் நல குறைவால் (தோல் நல குறைவால் அல்ல)  இரு மாதங்கள் மருத்துவ சிகிச்சையில் இருந்தார். இதுவே நிஜம் (இது சமந்தாவே ஒரு தொலைக்காட்ச்சிக்கு கூறிய உண்மை.). ஆனால் கிசு கிசு என்ன தெரியுமா? அவருக்கு தோல் வியாதியாம், அது தொற்று நோயும் கூட. போதாத குறைக்கு சங்கரும், மணிரத்னமும் பலி கடா. இப்படி ஒரு செய்தியை யாரோ ஒரு மகான் எழுதியுள்ளார். இதை காப்பி (பிரதி) அடிப்போர் சங்க உறுப்பினர்கள் எல்லாரும் காபபி அடிச்சு முழு உலகிற்கும் பரப்பி விட்டனர். இது ஒரு உதாரணம் மாத்திரம் ஆனால் பல ஆயிர கணக்கானவற்றை கூறலாம்.

எழுத்தாளர்களின் எழுத்துகள் ஒருவரின் எழுச்சிக்கு காரணமாக அமைய வேண்டுமே தவிர வீழ்ச்சிக்கு காரணமாகக் கூடாது. சிந்திப்போம் தெளிவோம்.

ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

அவன் என் காதலன் - 02இப்படியாக இரு தோழியரும் ஒருவருக்கொருவர் அன்புடன் இருந்தனர். அவ்வூரில் ஷாம் என்ற வாலிபன் தலீமா மேல் அளவற்ற காதல் கொண்டான். 

ஒரு நாள் காலை ஏதோ அவசர வேலையாக பாடசாலை உடையுடன் சாலையோரமா சென்று கொண்டிருந்தாள் தலீமா. ஷாமும் அவ்வழியாக வந்தான் எப்படியாவது இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி தன் காதலை அவளிடம் கூற வேண்டும் என்ற ஆவலுடன் அவள் எதிரேயே வந்து கொண்டிருந்தான். ஆனால் தலீமாவுக்கோ இவன் யார் என்பது கூட தெரியாது. அவள் இது வரைக்கும் அவனை பார்த்தது கிடையாது.

ஷாம் அவளை இடை நிறுத்தினான் அவளோ பெரிய ஏக்கத்தேடு யார் இவன்? என்று அவனை ஒரு பணம் கலந்த பார்வையுடன் பார்த்தாள். அவனோ சிறிய தயக்கத்துடன் தன்னிடம் இருந்த காதலை அவளிடம் வீசினான்.அவளோ பதில் எதுவும் கூறாமல் தான் பார்க்க வந்த வேலையை தொடர அவள் அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள்.

ஷாமோ கொஞ்ஞம் உரத்த குரலில் உன் பதிலுக்கு காத்திருப்பேன் என்று கூறிக் கொண்டே அவள் சென்றதற்கு எதிர் வழியே சென்றான்.

தலீமாவுக்கோ யாரவன்? இவனை இது வரை ஊருக்குள் கூட கண்டதில்லையே, என்று போகும் போது அவனை பற்றிய சிந்தனைகளுடனே சென்றாள். தன் தம்பி கடைக்கு செல்ல மாட்டேன் என்று கூறியதால் தின பத்திரிகை வேண்டவே அவள் அவ்வளவு அவசரமாக போனாள். அவன் கடைக்கு செல்ல மாட்டேன் என்றதாலேயே இவ்வளவும் நடந்தது என்று தன் தம்பியை திட்டிக் கொண்டே வீடு சென்றாள்.

வீடு சென்றவள் முதல் தன் தம்பியை கூப்பிட்டு தலையில் கொட்டி விட்டு, தன் புத்தக பையை துாக்கி கொண்டு பாடசாலை நோக்கி புறப்பட்டாள்.

புறப்பட்டவளுக்கு பெரியதோர் ஆச்சரியம் காத்துக் கொண்டிருந்தது. அவள் பாடசாலைக்கு செல்லும் வழியில், ஷாம் அவளுக்காக காத்துக் கொண்டிருந்தான்.

அவனைப் பார்த்தும் பார்க்காதவளாக தன் தம்பியுடன் பாடசாலை நோக்கி நடந்தாள்.

