வியாழன், 18 பிப்ரவரி, 2016

சாதிக்க பிறந்தவர்கள் - திருநங்கை ஸ்வேதா

இன்று பல வழிகளிலும் திருநங்கைகள் ஏதோ ஒரு விதத்தில் சாதித்து கொண்டே வருகிறார்கள்.சமூகத்தின் ஏளன பார்வையும் பேச்சுக்களையும் தாண்டி எழுத்து,அரசியல்,மருத்துவம்,திரைப்படத்துறை என்று ஏதோ ஒரு விதத்தில் அவர்களின் இருபை தக்க வைத்து சாதித்து காட்டி வருகின்றனர்
அந்த வகையில் சமூக சேவையில் தன்னை இணைத்து கடந்த மூன்று வருடங்களாக பல விதமான சோதனைகள், ஏளனங்கள், சாடல்கள் எல்லாவற்றையும் கடந்து சாதித்து காட்டியுள்ளார் திருநங்கை ஸ்வேதா வாழ்வே போராட்டாமாகிய போதும் தன் அமைதிப் புன்னகையில் அவற்றை உடைத்து சோதனைகளை சாதனைகளாக்கி சாதித்த அற்புதவரத்தி இவர். இவரால் ஆரம்பிக்கப்பட்டு இன்று தன் மூன்று அகவைகளையும் தாண்டி தன் சேவையை மாற்றுப்பாலினத்தவர் முதல் மாற்றுத்திறனாளிகள் வரை நிறைவேற்றி வருகின்றது சாத்திக்க பிறந்தவர் (Bron2win) தொண்டு நிறுவனம்.
இந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலம் பயனடைந்த திருநங்கைகள், பெண்கள், மாற்றுதிறனாளிகள் ஏராளம். ஸ்வேதாவின் சேவை மனபாங்கை கண்டு அவரோடு தன்னை இணைத்துக் கொண்ட சமூக ஆர்வலர்கள் பலர்.
எந்தவொரு தனி எதிர்பார்ப்பும் இல்லாமல் தன் சேவையை நிறைவேற்றி வருகின்றார். சாதிக்க பிறந்தவர்கள் தொண்டு நிறுவனத்தால் வருடம் தோறும் நாட்காட்டி வெளியிடப்படும். நாட்காட்டியை ஆளுக்காள் வெளியிடுறாங்க தானே என்று நினைக்க வேண்டாம். இதில் என்ன பிரதானம் என்றால் இந்த நாட்காட்டி திருநங்கைகளின் புகைப்படங்களை தாங்கி அவர்களை பாத்திர பொருளாய் கொண்டு அவர்களின் சாதனைகளை பாராட்டும் விதமாக இந்த நாட்காட்டிகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதையும் ஓர் சாதனையாக்கி சாதித்துள்ளார் ஸ்வேதா.
தான் மட்டும் சாதித்து காட்டியது இல்லாமல் வளர்ந்து வரும் இளம் திருநங்கை சாதனையாளர்களுக்காக சாதிக்க பிறந்தவர்கள் அமைப்பின் மூலம் வருடம் தோறும் விருதுகள் வழங்கி கௌரவிக்கும் சிறப்பான நிகழ்வும் இடம்பெற்று வருகின்றது. இது சாதனையாளர்களுக்கு வளர்ச்சி படிகட்டாகவும் இன்னும் சாதிக்க துடிப்போர்க்கு ஊந்து சக்கியாகவும் இருக்கின்றது.
இவ்வாறு தொடர்ந்து இவர் சேவை நம் சமூகத்திற்கு தேவை. தானும் சாதித்து மற்றவர்களையும் சாதிக்க வைக்கும் மனம் இவரின் தனி பண்பு. என்றும் வெற்றி பெற என் வாழ்த்துக்கள். ஸ்வேதாவுக்கும் அவரின் சாதிக்க பிறந்தவர்கள் அமைப்பிற்கும்
***ஈழநிலா***


செவ்வாய், 16 பிப்ரவரி, 2016

மீண்டும் வந்தேன்

வணக்கம் உறவுகளே மிக நீண்ட இடைவேளையின் பின் உங்கள் எல்லோரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. வாழ்வின் பல போராட்டங்கள் கண்ணீர்களை அடுத்து. எஸ்தர் இப்போது ஈழநிலாவாக இதயம் பேசுகிறது இப்போது நிலாவின் புலம்பலாக உருமாறி சந்திக்கிறது. மீண்டும் என் எழுத்துக்கள் இணையத்தில் உலாவர இருக்கிறது. உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன்.

அன்புடன் - ஈழநிலா