சனி, 8 செப்டம்பர், 2012

இனியா தமிழ் சினிமாவுக்கு கிடைத்த வரம்.


”சினிமா” எத்துறை சார்ந்தோனும் இத்துறையில் இன்பமுறுவர். சினிமா என்பது பல்கலைக் கழகம். பல துறைகள் ஒன்றித்து சினிமாவை உருவாக்குகிறது. இதில் பெண்களின் பங்களிப்பு மிகவும் இன்றியமையாதது. நடிப்பை மட்டும் நம்பியே கறுப்பு வெள்ளை நாயகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால் இந்த டியிட்டல் காலத்தில் கவர்ச்சியை நம்பியே நாயகிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

அந்த வகையில் இயக்குனர் சற்குணத்தை நான் பாராட்டியே ஆக வேண்டும். ”வாகை சூட வா” என்ற திரை காவியம் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஓர் நம்பிக்கை ஒளி விளக்கை காட்டியமைக்கு. முதல் படமே தேசிய விருது பெற்ற திரைப்படம். இதை விட வேறென்ன வேண்டும் இனியாவுக்கு.

தன் நடிப்பால் ஒட்டுமொத்த தமிழ் உலகையும் தன்னை ஒருமுறை பார்க்குமாறு அழைத்தார்.

அதை தொடர்ந்து மௌன குரு திறமைக்கு ஏற்ற கதா பாத்திரம் இல்லை எனினும் அத்திரைப்படமும் டாப்புதான். 

ஆனாலும் இவருக்கு தமிழ் சினிமாவின் அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்றே நான் கூறுவேன்.இதை தற்போது நடந்து முடிந்த திரைப்பட விழாக்களை கொண்டே நான் கூறுகிறேன்.

விருதுகள் என்பது திறமையின் அடிப்படையில் வழங்கப்படவேண்டுமே தவிர ஆள் பார்த்தும் , முகம் பார்த்தும் வழங்கப்பட கூடாது. ஆனால் அதுதான் இங்கு நடந்தேறியது. 

திறமை படைத்தவர்களை திறமை படைத்தவர்கள் கையாளும் போது அதில் வெற்றி உறுதி. இயக்குனர்கள் கவர்ச்சி நாயகிகளுக்கு வலை வீசி தம் வங்கி கணக்கை பெருத்து கொள்ள பார்க்கிறார்களே தவிர திறமையானவர்களை தேடி வாய்ப்பு கொடுக்க மறுக்கிறார்கள்.


இந்நிலை மாறிட வேண்டும்.அத்துடன் இனியாவும் தன் திறமைக்கு ஏற்புடையதான படங்களை தேர்வு செய்து நடித்தால் சந்தோஷம். எதிர் காலத்தில் மக்கள் மனங்கவர் நாயகியாக வர என் வாழ்த்துக்கள்.

5 கருத்துகள்:

 1. இனியவின் நடிப்பில் "சர சர சாரகாத்து" என்கிற பாடல் எனக்கு மிகவும் பிடித்தமான பாடல், நல்ல நடிப்பு திறன் கொண்ட நடிகை... நல்ல எதிர்காலம் உண்டு..

  பதிலளிநீக்கு
 2. நீங்க சொல்லித் தாங்க தெரியும்... நன்றி...

  Anyway வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 3. இனியா - பேரை கேட்கும்போதே இனிக்குதில்ல!

  பதிலளிநீக்கு
 4. நல்ல நடிகைகள் இப்படி காணாமல் போவது வருத்தம்தான்!

  இன்று என் தளத்தில்
  ஏன் என்ற கேள்வியும்! அதிசயத் தகவல்களும்
  http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_9.html
  நூறாவது பாலோவரும்! கொன்றைவானத் தம்பிரானும்!
  http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_6325.html


  பதிலளிநீக்கு