தெடரும்.......
வெள்ளி, 14 செப்டம்பர், 2012

அறிந்ததும் அறியாததும் (திருநங்கைகளின் ஜமாத் உறவு முறை)

அன்பர்களே நான் இப்பதிவில் பதியப் போகும் விடயம் பலருக்கு புதிதாக இருக்கலாம்.


திருநங்கைகளுக்கு ஜமாத் என்ற உறவு முறை, பாரம்பரியமாக இருந்து வருவதை நீங்கள் அறிவீர்களா? இந்த உறவுமுறை வட இந்தியாவில் தோன்றியிருக்லாம் என்பது ஜதீகம். மொகலாய வம்சத்தை தோற்று வித்தது ஒரு திருநங்கை அவர் இஸ்லாமிய வழி மரபினர். ஆகையால் இஸ்லாமிய ஜமாத் முறையை திருநங்கையர் சமூக அமைப்பில் அவர் கொண்டு வந்திருக்க கூடும்.திருநங்கையர் ஜமாத் உறவு முறை என்றால் குறிப்பிட்ட தொகுதியினர், எங்கெங்கோ பிறந்து வளர்ந்தவர்கள், உறவுகள் இல்லாதவர்கள், தமக்கென உருவாக்கி கொள்ளும் உறவு முறையே ஜமாத் உறவு முறையாகும். அதாவது திருநங்கையர் தாம் முழு பெண்ணாக மாறும் சடங்கில் ஒரு ஜமாத்தில் இணைகிறார். அந்த ஜமாத்தில் தாயம்மா, குரு, நானி, கோத்தி போன்ற  குழுவுக் குறியால் உறவுகள் அழைக்கப்படும். இவை பாரம்பரியமான உறவு முறையாகும்.. இவற்றில் தாயம்மா என்பவரே அக் குழுவை தலைமை தாங்கி நடத்துவார்.இதை விட அம்மா , சித்தி , அக்கா , தங்கை , பெரியம்மா என அனைத்து பெண் உறவு முறைகளும் அடங்கும்.

உறவுகளால் வெறுக்கப்பட்டவர்கள் தமக்கு தாமே உறவுகளை ஏற்படுத்தி கொள்வதில் தவறொன்றும் இல்லையே...

இந்த ஜமாத் முறை வடக்கில் தோன்றியது என்றாலும் தமிழ் நாடு உட்பட திருநங்கைகள் வாழும் அனைத்துப் பிரதேசங்களிலும் பின்பற்றப்பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது.

[மேலே தந்திருக்கும் இருகாணொளிகளிலும் இவற்றை அறியலாம்...]

திங்கள், 10 செப்டம்பர், 2012

அவன் என் காதலன் - 01


கதைக்கு செல்லும் முன்
இக்கதை உன்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது. அதனால் நான் இங்கு பயன்படுத்தும் நபர்களின் பெயர்கள், இடங்களின் பெயர்கள் எல்லாம் என்னால் சித்தரிக்கப்பட்டவை. பிரசுரிக்கப்பட இருக்கும் படங்கள் கூகிளில் இருந்து எடுக்கப்பட்டவை.
கடல் அலைகள் கொஞ்சி விளையாடும், இயற்கை அன்னையின் மிகுந்த அன்பை பெற்ற ஊர்தான் கரையூர். கடற் தொழிலை நம்பி பிழப்பை நடத்துகின்ற குடும்பங்கள் ஏராளம், இதிலும் போக இவர்கள் அனைவருமே கிறிஸ்தவர்கள்.இந்த ஊர் கல்விக்கு எப்போதுமே முதலிடம் தம் பிள்ளைகளை எப்படியாவது படிக்க வைத்து விட வேண்டும் என்பது இவர்களின் விருப்பம்.

இப்படிப்பட்ட ஊரில்தான் தலீமா, செபானி என்ற இரு தோழிகள் வளர்ந்து வருகின்றனர். இவர்களுக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து இவர்கள் இருவருமே இணைபிரியா தோழிகள். இதில் செபானி தனது பன்னிரென்டாவது வயது முதல் தான் ஓர் கன்னியாஸ்திரி ஆக வேண்டும் என்ற ஆசையில் திருக் குடும்ப கன்னியர் மடத்தில் இணைந்து துறவுப் பயிர்ச்சி பெற்று வருகிறாள். தலீமா வீட்டில் இருந்த படி தன் கல்வியை தொடர்கிறாள். இவர்கள் இருவரும் வெளியில் சந்தித்து கொள்ளும் வாய்ப்பு இல்லவே இல்லை. பாடசாலையில் மட்டும் சந்தித்து பேசுவர். செபானி பாடசாலை விடுமுறைக்கு கூட வீட்டுக்கு வருவது கிடையாது. கன்னியர் மடத்திலேயே தங்கி இருப்பாள்.

தலீமா பேச்சால் ஆட்களை கட்டிப் போட வல்லவள், செபானி கன்னியர் மடத்தில் வளர்வதால் என்னவோ பெரிதாக யாரிடமும் பேசிக் கொள்ள மாட்டாள். தானுன்டு தன் வேலையுண்டு என்றிருப்பாள்.
                                                                        தொடரும்...........


                                                                            


சனி, 8 செப்டம்பர், 2012

இனியா தமிழ் சினிமாவுக்கு கிடைத்த வரம்.


”சினிமா” எத்துறை சார்ந்தோனும் இத்துறையில் இன்பமுறுவர். சினிமா என்பது பல்கலைக் கழகம். பல துறைகள் ஒன்றித்து சினிமாவை உருவாக்குகிறது. இதில் பெண்களின் பங்களிப்பு மிகவும் இன்றியமையாதது. நடிப்பை மட்டும் நம்பியே கறுப்பு வெள்ளை நாயகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால் இந்த டியிட்டல் காலத்தில் கவர்ச்சியை நம்பியே நாயகிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

அந்த வகையில் இயக்குனர் சற்குணத்தை நான் பாராட்டியே ஆக வேண்டும். ”வாகை சூட வா” என்ற திரை காவியம் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஓர் நம்பிக்கை ஒளி விளக்கை காட்டியமைக்கு. முதல் படமே தேசிய விருது பெற்ற திரைப்படம். இதை விட வேறென்ன வேண்டும் இனியாவுக்கு.

தன் நடிப்பால் ஒட்டுமொத்த தமிழ் உலகையும் தன்னை ஒருமுறை பார்க்குமாறு அழைத்தார்.

அதை தொடர்ந்து மௌன குரு திறமைக்கு ஏற்ற கதா பாத்திரம் இல்லை எனினும் அத்திரைப்படமும் டாப்புதான். 

ஆனாலும் இவருக்கு தமிழ் சினிமாவின் அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்றே நான் கூறுவேன்.இதை தற்போது நடந்து முடிந்த திரைப்பட விழாக்களை கொண்டே நான் கூறுகிறேன்.

விருதுகள் என்பது திறமையின் அடிப்படையில் வழங்கப்படவேண்டுமே தவிர ஆள் பார்த்தும் , முகம் பார்த்தும் வழங்கப்பட கூடாது. ஆனால் அதுதான் இங்கு நடந்தேறியது. 

திறமை படைத்தவர்களை திறமை படைத்தவர்கள் கையாளும் போது அதில் வெற்றி உறுதி. இயக்குனர்கள் கவர்ச்சி நாயகிகளுக்கு வலை வீசி தம் வங்கி கணக்கை பெருத்து கொள்ள பார்க்கிறார்களே தவிர திறமையானவர்களை தேடி வாய்ப்பு கொடுக்க மறுக்கிறார்கள்.


இந்நிலை மாறிட வேண்டும்.அத்துடன் இனியாவும் தன் திறமைக்கு ஏற்புடையதான படங்களை தேர்வு செய்து நடித்தால் சந்தோஷம். எதிர் காலத்தில் மக்கள் மனங்கவர் நாயகியாக வர என் வாழ்த்துக்கள்.

வெள்ளி, 7 செப்டம்பர், 2012

அவன் என் காதலன் - தொடர் (அறிமுகம்)

அன்பு மிக்க நண்பர்களே என் தளத்தில் நான் புதிதாக எழுத ஆரம்பிக்கும் நாவல் அமைப்பிலான தொடர் 
”அவன் என் காதலன்” 

இத் தொடர் உண்மை சம்பவம் ஒன்றை தழுவிய கற்பனை தொடராகும்.
இரு தோழிகள் இடையே நடை பெறும் காதல் போராட்டமே அவன் என் காதலன்.

