புதன், 19 செப்டம்பர், 2012

கிசு கிசு எழுத்தாளர்களே உங்களுக்கு ஜயோ கேடு.

என்னங்க இந்த பொண்ணு  இயேசு போல ஜயோ கேடு என்று கத்துறாளே, என்று நினைக்காதீங்க. நான் நியமாவேதான் வயிறு எரிஞ்சு சொல்லுறன். 

ஒருவரைப் பற்றி நாம் பேசும் போது முதல் அது உண்மையான விடயமா? என ஆய்ந்து அறிந்து, பிறகு பேசுவது விரும்பத்தக்கது. சில மகான்கள் கிசு கிசு என்ற பெயரில் தக்களின் கற்பனை திறனை காண்பிக்க முயர்ச்சி செய்கின்றனர். ஒருவர் சந்திக்காத விடயத்தை கூட தாமாகவே சித்தரித்து இது நியமாகவே நடந்தது என்று படிப்பவரை நம்ப வைக்கும் அளவிற்கு இவர்களின் கற்பனை திறன் இருக்கிறது.

கிசு கிசு என்பது உண்மையாக நடந்த ஒரு விடயத்தை வெளிப்படை இல்லாமல் மறைமுகமாக கூறுவது என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்.   
ஆனால் நடக்காத ஒன்றை நடந்தது போல் எழுதினால் அது கிசு கிசு என்றாகிடுமா? இந்த விடயம் சினிமா சம்பந்தமாக எழுதுபவர்களை மட்டுமே சார்ந்து நிற்கிறது (தொப்பி அளவுள்ளோர் போட்டு கொள்ளட்டும்.).

உதாரணமாக அண்மை காலமாக சினிமா உலகில் வலம் வந்த ஒரு விடயத்தை கூறுகிறேன். நடிகை சமந்தா உடல் நல குறைவால் (தோல் நல குறைவால் அல்ல)  இரு மாதங்கள் மருத்துவ சிகிச்சையில் இருந்தார். இதுவே நிஜம் (இது சமந்தாவே ஒரு தொலைக்காட்ச்சிக்கு கூறிய உண்மை.). ஆனால் கிசு கிசு என்ன தெரியுமா? அவருக்கு தோல் வியாதியாம், அது தொற்று நோயும் கூட. போதாத குறைக்கு சங்கரும், மணிரத்னமும் பலி கடா. இப்படி ஒரு செய்தியை யாரோ ஒரு மகான் எழுதியுள்ளார். இதை காப்பி (பிரதி) அடிப்போர் சங்க உறுப்பினர்கள் எல்லாரும் காபபி அடிச்சு முழு உலகிற்கும் பரப்பி விட்டனர். இது ஒரு உதாரணம் மாத்திரம் ஆனால் பல ஆயிர கணக்கானவற்றை கூறலாம்.

எழுத்தாளர்களின் எழுத்துகள் ஒருவரின் எழுச்சிக்கு காரணமாக அமைய வேண்டுமே தவிர வீழ்ச்சிக்கு காரணமாகக் கூடாது. சிந்திப்போம் தெளிவோம்.

11 கருத்துகள்:

 1. இதையும் நாங்க நம்பனுமோ ?

  பதிலளிநீக்கு
 2. எழுத்தாளர்களின் எழுத்துகள் ஒருவரின் எழுச்சிக்கு காரணமாக அமைய வேண்டுமே தவிர வீழ்ச்சிக்கு காரணமாகக் கூடாது.

  எழுத்தாளர்கள் அனைவரும் உணரவேண்டிய வரிகள் சகோதரி.

  பதிலளிநீக்கு
 3. ஆமா சகோ. நாட்டுக்கு ரொம்ப முக்கியமான விஷயம். நடிகைகளைப் பற்றி கவலைப்பட நாட்டில் வேலை வெட்டி இல்லாமல் நிறைய பேர் இருக்கிறார்கள். நீங்களும் எதற்கு வீணாக அவர்களுக்காக உங்கள் நேரத்தை செலவிடுகிறீர்கள்?

  பதிலளிநீக்கு
 4. //எழுத்தாளர்களின் எழுத்துகள் ஒருவரின் எழுச்சிக்கு காரணமாக அமைய வேண்டுமே தவிர வீழ்ச்சிக்கு காரணமாகக் கூடாது. சிந்திப்போம் தெளிவோம்.//

  நல்லா சொன்ன சபி

  பதிலளிநீக்கு
 5. உண்மை நம் தெருவை ஒரு சுத்தி சுத்தி வரும்முன்...பொய் உலகத்தையே ஒரு முறை சுத்திவந்துவிடுகிறது :(

  பதிலளிநீக்கு
 6. திரித்து சொல்வது இயல்பாகிப் போய்விட்டதம்மா..மாற்றிக்கொள்ள மாட்டார்கள்..

  பதிலளிநீக்கு
 7. நல்லதொரு கருத்து! நானும் இப்படி கிசு கிசுக்களை காப்பி பேஸ்ட் செய்தவன் தான்! இப்போது மாற்றிக் கொண்டுள்ளேன்! பகிர்வுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு