செவ்வாய், 25 செப்டம்பர், 2012

ஏழை மீனவர் கூக்குரல்
கடலம்மா எமக்கோர் கதி சொல்லு
தஞ்ஞம் நீயே நம்பி வந்தோம் 
வழி சொல்லு.

ஊர் உறங்கும் சாமமதில்
படகு தள்ளி 
நங்கூரம் ஏத்தி
நடுங்கும் குளிர் என கூட 
பாராது..
உன் மீது பயணம் 
தொழில் செய்ய வந்தோம்

காற்றடிக்கும் புயலடிக்கும்
அலைகளோடு மாபெரும் 
யுத்தம்
இத்தனையும் பட்டும்
கொண்டு வருவோம் 
ஒரு சில மீனே

நடுக்கடலதில் அலையோடு
படகும் சேர்ந்தால்
மறு கரைதனில்
சடலங்களாவோம்.

இத்தனையும் போதாதா
நேவியின் துப்பாக்கி சூடும்
கல்லெறிகள் தடியடிகளும்
தாங்குகின்றோம்.

அரசும் இதற்கோர் விடை 
கூறவில்லை 
அரசிற் கெல்லாம் அரசாம்
இறையும் எமக்கோர் 
விடை கூட கூறவில்லை
எப்போது தீருமோ - இந்த
ஏழை மீனவர் கூக்குரல்.

5 கருத்துகள்:

 1. மீனவர்களின் நிலை பரிதாபத்திற்குரியதாய் இருக்கிறது..அரசு மெத்த்னமாய்த்தாய் செயல்படுகிறது..

  பதிலளிநீக்கு

 2. மீனவர்களில் அவல நிலை பெற்றிய கவிதை
  அருமை சபி

  பதிலளிநீக்கு
 3. அரசாங்கங்களின் மெத்தன போக்கு கவலைக்குரியது..கண்டிக்கத்தக்கது!

  பதிலளிநீக்கு