திங்கள், 10 செப்டம்பர், 2012

அவன் என் காதலன் - 01


கதைக்கு செல்லும் முன்
இக்கதை உன்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது. அதனால் நான் இங்கு பயன்படுத்தும் நபர்களின் பெயர்கள், இடங்களின் பெயர்கள் எல்லாம் என்னால் சித்தரிக்கப்பட்டவை. பிரசுரிக்கப்பட இருக்கும் படங்கள் கூகிளில் இருந்து எடுக்கப்பட்டவை.
கடல் அலைகள் கொஞ்சி விளையாடும், இயற்கை அன்னையின் மிகுந்த அன்பை பெற்ற ஊர்தான் கரையூர். கடற் தொழிலை நம்பி பிழப்பை நடத்துகின்ற குடும்பங்கள் ஏராளம், இதிலும் போக இவர்கள் அனைவருமே கிறிஸ்தவர்கள்.இந்த ஊர் கல்விக்கு எப்போதுமே முதலிடம் தம் பிள்ளைகளை எப்படியாவது படிக்க வைத்து விட வேண்டும் என்பது இவர்களின் விருப்பம்.

இப்படிப்பட்ட ஊரில்தான் தலீமா, செபானி என்ற இரு தோழிகள் வளர்ந்து வருகின்றனர். இவர்களுக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து இவர்கள் இருவருமே இணைபிரியா தோழிகள். இதில் செபானி தனது பன்னிரென்டாவது வயது முதல் தான் ஓர் கன்னியாஸ்திரி ஆக வேண்டும் என்ற ஆசையில் திருக் குடும்ப கன்னியர் மடத்தில் இணைந்து துறவுப் பயிர்ச்சி பெற்று வருகிறாள். தலீமா வீட்டில் இருந்த படி தன் கல்வியை தொடர்கிறாள். இவர்கள் இருவரும் வெளியில் சந்தித்து கொள்ளும் வாய்ப்பு இல்லவே இல்லை. பாடசாலையில் மட்டும் சந்தித்து பேசுவர். செபானி பாடசாலை விடுமுறைக்கு கூட வீட்டுக்கு வருவது கிடையாது. கன்னியர் மடத்திலேயே தங்கி இருப்பாள்.

தலீமா பேச்சால் ஆட்களை கட்டிப் போட வல்லவள், செபானி கன்னியர் மடத்தில் வளர்வதால் என்னவோ பெரிதாக யாரிடமும் பேசிக் கொள்ள மாட்டாள். தானுன்டு தன் வேலையுண்டு என்றிருப்பாள்.
                                                                        தொடரும்...........


                                                                            


7 கருத்துகள்:

 1. ஆர்வத்தை தூண்டும் தொடர்! தொடருங்கள்! நன்றி!

  இன்று என் தளத்தில்!
  பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 8
  http://thalirssb.blogspot.in/2012/09/8.html

  பதிலளிநீக்கு
 2. தவறாமல் எழுதவும்..அப்படியென்றால் தவறாமல் வாசிப்பேன்.

  என்ன ஆச்சு தொடர்பில் இல்லையே.. வலைப்பக்கத்திலும் சரி முகநூலிலும் சரி ஆளைக் காணவில்லையே..

  பதிலளிநீக்கு
 3. சுருக்கமாக முடித்து விட்டீர்களே... தொடருங்கள்...

  பதிலளிநீக்கு
 4. கதை நன்றாக தொடங்குகிறது தொடருங்கள் பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
 5. துவக்கம் அருமை.. தொடர்ந்து கலக்க வாழ்த்துக்கள் சகோ!

  பதிலளிநீக்கு
 6. கதை ஆரம்பம் நல்லா இருக்கு.. வாழ்த்துக்கள்
  அடுத்து டேம்பிலட் ஓகே.. (இன்னும் சிலத மாத்தலாம்.. )

  பதிலளிநீக்கு