செவ்வாய், 4 செப்டம்பர், 2012

பெண் என்பவள்...

சிரம் தாழ்த்த வேண்டியவள் அல்ல
சிரம் தாழந்து வணங்க வேண்டியவள்

துன்பமாம் பூகம்பங்கள் சூழும் வேளை
பூக் கம்பம் இல்லை அவள்

புயலால் வீழ்ந்து போக அவள் மரமில்லை
பூமியே தடம் புரண்டு போனாலும் வெடித்து
முளைக்கும் நாணல் அவள்

தேள் கொட்டும் சமுதாயத்தில் அவள்
தேன் இல்லை

அவள் ஓர் குட்டையில் வாழும் மீனுமில்லை
எப்போதும் ஆண் போடும் துாண்டிலை சேர்வதற்கு

கண்ணீரே காவியமானாலும் கரையாதவள்
எரிந்திடும் கல்லில் சிலை வடிப்பவள்

தாய்மையின் மகத்துவம் அறிந்தவள்
தன் வயிற்றுள் கருவை தன்னை விட
பாதுகாப்பவளே தவிர அதை அழிப்பவள் அல்ல பெண்

நாணத்தால் தலை குனிவாளே அன்றி
வெட்கித்து அல்ல

தீமையை கண்டால் மூழ்குபவளும் அல்ல
விரண்டோடுபவளும் அல்ல
விரட்டி அடிப்பவளே பெண்

இத்தனையும் கொண்டவள் சாதனைப் பெண்



9 கருத்துகள்:

  1. பெண்ணை போற்றும் சிறப்பான வரிகள்...

    நடுவில் சில வரிகள் மிகவும் அருமை :

    /// தேள் கொட்டும் சமுதாயத்தில் அவள்
    தேன் இல்லை ///

    வாழ்த்துக்கள் சகோதரி...

    பதிலளிநீக்கு
  2. ம்ம்ம்... சாதனையாளர்கள் பெருக வேண்டும். அருமை.

    பதிலளிநீக்கு
  3. இந்த டெம்ப்ளேட் நல்லா இருக்கு சகோ, எல்லாத்தையும் வாசிப்பதற்கு கண்களை உருத்தாதவாறு எளிமையாகவும் இருக்கிறது!

    BTW, கவிதை அருமை!

    பதிலளிநீக்கு
  4. பெண்ணை சிறப்பிக்கும் சிறப்பான எழுச்சி வரிகள்! அருமை!

    இன்று என் தளத்தில்
    பேய்கள்ஓய்வதில்லை!பகுதி7
    http://thalirssb.blogspot.in/2012/09/7.html

    பதிலளிநீக்கு
  5. /// நாணத்தால் தலை குனிவாளே அன்றி
    வெட்கித்து அல்ல////
    வரிகள் மிகவும் அருமை..!!!

    வலைச்சரம் வாயிலாக கவிகளை வாசிக்க வந்தேன் ...!!!

    தொடர வாழ்த்துக்கள் ...!!!

    பதிலளிநீக்கு