திங்கள், 3 டிசம்பர், 2012

ரேவதி அம்மா....

மிக நீண்ட நாள் இடை வேளையின் பின் என் பிளாகர் உலகிற்குள் கால் பதித்துள்ளேன். தோழர்களே தயவு கூர்ந்து என்னை மன்னித்து விடுங்கள்.

நான் இது வரைக்கும் பல எழுத்தாளர்களின் நுால்களை படித்துள்ளேன். சிலரின் எழுத்துக்கள் என் வாழ்க்கைக்கு திருப்பு முனையாக அமைந்திருந்தது. உதாரத்திற்கு ஆங்கில எழுத்தாளர் ஜேம்ஸ் ஆலனின் ஆத்மாவின் கதறல் நுாலினை குறிப்பிடலாம். ஆனால் இது வரைக்கு இரண்டாம் பெண் வர்கத்தை (திருநங்கைகள்) சார்ந்தவர்கள் எழுதிய நுால்களை படிக்க வாய்ப்பே கிடைக்கவில்லை. அவர்கள் எழுத்துக்களில் உள்ள வலிகளை புத்தக விமசகர்கள் தங்கள் பிளாக்கரில் விமர்சித்ததை வைத்து அறிந்தேன் அதிலிருந்து எப்படியாவது படித்து விடவேண்டும் அந்த புத்தகங்களை என்று எனக்கு பேராசை இருந்தது.


இவற்றில் கூட திருநங்கை ரேவதி அம்மா எழுதிய  “உணர்வும் உருவமும்“ என்னை பெரும்பாலும் ஈர்த்தது. இந்த புத்தகத்தை இலங்கையில் தேடாத இடமே கிடையாது.

இப்புத்தகத்தை எப்படியாவது படித்துவிடும் ஆவலில் இருந்த போதுதான் முகபுத்தகத்தில் ரேவதி அம்மாவுடைய ரசிகர் பக்கத்தை கண்டேன். அதற்கு விருப்பத்தை கொடுத்து விட்டு ஒரு குறுஞ் செய்தியையும் அனுப்பினே். அதற்கு அந்த பக்கத்தை நடத்தும சகோதரி எனக்கு சல்ல பதிலை தந்தார். ரேவதி அம்மாவுடைய தொலைபேசி இலக்கத்தை கூட எனக்கு கொடுத்தார். நேரம் தாமதியாமல் உடனே தொடர்பு கொண்டு பேசினேன். அவர் எனக்கு தன்னுடை அடுத்த வெளியீடான வெள்ளை முடி புத்தகத்தை தபால் மூலம் அனுப்புவதாக கூறினார் மிக்க சந்தோஷம் எனக்கு . இப்போதுதான் காத்திருந்ததற்கு பதில் கிட்டியது.

ரேவதி அம்மாவை பற்றி சொல்ல வேண்டும் என்றால்.......                                          நான் பேசியதிலிருந்து அவர் பழகுவற்கு இலகுவானவர். இவர் சநதோஷ் சிவன் இயக்கத்தில் வெளியான நவரசா திரைப்படம் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார் பின் தெனாவெட்டு திரைப் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருப்பார். இவர் நடிகை, எழுத்தாளர். சிறந்த சமூக நல ஆர்வலர்.

--- எஸ்தர் சபி----