இது நான் அனுபவித்த ஓர் அனுபவ கதை என்று கூறலாம். ஆனால் நாயகிகளில் ஒருவராக என்னை நினைக்க வேண்டாம். எனக்கு தெரிந்த என் தோழிகளுக்கிடையேயான அனுபவம்தான். சரி தொடரை படித்து ஆதரவு தருவீகள் என நம்புகிறேன்.

விரைவில்


புதன், 5 செப்டம்பர், 2012

அன்பின் அன்னையின் நினைவுநாள் (புரட்டாதி 05)
அன்பின் அன்னை என்றாலே நேரடியாக பதில் கூறலாம் அன்னை தெரேசா என்று. அன்பால் உலகையே தன் வசம் ஈர்ந்த அன்னையின் நினைவு நாள் இன்று.

ஜரோப்பிய சமுதாயத்தில் இருந்து இப்படிப்பட்ட பெண் அன்பால் உலகை ஆள புறப்பட்டாள் என்பது அபூர்பமானது அல்ல. ஆனால் இப்படி ஒரு பெண்ணால் சாதிக்க முடிந்தது என்பது அபூர்வத்திலும் அபூர்பமே. நாம் எல்லோரும் இது அன்னை தெரேசாவின் கருணை உள்ளம்தான் அவர் இப்படிபட்ட நற்காரியங்கள் செய்ய காரணம் என்று எண்ணினாலும், அன்னை தெரேசாவின் கூற்றுப் படிஇது இறைவன் யேசுவின் கட்டளை என்றுதான் கூறுவார்.

அல்பேனியா நாட்டிலிருந்து மறை போதக பணிக்காக இந்தியா வந்தவர் அருட்சகோதரி.தெரேசா அன்பை மட்டுமே ஆதாயமாக்கி கொண்டு வாழ்ந்தவர். கொல்கத்தா நகரில் வீதிகளில் அவதியுறும் ஏழைகளுக்கும் ,நோயாளிகளுக்கும் வெளிச்சம் காட்டும் விண்மீனாய் ஆனார். ஆனாலும் இத்தகைய அன்பு மனுஷிக்கு ஆரம்பத்தில் கிடைத்தது வெறும் அவமானங்களும், வசை மொழிகளுமே. பிச்சைகாரர்களை பிச்சை எடுத்து காப்பாற்றியவர் அன்னை தெரேசா.

சோதனைகளை சாதனைகளாக்கி எல்லாவற்றையும் இறைவன் பார்த்து கொள்வார் என்ற நம்பிக்கையில் உருவாக்கப்பட்டதே பிறர் அன்பின் பணியாள் சபை. அதை மையமாக வைத்துக் கொண்டு தான் ஓர் அருட்சகோதரி என்று பெருமை பாராட்டாது வீதியாக, வீடாக சென்று பிச்சை எடுத்து பணம் சேர்த்து வீதியில் ஆதரவு அற்று இருந்த ஏழைகளுக்கு தன் சுயமரியாதையை விற்று உணவளித்தார் இந்த அன்பின் சிகரம்.

”என் ஜனங்கள் ஒரு போதும் வெட்கித்து போவதில்லை" என்ற வேத வார்த்தை படி அன்னை தெரேசா தன் அவமானங்களில் இருந்து மீண்டார். இவரது இறைபணியை பார்த்து பல பெண்கள் இவரது சபையில் இணைந்து அவரைப்போல ஆன்மீகத்திலும் ,துறவிலும் நிலை கொள்ள வந்தார்கள். இச்சகோதரிகளின் இரக்க செயல்களை கண்ணுற்ற பல செல்வந்தர்கள் இவர்களுக்கு உதவ முன்வந்த இந்த அறபணிக்காக பல தானங்களை செய்தனர். அவற்றை ஒரு ரூபாயேனும் தன் சொந்த செவிற்காக பயன்படுத்தாது முழுக்க ஏழை எளிய மக்களுக்கு கொடுத்தார்.

பல முதியோர் இல்லங்களையும், ஆதரவற்றோர் இல்லங்களையும், தொழுநோயாளர் விடுதிகளையும் ஸ்தாபித்து அவர்களுக்கு தன் கையாலேயே உதவினார்.

