புதன், 2 நவம்பர், 2016

அன்று களத்திலவன் இன்று மூலையில் இவள்


காதலனை களத்திலே
அனுப்பிவிட்டு காதை
சிதறடித்துப் போகும்
சன்னச் சத்தங்களில் தன்
பிராணனை ஏத்தி இறக்கி
எறிகணைகள் சிதறும் வேளை
தன் உயிரை காலனிடம்
கொடுத்து வாங்கிய
தமிழச்சியர்
உயிர் பயமின்றி துணிந்து
நின்றதே அவன்
மரண சேதி அறிந்துதான்

வித்துடலை காணாத கண்கள்
எதற்கு
அவன் புதையுண்ட மண் வாசனை
நுகரா மூக்கெதற்கு
பூவுடலை தாங்காத கைமெதற்கு
உத்தமன் கரு சுமக்கா வயிறும்
எதற்கு
அவன் திசை நோக்கி நடக்கா
காலெதற்கு
அவனை சுமந்து இன்று
மட்டும் வாழும் இதயம்
போதும் என

மூலையில் முடங்கி கிடக்கும்
ஒரு போராளியின் காதலி
ஈழநிலா