வெள்ளி, 14 செப்டம்பர், 2012

அறிந்ததும் அறியாததும் (திருநங்கைகளின் ஜமாத் உறவு முறை)

அன்பர்களே நான் இப்பதிவில் பதியப் போகும் விடயம் பலருக்கு புதிதாக இருக்கலாம்.


திருநங்கைகளுக்கு ஜமாத் என்ற உறவு முறை, பாரம்பரியமாக இருந்து வருவதை நீங்கள் அறிவீர்களா? இந்த உறவுமுறை வட இந்தியாவில் தோன்றியிருக்லாம் என்பது ஜதீகம். மொகலாய வம்சத்தை தோற்று வித்தது ஒரு திருநங்கை அவர் இஸ்லாமிய வழி மரபினர். ஆகையால் இஸ்லாமிய ஜமாத் முறையை திருநங்கையர் சமூக அமைப்பில் அவர் கொண்டு வந்திருக்க கூடும்.திருநங்கையர் ஜமாத் உறவு முறை என்றால் குறிப்பிட்ட தொகுதியினர், எங்கெங்கோ பிறந்து வளர்ந்தவர்கள், உறவுகள் இல்லாதவர்கள், தமக்கென உருவாக்கி கொள்ளும் உறவு முறையே ஜமாத் உறவு முறையாகும். அதாவது திருநங்கையர் தாம் முழு பெண்ணாக மாறும் சடங்கில் ஒரு ஜமாத்தில் இணைகிறார். அந்த ஜமாத்தில் தாயம்மா, குரு, நானி, கோத்தி போன்ற  குழுவுக் குறியால் உறவுகள் அழைக்கப்படும். இவை பாரம்பரியமான உறவு முறையாகும்.. இவற்றில் தாயம்மா என்பவரே அக் குழுவை தலைமை தாங்கி நடத்துவார்.இதை விட அம்மா , சித்தி , அக்கா , தங்கை , பெரியம்மா என அனைத்து பெண் உறவு முறைகளும் அடங்கும்.

உறவுகளால் வெறுக்கப்பட்டவர்கள் தமக்கு தாமே உறவுகளை ஏற்படுத்தி கொள்வதில் தவறொன்றும் இல்லையே...

இந்த ஜமாத் முறை வடக்கில் தோன்றியது என்றாலும் தமிழ் நாடு உட்பட திருநங்கைகள் வாழும் அனைத்துப் பிரதேசங்களிலும் பின்பற்றப்பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது.

[மேலே தந்திருக்கும் இருகாணொளிகளிலும் இவற்றை அறியலாம்...]

7 கருத்துகள்:

 1. நான் அறிந்திராத புதிய தகவலை அறியத் தந்திருக்கிறாய் எஸ்தர். மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 2. இவற்றை நான் அறிந்தது உண்டு ... !!! இந்திய திருநங்கைகள் தமக்கான ஒரு வாழ்க்கை முறையை ஏற்படுத்திக் கொள்ளவே இந்த ஜமாத் முறைகளை வைத்துள்ளார்கள். இதில் குடும்ப பெயர்கள் - குடும்பங்கள் எல்லாமும் கூட உண்டு ..

  பதிலளிநீக்கு
 3. புதிய தகவல் அறிந்து கொண்டேன்! நன்றி!

  இன்று என் தளத்தில்
  சரணடைவோம் சரபரை!
  http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_14.html

  பதிலளிநீக்கு