புதன், 5 செப்டம்பர், 2012

அன்பின் அன்னையின் நினைவுநாள் (புரட்டாதி 05)
அன்பின் அன்னை என்றாலே நேரடியாக பதில் கூறலாம் அன்னை தெரேசா என்று. அன்பால் உலகையே தன் வசம் ஈர்ந்த அன்னையின் நினைவு நாள் இன்று.

ஜரோப்பிய சமுதாயத்தில் இருந்து இப்படிப்பட்ட பெண் அன்பால் உலகை ஆள புறப்பட்டாள் என்பது அபூர்பமானது அல்ல. ஆனால் இப்படி ஒரு பெண்ணால் சாதிக்க முடிந்தது என்பது அபூர்வத்திலும் அபூர்பமே. நாம் எல்லோரும் இது அன்னை தெரேசாவின் கருணை உள்ளம்தான் அவர் இப்படிபட்ட நற்காரியங்கள் செய்ய காரணம் என்று எண்ணினாலும், அன்னை தெரேசாவின் கூற்றுப் படிஇது இறைவன் யேசுவின் கட்டளை என்றுதான் கூறுவார்.

அல்பேனியா நாட்டிலிருந்து மறை போதக பணிக்காக இந்தியா வந்தவர் அருட்சகோதரி.தெரேசா அன்பை மட்டுமே ஆதாயமாக்கி கொண்டு வாழ்ந்தவர். கொல்கத்தா நகரில் வீதிகளில் அவதியுறும் ஏழைகளுக்கும் ,நோயாளிகளுக்கும் வெளிச்சம் காட்டும் விண்மீனாய் ஆனார். ஆனாலும் இத்தகைய அன்பு மனுஷிக்கு ஆரம்பத்தில் கிடைத்தது வெறும் அவமானங்களும், வசை மொழிகளுமே. பிச்சைகாரர்களை பிச்சை எடுத்து காப்பாற்றியவர் அன்னை தெரேசா.

சோதனைகளை சாதனைகளாக்கி எல்லாவற்றையும் இறைவன் பார்த்து கொள்வார் என்ற நம்பிக்கையில் உருவாக்கப்பட்டதே பிறர் அன்பின் பணியாள் சபை. அதை மையமாக வைத்துக் கொண்டு தான் ஓர் அருட்சகோதரி என்று பெருமை பாராட்டாது வீதியாக, வீடாக சென்று பிச்சை எடுத்து பணம் சேர்த்து வீதியில் ஆதரவு அற்று இருந்த ஏழைகளுக்கு தன் சுயமரியாதையை விற்று உணவளித்தார் இந்த அன்பின் சிகரம்.

”என் ஜனங்கள் ஒரு போதும் வெட்கித்து போவதில்லை" என்ற வேத வார்த்தை படி அன்னை தெரேசா தன் அவமானங்களில் இருந்து மீண்டார். இவரது இறைபணியை பார்த்து பல பெண்கள் இவரது சபையில் இணைந்து அவரைப்போல ஆன்மீகத்திலும் ,துறவிலும் நிலை கொள்ள வந்தார்கள். இச்சகோதரிகளின் இரக்க செயல்களை கண்ணுற்ற பல செல்வந்தர்கள் இவர்களுக்கு உதவ முன்வந்த இந்த அறபணிக்காக பல தானங்களை செய்தனர். அவற்றை ஒரு ரூபாயேனும் தன் சொந்த செவிற்காக பயன்படுத்தாது முழுக்க ஏழை எளிய மக்களுக்கு கொடுத்தார்.

பல முதியோர் இல்லங்களையும், ஆதரவற்றோர் இல்லங்களையும், தொழுநோயாளர் விடுதிகளையும் ஸ்தாபித்து அவர்களுக்கு தன் கையாலேயே உதவினார்.

கிறிஸ்தவ பாரம் பாரியத்தின் படி ஒருவர் இறந்த பின்புதான் புனிதர் நிலை அடைய முடியும் அதுவும் பல கோரிக்கைகள், நிபந்தனைகளிக் பிரகாரம் ஆனால் அன்னை தெரேசா வாழும் போதே புனிதையாக சித்தரிக்கப்பட்டார்.

இவர் செய்த சேவைக்காக உலகு இவருக்கு பல விருதுகள் வழங்கி கௌரவித்த போதும். எவ்வித தற்பெருமையும் கொள்ளாது எல்லாம் இறைவன் தந்ததாகவே கூறுவார்.

இப்படிப்பட்ட அன்னைக்கு இந்திய அரசு தன் குடி உரிமையை வழங்கி தன்னைதானே கௌரவித்து கொண்டது என்றால் யாரும் மறுப்பதற்கு இங்கு இருக்க முடியாது.

இவரை நாம் புகழ்வதால் நமக்கு ஒன்றும் கிடைக்கப்போவது கிடையாது. அவர் காட்டிய அன்பின் பாதையில் நடப்போம் உலகம் எங்களையும் இந்நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அல்ல. நாமும் மனிதர்தான் என்று நிரூபிப்பதற்காகவாவது அவர் காட்டிய அன்பின் பாதையில் நடப்போம்.

இவர் கிறிஸ்தவ மதபோதகர், மறை பணியாளர் என்ற கண்டோம் யாரிடமும் இருக்க முடியாது ஏனெனில் இவர் கிறிஸ்தவர், இந்து என்ற பாகுபாடு பாராது செயற்பட்டவர். இவர் முழு உலகையும் நேசித்தவர்.அதனால்தான் உலகு இவரை இன்றும் வியந்து பார்க்கிறது.

நாமும் மனித நேயத்தோடு நடப்போம் ஒருவருக் கொருவர் எதிர்பாராத அன்பை காட்டுவோம். நாமும் உலகை அன்பால் ஆளுவோம்.4 கருத்துகள்:

 1. சிறப்பான பகிர்வு சகோ... உலகத்திற்கே ஆசிரியர் அவர்...

  தன்னை மெழுகுவர்த்தியாக ஆக்கி வாழ்ந்த / வாழ்கின்ற அனைத்து ஆசிரியர்களுக்கும்...

  ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்... நன்றிகள்...

  பதிலளிநீக்கு
 2. அன்னையை புகழ வார்த்தை இல்லை... நல்ல படைப்பு சகோ

  பதிலளிநீக்கு
 3. தெரசா பற்றிய சிறப்பான பகிர்வு! நன்றி!

  இன்று என் தளத்தில்
  பழஞ்சோறு! அழகான கிழவி!
  http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_5.html

  பதிலளிநீக்கு