கிறிஸ்தவ பாரம் பாரியத்தின் படி ஒருவர் இறந்த பின்புதான் புனிதர் நிலை அடைய முடியும் அதுவும் பல கோரிக்கைகள், நிபந்தனைகளிக் பிரகாரம் ஆனால் அன்னை தெரேசா வாழும் போதே புனிதையாக சித்தரிக்கப்பட்டார்.

இவர் செய்த சேவைக்காக உலகு இவருக்கு பல விருதுகள் வழங்கி கௌரவித்த போதும். எவ்வித தற்பெருமையும் கொள்ளாது எல்லாம் இறைவன் தந்ததாகவே கூறுவார்.

இப்படிப்பட்ட அன்னைக்கு இந்திய அரசு தன் குடி உரிமையை வழங்கி தன்னைதானே கௌரவித்து கொண்டது என்றால் யாரும் மறுப்பதற்கு இங்கு இருக்க முடியாது.

இவரை நாம் புகழ்வதால் நமக்கு ஒன்றும் கிடைக்கப்போவது கிடையாது. அவர் காட்டிய அன்பின் பாதையில் நடப்போம் உலகம் எங்களையும் இந்நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அல்ல. நாமும் மனிதர்தான் என்று நிரூபிப்பதற்காகவாவது அவர் காட்டிய அன்பின் பாதையில் நடப்போம்.

இவர் கிறிஸ்தவ மதபோதகர், மறை பணியாளர் என்ற கண்டோம் யாரிடமும் இருக்க முடியாது ஏனெனில் இவர் கிறிஸ்தவர், இந்து என்ற பாகுபாடு பாராது செயற்பட்டவர். இவர் முழு உலகையும் நேசித்தவர்.அதனால்தான் உலகு இவரை இன்றும் வியந்து பார்க்கிறது.

நாமும் மனித நேயத்தோடு நடப்போம் ஒருவருக் கொருவர் எதிர்பாராத அன்பை காட்டுவோம். நாமும் உலகை அன்பால் ஆளுவோம்.செவ்வாய், 4 செப்டம்பர், 2012

பெண் என்பவள்...

சிரம் தாழ்த்த வேண்டியவள் அல்ல
சிரம் தாழந்து வணங்க வேண்டியவள்

துன்பமாம் பூகம்பங்கள் சூழும் வேளை
பூக் கம்பம் இல்லை அவள்

புயலால் வீழ்ந்து போக அவள் மரமில்லை
பூமியே தடம் புரண்டு போனாலும் வெடித்து
முளைக்கும் நாணல் அவள்

தேள் கொட்டும் சமுதாயத்தில் அவள்
தேன் இல்லை

அவள் ஓர் குட்டையில் வாழும் மீனுமில்லை
எப்போதும் ஆண் போடும் துாண்டிலை சேர்வதற்கு

கண்ணீரே காவியமானாலும் கரையாதவள்
எரிந்திடும் கல்லில் சிலை வடிப்பவள்

தாய்மையின் மகத்துவம் அறிந்தவள்
தன் வயிற்றுள் கருவை தன்னை விட
பாதுகாப்பவளே தவிர அதை அழிப்பவள் அல்ல பெண்

நாணத்தால் தலை குனிவாளே அன்றி
வெட்கித்து அல்ல

தீமையை கண்டால் மூழ்குபவளும் அல்ல
விரண்டோடுபவளும் அல்ல
விரட்டி அடிப்பவளே பெண்

இத்தனையும் கொண்டவள் சாதனைப் பெண்திங்கள், 3 செப்டம்பர், 2012

மீண்டும் வந்தேன்.....

என் இனிய தோழமைகளுக்கு வணக்கம் ஏற குறைய ஒரு மாத காலம். என் வீசா தொடர்பான பிரச்சினை காரணமாக. யாழ்ப்பாணம் விட்டு கொழும்பில் தங்கியிருந்ததலால் என் எழுத்துகளுக்கு சற்று ஓய்வு கொடுத்தேன்.

இதனால் பதிவர் சந்திப்பு முதல் பல அரும் பெரும் நிகழ்ச்சிகளை கூட தவறவிட்டு விட்டேன். என் பிரான்ஸ் நாட்டு பயணத்தை கூட என்னும் 03 மாத காலங்களுக்கு தள்ளி வைக்க வேண்டிய சூழ்நிலை.

சரி என் கஸ்டம் என்னோடு.......
தொடர்கிறேன் என் இதய கூக்குரலை...